முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. 1.4.2010 அன்று பற்பல கடனாளிகள் ரூ.19,500. 31.3.2011 அன்று கடனாளிகள் ரூ.29,900. அவ்வாண்டு கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ.39.6000 எனில், அவ்வாண்டில் கடன் விற்பனை:

    (a)

    ரூ.30,000

    (b)

    ரூ.39,600

    (c)

    ரூ.50,000

    (d)

    ரூ.26,4000

  2. இறுதி முதலுக்கும் மற்றும் தொடக்க முதலுக்கும் இடையேயான வேறுபாடு _______ கருதப்படலாம்.

    (a)

    இலாபமாகக் 

    (b)

    நட்டமாகக் 

    (c)

    இவை இரண்டும் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  3. ஒரு குறிப்பிட்ட நாளைய சொத்துகள் மற்றும் பொறுப்புகள் இருப்பைக் காட்டுகின்ற ஒரு அறிக்கை ________ ஆகும்.

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (c)

    நிலை அறிக்கை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  4. ஆண்டுத் தொடக்கத்தில் நிலை அறிக்கையைத் தயாரிப்பதன் மூலம் ______ முதலை அறியலாம்.

    (a)

    தொடக்க 

    (b)

    இறுதி 

    (c)

    இவை அனைத்தும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. ஒரு நிலை அறிக்கை ________ போன்று தோற்றமளிக்கும்.

    (a)

    வியாபாரக் கணக்கு 

    (b)

    இலாபநட்டக் கணக்கு 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    இருப்பாய்வு 

  6. 5 x 2 = 10
  7. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  8. பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கினைத் தயாரித்து கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டினைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    தொடக்க பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000
    இறுதி பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000
    மாற்றுச்சீட்டிற்கான ரொக்கம் பெற்றது 60,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 5,000
  9. பின்வரும் தகவல்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும். 

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 2,20,000
    2018, டிசம்பர் 31 அன்று முதல் 1,80,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 40,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 50,000
  10. முழுமை பெறா பதிவேடுகள் என்றால் என்ன?

  11. இரட்டைப்பதிவு முறை பின்பற்றாத போது சிறிய அளவிலான தனிவணிகர் பொதுவாக பராமரித்து வரும் கணக்குகளைத் தருக.

  12. 5 x 3 = 15
  13. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  14. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2017, ஏப்ரல் 1 அன்று பற்பல கடனீந்தோர் 75,000
    2017, ஏப்ரல் 1 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 60,000
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 3,70,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு செலுத்தியது 1,00,000
    கொள்முதல் திருப்பம் 15,000
    ரொக்கக் கொள்முதல் 3,20,000
    2018, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 50,000
    2018, மார்ச் 31 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000
  15. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 40,000
    2019, மார்ச் 31 அன்று முதல் 50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 7,000
    அவ்வாண்டின் இலாபம் 8,000
    அவ்வாண்டில் எடுப்புகள் ?
  16. ராஜு முறையான கணக்கேடுகளைப் பின்பற்றுவதில்லை. அவருடைய பதிவேடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

    விவரம் 1.1.2018
    ரூ.
    31.12.2018
    ரூ.
    கைரொக்கம் 80,000 90,000
    சரக்கிருப்பு 1,80,000 1,40,000
    கடனாளிகள் 90,000 2,00,000
    பற்பல கடனீந்தோர் 1,30,000 1,95,000
    வங்கிக் கடன் 60,000 60,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000 45,000
    பொறி மற்றும் இயந்திரம் 1,70,000 1,70,000

    அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 50,000 மற்றும் அவர் வியாபாரத்திலிருந்து தன்னுடைய சொந்த பயனுக்காக மாதந்தோறும் ரூ. 2,500 எடுத்துக்கொண்டார். மேற்கண்ட தகவல்களிலிருந்து இலாப நட்ட அறிக்கை தயாரிக்கவும்.

  17. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 2,50,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 15,000
    2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 60,000 உள் திருப்பம் 50,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 7,25,000 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் 1,60,000 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் 2,40,000
    வாராக்கடன் 30,000 ரொக்க விற்பனை 3,15,000
  18. 4 x 5 = 20
  19. திரு.ராஜேஷ் ஒற்றைப் பதிவு முறையில் தனது கணக்கேடுகளை வைத்திருக்கிறார். அவர் கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறார்.

    1.4.2018 அன்று முதல் 4,80,000
    31.3.2018 அன்று முதல்  5,40,000
    நிதியாண்டில் எடுப்பு  1,50,000
    நிதியாண்டில் கூடுதல் முதல்  90,000
    திரு.ராஜேஷ் 2018-19 ஆம் ஆண்டில் அடைந்த இலாபம் அல்லது நட்டம் கணக்கிடுக   
  20. திருமதி ரேவதி ரூ.1,20,000 முதலுடன் 1.4.2003 அன்று தொழில் தொடங்கினார் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வீதம் தன் சொந்த செலவிற்கு எடுத்துக் கொண்டார். அவர் ரூ.20,000 கூடுதல் முதலாக இட்டார் அவருடைய 31.3.2004 அன்றைய நிலை கீழே தரப்பட்டுள்ளது.

      ரூ.
    வங்கி இருப்பு 8,000
    சரக்கிருப்பு  80,000
    பற்பல கடனாளிகள்  50,000
    அறைகலன்  2,500
    கை ரொக்கம்  2,000
    பற்பல கடனீந்தோர்  25,000
    கொடுபட வேண்டிய செலவுகள்  1,000

    அவர் தனது கணக்குகளை ஒற்றைப்பதிவு முறையில் பராமரித்து வருகிறார். 2003-04 ஆம் ஆண்டிற்கான அவரது இலாபம் அல்லது நட்டம் கண்டறிக.

  21. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.

    விவரம்  தொடக்க இருப்பு 
    ரூ.
    இறுதி இருப்பு 
    ரூ.
    கடனாளிகள்  60,000 55,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு  5,000 1,000
    கடனீந்தோர்  25,000 28,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு  2,000 3,000
        ரூ.
    பிற தகவல்கள்    1,30,000
    கடனாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது    1,30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி    5,500
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம்    70,000
    சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி    3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது    7,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது    14,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது    1,200
    வாராக்கடன்    3,500
  22. மளிகை வியாபாரம் நடத்திவரும் சுந்தரம் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்த்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

    விவரம்  1.4.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    பொறி மற்றும் இயந்திரம்  20,000 20,000
    சரக்கிருப்பு  9,000 16,000
    பற்பல கடனாளிகள்  2,000 5,300
    பற்பல கடனீந்தோர்  5,000 4,000
    வங்கி ரொக்கம்  4,000 6,000

    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:

    விவரம்  ரூ.
    விளம்பரம்  4,700
    உள்தூக்குக் கூலி  8,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்  64,000
    எடுப்புகள்  2,000

    அவ்வாண்டின் மொத்த விற்பனை ரூ.85,000. கொள்முதல் திருப்பம் ரூ.2,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ.1,000. பொறி மற்றும் இயந்திரம் மீது 5% தேய்மானம் நீக்கவும்  ரூ.300 ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்க வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும். 

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Accounts From Incomplete Records Model Question Paper )

Write your Comment