கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கூட்டாண்மை உடன்பாடு இல்லாதபோது கூட்டாளிகளுக்கு

    (a)

    ஊதியம் அளிக்கப்படும்

    (b)

    ஊதியம் அளிக்கப்படமாட்டாது 

    (c)

    நிறுவனத்திற்காக உழைத்தவர்களுக்கு சம்பளம் அளிக்கப்படும்

    (d)

    இலாபம் அளிக்கப்படமாட்டாது

  2. ஒரு நிறுவனத்தில் A, B ஆகிய கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மற்றும் நடப்புக் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. B கொண்டுவரும் கூடுதல் முதல் பதியப்படுவது.

    (a)

    B யின் நடப்புக் கணக்கு

    (b)

    B யின் முதல் கணக்கு

    (c)

    B யின் நடப்புக் கணக்கு அல்லது முதல் கணக்கு

    (d)

    A யின் முதல் கணக்கு

  3. ________ என்பது கூட்டாளிகளுக்கிடையேயான உடன்படிக்கையின் விதிகளை உள்ளடக்கிய எழுதுவடிவிலான ஒரு ஆவணம் ஆகும்.

    (a)

    கூட்டாண்மை ஒப்பாவணம்

    (b)

    கூட்டாண்மை உடன்பாடு

    (c)

    இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  4. தனியாள் வணிகத்தில் இலாபநட்டக் கணக்கில் உள்ள இலாபம் அல்லது நட்டம், தனியாள் வணிகரின் ______ கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படுகிறது.

    (a)

    சொத்து

    (b)

    முதல்

    (c)

    எடுப்பு

    (d)

    கடனாளிகள்

  5. _______ கணக்கு இலாபநட்டக் கணக்கின் நீட்டிப்பாகும்.

    (a)

    இலாபநட்டப் பகிர்வு

    (b)

    வியாபாரக்

    (c)

    முதல்

    (d)

    எடுப்பு

  6. 5 x 2 = 10
  7. சந்தோஷ் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    பிப்ரவரி 1 2,000
    மே 1 10,000
    ஜுலை 1 4,000
    அக்டோபர் 1 6,000

    எடுப்புகள் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும். 

  8. 2018 ஆம் ஆண்டில் மேத்யூ என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.20,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  9. கூட்டாண்மை பொருள் தருக.

  10. முதல் மீதான வட்டி என்றால் என்ன?

  11. வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. சந்தோஷ் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    பிப்ரவரி 1 2,000
    மே 1 10,000
    ஜுலை 1 4,000
    அக்டோபர் 1 6,000

     பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  14. கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகளை எழுதுக.

  15. குறிப்பு வரைக:
    (i) கூட்டாளிகளின் முதல் கணக்கு
    (ii) கூட்டாளிகளின் நடப்பு கணக்கு

  16. முதல் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  17. எடுப்புகள் மீதான வட்டியை கணக்கிடும் முறைகளை எழுதுக.

  18. 4 x 5 = 20
  19. பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தினி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.

    விவரம் சாந்தினி
    ரூ.
    சுமதி
    ரூ
    2018, ஜனவரி 1 அன்று முதல் 2,00,000 1,80,000
    2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 15,000 13,000
    2018, ஜூன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது 20,000 18,000
    2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 40,000 18,000
    எடுப்புகள் மீது வட்டி 1,500 1,300
    2018 - ல் இலாபப் பங்கு 20,000 18,000
    முதல் மீது வட்டி 9,300 7,400
    ஊதியம்  9,000  
    கழிவு   2,200
  20. அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    மார்ச் 1 8,000
    ஜூன் 1 6,000
    செப்டெம்பர் 1 4,000
    டிசம்பர் 1 3,000

    பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்

  21. நிலா மற்றும் மாதுரி இருவரும் கூட்டாளிகள், நிலா ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் ரூ.60,000 எடுத்துக்கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 4, 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி முறையைப் பயன்படுத்திக் கணக்கிடவும்

  22. முரளி மற்றும் சேது இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள், முரளி, கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். சேது, கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.2,20,000 முரளி மற்றும் சேதுவிற்கு கழிவினைக் கண்டுபிடிக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Accounts Of Partnership Firms-fundamentals Model Question Paper )

Write your Comment