கூட்டாளி சேர்ப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு புதிய கூட்டாளி நிறுவனத்திற்கு ________ கொண்டுவர வேண்டும்.

    (a)

    முதல்

    (b)

    சொத்து

    (c)

    பொறுப்பு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  2. ஒரு கூட்டாளியைச் சேர்க்கும் போது பொதுவாக கூட்டாளிகளின் ________ உரிமைகளில் மற்றம் ஏற்படுகிறது

    (a)

    முதல்

    (b)

    பரஸ்பர

    (c)

    காப்பு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  3. ஒரு புதிய கூட்டாளியைச் சேர்ப்பது என்பது, சட்டப்படி பழைய கூட்டாண்மை _________ ஆகும்.

    (a)

    கலைப்பு

    (b)

    முறிவு

    (c)

    இரண்டும்

    (d)

    இவை எதுவுமில்லை

  4. ஒரு புதிய கூட்டாளியைச் சேர்க்கும் பொழுது _________ இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிட வேண்டும்.

    (a)

    பழைய

    (b)

    புதிய 

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. மறுமதிப்பீடு நற்பெயர் முறையில், பழைய இலாபப் பகிர்வு விகித அடிப்படையில் பழைய கூட்டாளிகளின் _________ கணக்குகளில் வரவு வைத்து, நற்பெயரில் தோற்றுவிக்கப்படும்

    (a)

    முதல்

    (b)

    இலாப நாட்ட

    (c)

    சொத்து

    (d)

    கடன்

  6. 5 x 2 = 10
  7. மகேஷ் மற்றும் தனுஷ் என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் அருண் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அருண் தன்னுடைய பங்கை மகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரு கூட்டாளிகளிடமிருந்தும் சம விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  8. விமல் மற்றும் ஆதி என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜெயம் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  9. ஆனந்த் மற்றும் சுமன் என்ற கூட்டாளிகள், இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் சரண் என்பவரை 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஆனந்திடமிருந்து பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

  10. இராஜா மற்றும் இரவி என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இராம் என்பவரை ¼ இலாபப் பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். இராம், 1/20 பங்கினை இராஜாவிடமும், 4/20 பங்கினை இரவியிடமும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  11. அபர்ணா மற்றும் ப்ரியா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். பிருந்தா 1/5 இலாபப் பங்கிற்கு கூட்டாண்மையில் சேருகிறார். அவர் தமது நற்பெயர் பங்காக ரூ.10,000 கொண்டுவருகிறார். கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மாறுபடும் முதல் முறையில் கணக்கிடப்படுகிறது. கூட்டாளிகள் தமது நற்பெயர் தொகை முழுவதையும் எடுத்துக்கொண்டனர். இதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  12. 5 x 3 = 15
  13. இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3.2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
    (அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
    (ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
    (இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.

  14. கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை?

  15. சொத்துகள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்வதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் யாவை?

  16. நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.

  17. முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக

  18. 4 x 5 = 20
  19. அமலா, விமலா என்ற ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகளின் முறையே 5 : 3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். 1.4.2004 அன்று ஏடுகளில் காப்பு நிதி 48,000 ஆகக் காட்டுகிறது. அதே நாளில் கோமளா என்பவரைச் சேர்க்க முடிவெடுத்தனர் குறிப்பேட்டுப்பதிவு தருக

  20. M, G என்ற கூட்டாளிகள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து கொள்கின்றனர். L என்ற புதிய கூட்டாளியைச் சேர்ப்பதை முன்னிட்டு, அவர்கள் அந்நிறுவனத்தின் சொத்துக்களையும், பொறுப்புகளையும் பின்வருமாறு மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்கின்றனர்.
    (அ) ஏடுகளில் பதிவுறா முதலீடுகள் ரூ.12,000 ஐ இப்பொலுது பதிவுசெய்ய வேண்டும்
    (ஆ) சரக்கிருப்பு மதிப்பை ரூ.3,000ம் , அறைகளின் மதிப்பை ரூ,1000 ம் எந்திரத்தின் மதிப்பை ரூ.5,000 ம் குறைக்க வேண்டும்.
    (இ) கொடுக்கப்படாமலுள்ள பொறுப்புகளுக்கு ரூ.4,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும். குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கு காட்டிடுக.

  21. ரஹீம் மற்றும் கோகுல் என்ற இரு கூட்டாளிகள் 5 : 3 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜான் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். ஜான் ரஹீமிடமிருந்து 1/5 பங்கும், கோகுலிடமிருந்து 1/5 பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்

  22. அமீர் மற்றும் ராஜா என்ற கூட்டாளிகளின் இலாபப் பகிர்வு விகிதம் 3 : 2 : 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துக்கள் ரூ.
    முதல் கணக்குகள்:     இயந்திரம் 60,000
      அமீர் 80,000   அறைகலன்  40,000
      இராஜா 70,000 1,50,000 கடனாளிகள் 30,000
    காப்பு நிதி   15,000 சரக்கிருப்பு 10,000
    கடனீந்தோர்   35,000 முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு 40,000
          வங்கி ரொக்கம் 20,000
        2,00,000   2,00,000

    ரோஹித் என்பவர் புதிய கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் எதிர்கால இலாபத்தில் தன்னுடைய 1/5 பங்கிற்காக ரூ.30,000 முதலாகக் கொண்டு வந்தார். அவர் நற்பெயரில் தன்னுடைய பங்காக ரூ,10,000 கொண்டுவந்தார்.
    பின்வருமாறு மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டது
    (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
    (iii) இயந்திரம் மதிப்பு ரூ.80,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது
    தேவையான பேரேட்டு கணக்குகள் தயார் செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Admission of a Partner Model Question Paper )

Write your Comment