நிறுமக் கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. அழைக்கப்பட்டும், செலுத்தப்படாமல் உள்ள தொகை எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    அழைப்பு முன் பணம் 

    (b)

    அழைப்பு நிலுவை 

    (c)

    மிகை ஒப்பம் 

    (d)

    குறுமப் பங்கொப்பம் 

  2. வாங்குவதற்கென வெளியிடப்பட்ட அங்கீகரித்த முதலின் ஒரு பகுதி _______ ஆகும்.

    (a)

    ஒப்பிய முதல் 

    (b)

    அங்கீகரிக்கப்பட்ட முதல் 

    (c)

    செலுத்தப்பட்ட முதல் 

    (d)

    வெளியிட்ட முதல் 

  3. இரண்டு அழைப்புகளுக்கிடையே _______ இடைவெளி இருக்க வேண்டும்.

    (a)

    ஒரு மாத கால 

    (b)

    மூன்று மாத கால 

    (c)

    ஆறு மாத கால 

    (d)

    ஒரு வருட கால 

  4. ஒறுபிழப்பு செய்யப்பட்ட பங்குகள் நிறுமத்தால் _________ செய்யப்படலாம்.

    (a)

    விற்பனை 

    (b)

    மறுவெளியீடு 

    (c)

    வட்டம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. அட்டவணை A-யின்படி, அழைப்பு நிலுவைக்கு கணக்கிடப்படும் வட்டி ________.

    (a)

    4%

    (b)

    5%

    (c)

    6%

    (d)

    10%

  6. 5 x 2 = 10
  7. ஜெயம் டயர்ஸ் நிறுமம் 15,000 சாதாரணப்பங்குகளை ரூ. 10 வீதம் பின்வருமாறு செலுத்தும்படி வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது ரூ.3 ஒதுக்கீட்டின் மீது ரூ.5 முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. அனைத்து தொகையும் பெறப்பட்டது. ஆனால் 100 பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரர் அழைப்பு பணத்தை செலுத்தத் தவறினார். அழைப்பு நிலுவைக் கணக்கைப் பயன்படுத்தி அழைப்பிற்கான குறிப்பேடுப் பதிவுகளைத் தரவும்.

  8. நிறுமம் வரைவிலக்கணம் தருக.

  9. பொது வெளியீடு என்றால் என்ன?

  10. குறை ஒப்பம் என்றால் என்ன?

  11. முனைமத்தில் வெளியிடுதல் என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. மருது நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 150 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.4 இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் ஒறுப்பிழப்பு செய்தது. அவற்றில் 100 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்தது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  14. ஜெமினி வரையறு நிறுமம் பங்கொன்றுக்கு ரூ.10 மதிப்புள்ள ரூ. 7 அழைக்கப்பட்ட 20 சாதாரண பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தது. மகேஷ் என்பவர் அப்பங்குகளுக்கான விண்ணப்பம் மற்றும் ஒதுக்கீடு பணம் ரூ.5 செலுத்தி இருந்தார். அவற்றில் 15 பங்குகள் பங்கொன்றுக்கு ரூ.6 வீதம் பெற்றுக் கொண்டு ரூ.7 வீதம் செலுத்தப்பட்ட பங்குகளாக நரேஷ் என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. பங்கு ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  15. நிறுமத்தின் பண்புகளை எழுதுக.

  16. பங்குகளின் பிரிவுகளை எழுதி விளக்குக.

  17. குறிப்பு வரைக:
    1) தனியார் ஒதுக்கீடு 
    2) உரிமை வெளியீடு 
    3) மேலூதிய பங்கு வெளியீடு 

  18. 4 x 5 = 20
  19. பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:

    விண்ணப்பத்தின் போது பாங்கொன்றிற்கு      ரூ.5
    ஒதுக்கீட்டின் போது பாங்கொன்றிற்கு      ரூ.3
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பாங்கொன்றிற்கு      ரூ.2

    60,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திரும்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  20. மீனாட்சி வரையறு நிறுமம் ஒன்று ரூ.10 முகமதிப்புடைய 100 சாதாரணப் பங்குகளின் மீது ரூ.10 மட்டும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இறுதி அழைப்பான ரூ.2 செலுத்தாத காரணத்தினால் ஒறுப்பிழைப்பு செய்தனர். இவ்வொறுப்பிழப்பு செய்த பங்குகள் பங்கொன்று ரூ.7 வீதம் முழுவதும் செலுத்தப்பட்டவைகளாக வெளியிடப்பட்டன. தேவையான பதிவுகளை நிறுமத்தின் குறிப்பேட்டில் தருக.

  21. அசோக் வரையறு நிறுமத்தின் 300 பங்குகளை பாங்கொன்று ரூ.10 வீதம் (முழுவதும் அழைக்கப்பட்டவை) வைத்திருந்த ராம் என்பவர் முதல் அழைப்புத் தொகை பாங்கொன்றிற்கு ரூ.3 மற்றும் இறுதி அழைப்புத் தொகையான பாங்கொன்றிற்கு ரூ.4 செலுத்தத் தவறவே பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. இப்பங்குகளில் 250 ஷ்யாம் என்பவருக்கு ரூ.2000த்திற்கு, மறுவெளியீடு செய்யப்பட்டது. பங்கு ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டுக்கான பதிவுகளைத் தருக.

  22. ஷெரோ ஹெல்த் கேர் நிறுமம் ஒன்று ரூ.10 மதிப்புள்ள 3,00,000 நேர்மைப்பங்குகளை பாங்கொன்றுக்கு ரூ.2 வீதம் முனைமத்தில் வெளியிட விண்ணப்பங்களைக் கோரியது.
    விண்ணப்பத்தின் போது ரூ.3 ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் உட்பட) 
    மிகை ஒப்பம் உள்ள நிலையில் 4,00,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மிகுதியாகப் பெற்ற விண்ணப்பங்கள் இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டன. அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Company Accounts Model Question Paper )

Write your Comment