நிறுமக் கணக்குகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    4 x 1 = 4
  1. பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?

    (a)

    வெளியிடப்பட்ட பங்குமுதல் அங்கீகரிக்கப்பட்ட பங்குமுதலை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக் கூடாது.

    (b)

    பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்குமுதல், ஒப்பிய பங்குமுதலை விட குறைவாக இருக்கும்

    (c)

    காப்பு முதல் நிறுமத்தை கலைக்கும்போது செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

    (d)

    செலுத்தப்பட்ட பங்குமுதல், அழைக்கப்பட்ட பங்கு முதலின் ஒரு பகுதி ஆகும்

  2. பங்கு வெளியீட்டின் மூலம் பெறப்படும் பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    பங்குகள் 

    (b)

    பங்கு முதல் 

    (c)

    பங்கு விண்ணப்பம் 

    (d)

    பங்கு ஒதுக்கீடு 

  3. ______ முதல் பல்வேறு சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

    (a)

    நிறுமங்களின் 

    (b)

    கூட்டாளிகளின் 

    (c)

    தனியாள் வணிகத்தின் 

    (d)

    கூட்டாண்மையின் 

  4. மறு வெளியீட்டு இலாபம் மாற்றப்படுவது ______ கணக்கு.

    (a)

    முதலினக் காப்பு 

    (b)

    பத்திமுனைமக் கணக்கு 

    (c)

    பங்கு ஒறுப்பிழப்பு 

    (d)

    முகமதிப்பு 

  5. 1 x 2 = 2
  6. கூற்று (A): பிற பங்குகளுக்கு ஏதேனும் பங்காதாயம் வழங்கப்படுவதற்கு முன்பு குறிப்பிட்ட விகிதத்தில் பங்காதாயாம் பெறும் உரிமை முன்னுரிமை பங்குதாரர்களுக்கு பங்கு முதலை திருப்பிக் கொடுத்த பிறகே முன்னுரிமை பங்குநர்களுக்கு கொடுக்கப்படும்.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  7. 1 x 2 = 2
  8. அ) தன்னிச்சையான அமைப்பு 
    ஆ) பொது முத்திரை 
    இ) வெளியிட்ட முதல் 
    ஈ) வரையறு பொறுப்பு 

  9. 1 x 2 = 2
  10. 1. நிறுமம் தன்னிச்சையான அமைப்பு.
    2. இதன் உறுப்பினர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது.
    3. நிறும நீண்ட வாழ்நாள் கொண்டது 
    அ) அனைத்தும் சரி 
    ஆ) 1 மற்றும் 2 சரி 
    இ) 2 மட்டும் சரி 
    ஈ) 1 மற்றும் 3 சரி 

  11. 1 x 2 = 2
  12. அ) பத்திர முனைமம் - பொறுப்புகள் பக்கம் 
    ஆ) அழைப்பு நிலுவை - சொத்துக்கள் பக்கம் 
    இ) முதலினக் காப்பு - பொறுப்புகள் பக்கம் 
    ஈ) பங்கு வெளியீட்டு தள்ளுபடி - சொத்துகள் பக்கம் 

  13. 1 x 1 = 1
  14. அ) அங்கீகரிக்கப் பட்ட முதல் - ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் 
    ஆ) வெளியிட்ட முதல் - பெயரளவு முதல் 
    இ) ஒப்பிய முதல் - பதிவு செய்யப்பட்ட முதல் 
    ஈ) காப்பு முதல் - அழைப்பு விடுக்கப்பட்ட முதல் 

  15. 3 x 2 = 6
  16. சுதா நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போது ரூ.4, மீதமுள்ள தொகை தேவையான பொழுது என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 1,40,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை இயக்குனர்கள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்தனர்
    60,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - முழுமையாக
    75,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - 40,000 பங்குகள் (மிகுதியான விண்ணப்ப பணம் ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்படும்)
    5,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - எதுவுமில்லை
    அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஒதுக்கீட்டுத் தொகை பெறுவது வரையிலான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  17. பங்குகள் ஏன் ஒறுப்பிழப்பு செய்யப்படுகின்றன?

  18. முனைமத்தில் வெளியிடுதல் என்றால் என்ன?

  19. 2 x 3 = 6
  20. அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன். ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  21. சிறுகுறிப்பு வரைக.
    (அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
    (ஆ) காப்புமுதல்

  22. 3 x 5 = 15
  23. கீர்த்திகா நிறுமம் பங்கொன்று ரூ.10 வீதம் பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டது. தொகையானது விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.3 (முனைமம் உட்பட), முதல் அழைப்பின் போது ரூ.3, மற்றும் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 எனச் செலுத்தப்பட வேண்டும்.
    பின்வரும் தருணங்களில் பங்குகளை ஒறுப்பிழப்பு செய்வதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
    (i) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன.
    (ii) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் ஒதுக்கீட்டுத் தொகை, முதல் அழைப்பு, இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன.
    (iii) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் ஒதுக்கீட்டுத் தொகை மற்றும் முதல் அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் முதல் அழைப்பிற்கு பின் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன

  24. கஸ்தூரி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 20,000 நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் வெளியிட்டது. 30,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. ரூ.3 விண்ணப்பத்தின் மீதும், ரூ.5 ஒதுக்கீட்டின் மீதும் (முனைமம் ரூ.2 உள்பட), ரூ.2 முதல் அழைப்பின் மீதும் மற்றும் ரூ.2 இறுதி அழைப்பின் மீதும் செலுத்தப்பட வேண்டும். சுபின் என்னும் பங்குதாரர் தன்னுடைய 500 பங்குகளுக்கான முதலாவது மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகையினை கட்டத் தவறினார். அவரது பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அதில், 400 பங்குகள் ஒன்று ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்

  25. கீர்த்திகா நிறுமம் பங்கொன்று ரூ,10 வீதம் பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டது. தொகையானது விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.3 (முனைமம் உட்பட அழைப்பின் போது ரூ.3, மற்றும் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 எனச் செலுத்தப்பட வேண்டும்.
    பின்வரும் தருணங்களில் பங்குகளை ஒறுப்பிழப்பு செய்வதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    1) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன.
    2) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் ஒதுக்கீட்டுத் தொகை, முதல் அழைப்பு, இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் அவருடைய பங்குகள் ஒறுபிழப்பு செய்யப்பட்டன.
    3) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் ஒதுக்கீட்டுத் தொகை மற்றும் முதல் அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் முதல் அழைப்பிற்கு பின் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Company Accounts Sample Question Paper)

Write your Comment