நிறுமக் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. அனிதா என்பவர் தஞ்சாவூர் மோட்டார் வரையறு நிறுமத்தின் ரூ.10 மதிப்புள்ள 500 நேர்மைப் பங்குகளை வைத்துள்ளார். அவர் விண்ணப்பத்தின் மீது ரூ.3, ஒதுக்கீட்டின் மீது ரூ.5 செலுத்தி உள்ளார். ஆனால் முதலாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையான ரூ.2 செலுத்தவில்லை. அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  2. முத்து என்பவர் ரூ.10 மதிப்புள்ள 20 சாதாரண பங்குகளை வைத்திருந்தார். அவர் அதன் விண்ணப்பத் தொகையாக ரூ.2 செலுத்திய நிலையில் ஒதுக்கீட்டுப் பணம் ரூ.3 மற்றும் முதல் அழைப்பு பணம் ரூ.1 செலுத்தவில்லை. முதல் அழைப்புக்கு பின்னர் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்ய முடிவு செய்தனர். பங்கு ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  3. அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன். ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  4. மருது நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 150 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.4 இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் ஒறுப்பிழப்பு செய்தது. அவற்றில் 100 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்தது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  5. X நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
    விண்ணப்பத்தின் போது = ரூ.2
    ஒதுக்கீட்டின் போது = ரூ.4
    முதல் அழைப்பின் போது = ரூ.2
    இறுதி அழைப்பின் போது = ரூ.2
    30,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 10,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள விண்ணப்பங்கள் விகிதச்சார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளப்பட்டது. இயக்குனர்கள் இரண்டு அழைப்புகளையும் மேற்கொண்டனர். 600 பங்குகளின் இரண்டாம் அழைப்புத் தொகையை தவிர அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. பின்னர் அப்பங்ப்பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றில், 400 பங்குகள் ஒரு பங்கிற்கு ரூ.7 பெற்றுக் கொண்டு, முழுமையாக செலுத்திய பங்காக மறுவெளியீடு செய்யபட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  6. முன்னுரிமைப் பங்குகளுக்கும், நேர்மைப் பங்குகளுக்குமுள்ள வேறுபாடுகளை கூறவும்

  7. அழைப்பு முன்பணம் குறித்து சுருக்கமாக எழுதவும்.

  8. ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?  

  9. சிறுகுறிப்பு வரைக.
    (அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
    (ஆ) காப்புமுதல்

  10. ரொக்கம் தவிர இதர மறுபயனுக்கு பங்கு வெளியீடு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Company Accounts Three Marks Questions )

Write your Comment