நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய  ________ தகவல்களை வழங்குகிறது.

    (a)

    ஒரு காலக்கட்டத்திற்கு மேலான

    (b)

    ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய

    (c)

    ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான

    (d)

    குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய

  2. நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்வின் பின்வரும் எந்த கருவி பல்வேறு ஆண்டுகளுக்கான விவரங்களை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்புடையதாகும்?

    (a)

    ரொக்க ஓட்ட பகுப்பாய்வு

    (b)

    பொது அளவு அறிக்கை

    (c)

    ஒப்பீட்டு அறிக்கை

    (d)

    போக்கு ஆய்வு

  3. நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது.

    (a)

    பணம்சாரா தகவல்கள்

    (b)

    கடந்தகால தகவல்கள்

    (c)

    குறுகிய கால தகவல்கள்

    (d)

    நீண்டகால தகவல்கள்

  4. பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாப்பாய்வின் ஒரு கருவி அல்ல?

    (a)

    போக்குப் பகுப்பாய்வு

    (b)

    பொது அளவு அறிக்கை

    (c)

    ஒப்பீட்டு அறிக்கை

    (d)

    நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்

  5. நிதி என்னும் சொல் குறிப்பிடுவது_____.

    (a)

    நடப்புப் பொறுப்புகள்

    (b)

    நடைமுறை முதல்

    (c)

    நிலைச் சொத்துகள்

    (d)

    நீண்டகாலச் சொத்துகள்

  6. ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை ரூ.1,25,000 லிருந்து ரூ.1,50,000க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது?

    (a)

    +20%

    (b)

    +120%

    (c)

    -120%

    (d)

    -20%

  7. ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?

    (a)

    175

    (b)

    125

    (c)

    25

    (d)

    100

  8. 4 x 1 = 4
  9. வருமான அறிக்கை 

  10. (1)

    வியாபாரக் கணக்கு 

  11. நிதிநிலை அறிக்கைகள் 

  12. (2)

    2013, பிரிவு 129 (1)

  13. இந்திய நிறுமச் சட்டம் 

  14. (3)

    நிகர உயர்வு மற்றும் குறைவு 

  15. ஒப்பீட்டு அறிக்கை 

  16. (4)

    வியாபாரத்தின் இயக்க முடிவுகள் 

    6 x 2 = 12
  17. பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 3,00,000 3,60,000
    இதர வருமானம் 1,00,000 60,000
    செலவுகள் 2,00,000 1,80,000
    வருமான வரி 30% 30%
  18. நிதிநிலை அறிக்கைகள் யாவை?

  19. நடைமுறை முதல் என்றால் என்ன?

  20. போக்குப் பகுப்பாய்வு எப்போது இதர பகுப்பாய்வு கருவிகளை விட ஏற்புடையதாகும்?

  21. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் பொருள் எழுதுக.

  22. கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?

  23. 4 x 3 = 12
  24. பின்வரும் விவரங்களிலிருந்து மணி மற்றும் கனி நிறுமங்களின் 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

    விவரம் மணி நிறுமம் கனி நிறுமம்
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 2,50,000
    இதர வருமானம் 30,000 25,000
    செலவுகள் 1,10,000 1,25,000
  25. மரியா வரையறு நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய பொது அளவு இருப்புநிலைக்குறிப்பு தயார் செய்யவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்  
      பங்குதாரர் நிதி 4,00,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 3,20,000
      நடப்புப் பொறுப்புகள் 80,000
    மொத்தம் 8,00,000
    II. சொத்துகள்  
      நிலைச் சொத்துகள் 6,00,000
      நடப்புச் சொத்துகள் 2,00,000
    மொத்தம் 8,00,000
  26. ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறு குறிப்பு வரையுவும்

  27. ஒப்பீட்டு அறிக்கை தயாரிப்பில் உள்ள படிநிலைகளை விளக்கவும்.

  28. 3 x 5 = 15
  29. பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ.இலட்சங்களில்
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 100 120 160
    இதர வருமானம் 20 24 20
    செலவுகள் 20 14 40
    வருமானவரி 30% 30% 30%
  30. டேனியல் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்

    விவரம் 2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 40,000 50,000
    இயக்கச் செலவுகள் 25,000 27,500
    வருமான வரி % (வரிக்கு முன்னர் உள்ள இலாபத்தில்) 30 30
  31. ராதா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

    விவரம் 2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 4,50,000
    இதர வருமானம் 67,500
    செலவுகள் 1,35,000

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Financial Statement Analysis Model Question Paper )

Write your Comment