Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  2. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையை கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2017, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 1,50,000
    2017, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 40,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 3,90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ரொக்கம் பெறப்பட்டது 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 10,000
    விற்பனைத் திருப்பம் 40,000
    2018, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000
    2018, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் 1,30,000
    ரொக்க விற்பனை 2,00,000
  3. இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?

  4. கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகளை எழுதுக.

  5. முதல் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  6. நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?

  7. அஞ்சலி மற்றும் நித்யா என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்துவருகின்றனர். அவர்கள் பிரமிளா என்பவரை 1.1.2018 அன்று கூட்டாளியாகச் சேர்த்தனர். அந்நாளில் அவர்களின் இருப்பு நிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கத்தில் பகிர்ந்து தரா நட்டம் ரூ.40,000 ஆக இருந்தது. சேர்ப்பின் போது பகிர்ந்து தரா நட்டத்தை பகிர்வதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  8. பிரின்ஸ், தேவ், சசிரேகா எனும் கூட்டாளிகள் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 2:4:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் 

    ரூ.

    முதல் கணக்குகள்:     கட்டடம் 40,000
    பிரின்ஸ் 30,000   பொறித்தொகுதி 50,000
    தேவ்  50,000   அறைகலன் 10,000
    சசிரேகா 20,000 1,00,000 சரக்கிருப்பு 15,000
    இலாப நட்டப் பகிர்வு க/கு   10,000 கடனாளிகள் 20,000
    பொதுக்காப்பு   15,000 வங்கி ரொக்கம் 15,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   17,000    
    பற்பல கடனீந்தோர்   8,000    
        1,50,000   1,50,000

    1-4-2019 அன்று சசிரேகா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பகிர்ந்து தரா இலாபத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்

  9. ரோஜா, நீலா மற்றும் கனகா என்ற கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல் 1 அன்று ரோஜா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவருடைய விலகலின்போது கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டன.
    (i) கட்டடத்தின் மதிப்பில் ரூ.30,000 அதிகரிக்க வேண்டும்.
    (ii) சரக்கிருப்பு மதிப்பில் ரூ. 5,000 மற்றும் அறைகலன் மதிப்பில்  ரூ.12,000 குறைக்க வேண்டும்.
    (iiii) கொடுபடா பொறுப்புகளுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.

  10. கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். விலகலுக்குப்பின் தேவையான சரிக்கட்டுதல்களைச்   செய்த பிறகு அவருடைய முதல் கணக்கு ரூ.1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (i) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப் பட்டது.
    (ii) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
    (iii) ரூ.1,00,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது, மீதத்தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது

  11. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  12. பங்குகளின் பிரிவுகளை எழுதி விளக்குக.

  13. நிதிநிலை அறிக்கைகள் கடந்தகால விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது எப்படி ஒரு குறைபாடாகும் என விளக்கவும்

  14. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்களை எழுதுக.

  15. அருணன் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
    (i) புற அக பொறுப்புகள் விகிதம்
    (ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
    (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்

    அருணன் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 1,50,000
      8% முன்னுரிமைப் பங்குமுதல் 2,00,000
    (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் (9% கடனீட்டுப் பத்திரங்கள்) 4,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் 25,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 75,000
    மொத்தம் 10,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      நிலைச் சொத்துகள் 7,50,000
    2. நடப்புச் சொத்துகள்  
      (அ) சரக்கிருப்பு 1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 1,00,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 27,500
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள் செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது 2,500
    மொத்தம் 10,00,000
  16. டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
    (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
    (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
    (iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
    (iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    2019, மார்ச் 31
    ரூ.
    சரக்கிருப்பு 1,40,000 1,00,000
    கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 80,000 60,000
    கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40,000 50,000
    நிலைச் சொத்துகள் 5,50,000 5,00,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
    (ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
    (iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
    விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.

  17. விகித பகுப்பாய்வின் நோக்கங்களை விளக்கவும்.

  18. விகித பகுப்பாய்வின் ஏதேனும் மூன்று நன்மைகள் தரவும்

  19. பாரம்பரிய அடிப்படையின் வகைகளை எழுதி விளக்குக.

  20. Tally.ERP 9-ல் இலாப நட்டக் கணக்கை எவ்வாறு பார்வையிடுவது என்பதை விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Accountancy - Full Portion Three Marks Question Paper )

Write your Comment