விகிதப் பகுப்பாய்வு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் ______.

    (a)

    உரிமையாளர் விகிதம்

    (b)

    முதல் உந்துதிறன் விகிதம்

    (c)

    புற அக பொறுப்பு விகிதம்

    (d)

    நடப்பு விகிதம்

  2. விகிதங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  3. பங்குதாரர் நிதிக்கும் சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரத்தை தருவது எது?

    (a)

    புற அக பொறுப்புகள் விகிதம் 

    (b)

    உரிமையாளர் விகிதம் 

    (c)

    முதல் உந்து திறன் விகிதம் 

    (d)

    நிகர இலாப விகிதம் 

  4. ________ என்பது ஒரு வணிக நிறுவனம்  தனது நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது, அதை எதிர்கொள்ளும் திறனைக் குறிக்கிறது.

    (a)

    நடப்பு விகிதம் 

    (b)

    விரைவு விகிதம் 

    (c)

    உரிமையாளர் விகிதம் 

    (d)

    முதல் உந்துதிறன் விகிதம் 

  5. _______ என்பது பங்குதாரர்கள் / உரிமையாளர்களின் நிதி மற்றும் மொத்த புலனாகும் சொத்துகள் இடையேயான உறவை காட்டுகிறது.

    (a)

    புற-அக பொறுப்புகள் விகிதம் 

    (b)

    உரிமையாளர் விகிதம் 

    (c)

    இயக்க விகிதம் 

    (d)

    நீர்மை விகிதம் 

  6. 1 x 2 = 2
  7. கூற்று (A) : விகிதம் என்பது இரண்டு தொடர்புடைய அல்லது ஒன்றை ஒன்று சார்ந்த இனங்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் கணிதவியல் அடிப்படையில் வெளிப்படுத்துவதாகும்.
    காரணம் (R) : ஒரு இனம் வருமான அறிக்கையிலிருந்தும் மற்றொரு இனம் இருப்பு நிலைக் குறிப்பிலிருந்தும் எடுத்து விகிதம் கணக்கிடப்பட்டால், அது அறிக்கைகளுக்கிடையேயான விகிதம் என அழைக்கப்படுகிறது.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  8. 1 x 2 = 2
  9. 1. நீர்மைத் தன்மை என்பது எளிதாக ரொக்கமாக மாற்றக்கூடிய திறனைக் குறிக்கிறது.
    2. நடப்புப் பொறுப்புகள் ஒரு குறுகிய காலத்திற்குள் திரும்பச் செலுத்தக் கூடிய பொறுப்புகள் ஆகும்.
    3. விரைவு விகிதம் நீர்மைச் சொத்துக்களுக்கும் நடப்புப் பொறுப்புகளுக்குமுள்ள விகிதச்சாரமாகும்.
    (அ) 1 மட்டும் சரி 
    (ஆ) 2 மட்டும் சரி 
    (இ) 3 மட்டும் சரி 
    (ஈ) 1,2 மற்றும் 3 சரி 

  10. 1 x 1 = 1
  11. (அ) நடப்பு விகிதம்  =
    (ஆ) விரைவு விகிதம்  =
    (இ) புற அக பொறுப்புகள் விகிதம்  =
    (ஈ) உரிமையாளர் விகிதம்  =
  12. 3 x 2 = 6
  13. பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதம் கணக்கிடவும்:

    31.03.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 1,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 60,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்ட காலக் கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) 80,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 50,000
      (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபடவேண்டிய செலவுகள் 30,000
    மொத்தம் 3,20,000
  14. விகித பகுப்பாய்வின் ஏதேனும் இரண்டு குறைபாடுகளைத் தரவும்.

  15. செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

  16. 3 x 3 = 9
  17. சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 1,90,000
    அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு 40,000
    அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு 20,000
    அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் 90,000
    உள்தூக்குக்கூலி 10,000
  18. விகித பகுப்பாய்வின் ஏதேனும் மூன்று நன்மைகள் தரவும்

  19. நீர்மைத் தன்மை விகிதங்கள் குறிப்பு வரைக.

  20. 2 x 5 = 10
  21. பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபம் கணக்கிடவும்:
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.1,00,000, விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.80,000 மற்றும் கொள்முதல் ரூ.62,500.

  22. நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கையிலிருந்து 
    (i) மொத்த இலாப விகிதம் 
    (ii) நிகர இலாப விகிதம் 
    (iii) இயக்க அடக்கவிலை விகிதம் 
    (iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம்  ரூ
    விற்பனை மூலம் பெற்ற வருவாய்  20,000
    II. இதர வருமானம்   
      முதலீடு மூலம் வருவாய்  200
    III  மொத்த வருவாய் (I+II) 20,200
    IV  செலவுகள்   
      கொள்முதல் சரக்குகள்  17,000
      சரக்கிருப்பு மாற்றம்  (-)1,000
      நிதிசார் செலவுகள்  300
      இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) 2,400
      மொத்த செலவுகள்  18,700
    அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV) 1,500

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Ratio Analysis Sample Question Paper)

Write your Comment