" /> -->

கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. முடிவுறு அல்லது முடிவுறா __________ என்பது அதில் உள்ள முடிவுறு அல்லது முடிவுறா உறுப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்தாகும்.

  (a)

  முழுமைத்தொகுதி 

  (b)

  முழுமைக்கணிப்பு

  (c)

  தொகுதிப் பண்பளவை

  (d)

  மேற்கூறிய எதுவுமில்லை 

 2. _________ என்பது முழுமைத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு சமமான வாய்ப்பை அளிக்கும் ஒன்றாகும்.

  (a)

  பண்பளவை

  (b)

  சமவாய்ப்பு கூறு

  (c)

  புள்ளியியல் அளவை

  (d)

  முழுமைத் தொகுதி

 3.  _________ யில் ஒரு சீரற்ற முழுமைத் தொகுதியானது சீரான துணை முழுமைத் தொகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

  (a)

  நிகழ்தகவு சாரா கூறெடுப்பு முறை

  (b)

  எளிய சமவாய்ப்பு கூறெடுப்பு முறை

  (c)

  படுகை வாய்ப்பு கூறெடுப்பு முறை

  (d)

  முறைப்படுத்திய கூறெடுப்பு முறை

 4. மதிப்பீட்டு அளவையானது மாதிரி புள்ளியியல் அளவையின்____________ஐ மதிப்பிட பயன்படுகிறது

  (a)

  முழுமைத்தொகுதி பண்பளவை

  (b)

  பிழையான மதிப்பீட்டு

  (c)

  மாதிரி அளவு

  (d)

  முழுமைக் கணிப்பு 

 5. மதிப்பீட்டு அளவையானது பண்பளவையில் குறித்த அனைத்து மதிப்பீடுகளையும் உள்ளடக்கிய தரவுகளைப் பெற்றிருந்தால் அது __________ வாய்ந்தது ஆகும்.

  (a)

  திறன்தன்மை 

  (b)

  நிறைவுத்தன்மை 

  (c)

  பிழையற்ற தன்மை 

  (d)

  நிலைத்தன்மை 

 6. 3 x 2 = 6
 7. பண்பளவையை (Parameter) - வரையறு.

 8. கூறு அளவையின் மாதிரிப் பரவல் என்றால் என்ன?

 9. திட்டப்பிழை என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. திட்டவிலக்கம் 10 மற்றும் மாதிரியைப் பொறுத்து திட்டப்பிழை 3 எனில் மாதிரியின் அளவைக் காண்க.

 12. ஒரு பகடை 9000 முறை வீசப்படும் போது அதன் மே ல் உள்ள எண்கள் 3 அல்லது 4 ஆக 3240 முறை கிடைக்கின்றன. பிழையற்ற பகடையின் திட்டப்பிழை விகிதத்தைக் கணக்கிடுக.

 13. ஒரு கூறின் அளவு 50 உடைய ஒரு மாதிரியின் திட்டவிலக்கம் 6.3. அதற்குரிய முழுமைத்தொகையின் திட்டவிலக்கம் 6 எனில் மாதிரியின் திட்டப்பிழை காண்க.

 14. 2 x 5 = 10
 15. ஒரு மகிழுந்து தயாரிக்கும் நிறுவனம் தற்போது உபயோகத்தில் உள்ள மகிழுந்தை விட எரிபொருள் சிக்கனப்படுத்தும் நோக்கில் புதிய ஆறு உருளைத் திறன் உள்ள மகிழுந்தை அறிமுகம் செய்கிறது. 50 புதிய மகிழுந்துகள் மாதிரியாக எடுத்து அதன் பெட்ரோல் உபயோகம் குறித்து சோதனை செய்யப்பட்ட போது அது சராசரியாக ஒரு லிட்டருக்கு 10கி.மீ மற்றும் அதன் திட்ட விலக்கம் 3.5 கி.மீ என அறியப்பட்டது. புதிய மகிழுந்தின் சராசரி பெட்ரோல் உபயோகம் லிட்டருக்கு 9.5 கி.மீ என்ற நிறுவனத்தின் அறிவிப்பை ஏற்று கொள்ளலாமா என்பதை 5% மிகைகாண் நிலையில் சோதிக்க.

 16. அவசர மருத்துவ சிகிச்சை வாகன சேவை வழங்கும் ஒரு நிறுவனம், தங்களுக்கு கிடைக்கப்பெறும் அவசர அழைப்பின் போது சராசரியாக 8.9 நிமிடங்களில் அழைப்பிடத்தை சென்றவடைவதாக கூறுகிறது. அவர்களின் கூற்றை சோதிக்க, எடுக்கப்பட்ட 50 அவசர அழைப்பின் மாதிரி தேர்வுகளில் அதன் சராசரி 9.3 நிமிடங்கள், திட்டவிலக்கம் 1.6 நிமிடங்கள் என அறியப்படுகிறது. 5% மிகைகாண் நிலையில் நிறுவனத்தின் கூற்று சரியானதா?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் Book Back Questions ( 12th Business Maths - Sampling Techniques And Statistical Inference Book Back Questions )

Write your Comment