வேதிவினை வேகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு அடிப்படை வினையில், இடம்பெறும் வினைபடு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை ________ எனப்படும்.

    (a)

    வினை வகை 

    (b)

    மூலக்கூறு எண் 

    (c)

    வினை வேகம் 

    (d)

    வினைவேக மாறிலி 

  2. 2A + B ⟶ C+D என்ற அடிப்படை வினையின் மூலக்கூறு எண் ________________

    (a)

    பூஜ்யம் 

    (b)

    ஒன்று 

    (c)

    இரண்டு 

    (d)

    மூன்று 

  3. பின்வருவனவற்றுள் எவை பூஜ்ய வகை வினை ஆகும்?
    i) வளைய புரப்பேனானது புரப்பீனாக மாற்றியமாதல் 
    ii) அசிட்டோன் அயோடினேற்றம் அடையும் வினையில், அயோடினைப் பொறுத்து வினைவகை.
    iii) H2 மற்றும் Cl2 ஆகியவற்றிக்கு இடையேயான ஒளி வேதிவினை.

    (a)

    (i) மட்டும் 

    (b)

    (i) & (ii)

    (c)

    (ii) மட்டும் 

    (d)

    (ii) & (iii) 

  4. ஒரு இரண்டாம் வகை வினையின் அரை வாழ்கலாம் ________________

    (a)

    \(\frac { [{ A }_{ o }] }{ 2K } \)

    (b)

    \(\frac { [{ A }_{ o }] }{ K } \)

    (c)

    \(\frac { 1 }{ K[{ A }_{ o }] } \\ \)

    (d)

    \(\frac { 2[{ A }_{ o }] }{ K } \\ \)

  5. வினைபடு பொருட்களின் செறிவை அதிகரிக்கும் போது வினையின் வேகம் ________.

    (a)

    குறைகிறது 

    (b)

    அதிகரிக்கிறது 

    (c)

    மாறாது 

    (d)

    தடைபடுகிறது 

  6. 5 x 2 = 10
  7. வினை வேகம் -வரையறு.

  8. N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.

  9. வினை வேகத்தினைக் குறிப்பிடும் சமன்பாட்டில் எதிர்க்குறி ஏன் பயன்படுத்தப்படுகிறது.

  10. வினை வகை -வரையறு.

  11. மூலக்கூறு எண் - வரையறு.

  12. 5 x 3 = 15
  13. முதல் வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.

  14. X+Y ➝ வினைபொருள் என்ற வினையில், [X] ஐ நான்கு மடங்காக்கும் போது வினைவேகம் எட்டு மடங்காகிறது. மேலும் [X] மற்றும் [Y] ஆகிய இரண்டையும் நான்கு மடங்காக்கும் போது வினைவேகம் பதினாறு மடங்காகிறது எனில் X மற்றும் Y ஐப் பொறுத்து வினைவகை மற்றும் ஒட்டுமொத்த வினைவகை ஆகியவற்றினைக் கண்டறிக.

  15. 2NO(g)+Cl2(g)➝ 2NOCl(g) என்ற வினைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வினை ஒட்டுமொத்த வினைவகை மற்றும் ஒட்டுமொத்த வினைவகை ஆகியனவற்றின் மதிப்புகளைக் காண்க.

    சோதனை எண்  துவக்கச் செறிவு  துவக்க வினை வேகம் 
    NO Cl2 NOCl mol L-1 s-1
    1. 0.1 0.1 7.8x10-5
    2. 0.2 0.1 3.12x10-4
    3. 0.2 0.3 9.63x10-4
  16. ஒரு முதல் வகை வினை 48நிமிடங்களில் 75% நிறைவடைந்தால், அவ்வினையின் அரை வாழ் காலம் என்ன?

  17. ஒரு முதல் வகை வினைக்கு 99% வினை முடிவடைய ஆகும் காலம் 90% வினை முடிவடையும் காலத்தைப் போல் இரு மடங்கு என நிரூபி.

  18. 4 x 5 = 20
  19. ஒரு முதல் வகை வினையில் 25% வினைபடு பொருள் சிதைவடைய 40.5 நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொண்டால் அவ்வினையின் வினைவேக மாறிலி மதிப்பு யாது?

  20. 298 K ல் ஒரு முதல் வகை வினையின் ஆரம்ப வினை வேகம் 5.2x10-6 mol L-1 s-1 மற்றும் வினைபடு பொருளின் ஆரம்பச் செறிவு 2.6x10-3 mol L-1 எனில் அதே வெப்பநிலையில் அவ்வினையின் வினைவேக மாறிலி மதிப்பு யாது?

  21. ஒரு முதல் வகை வினைக்கு அநேக வெப்பநிலையில் வினைவேக மாறிலி மதிப்புகள் கண்டறியப்பட்டு, ln K Vs 1/T வரைபடம் வரையப்பட்டது. அதன் நேர்கோட்டின் சரிவு மதிப்பு -2.6 x 104K எனில், அவ்வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பு என்ன?

  22. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி மதிப்பு 35oC உள்ளத்தைப் போல் இரு மடங்காக 45oC ல் இருந்தால், அவ்வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பைக் கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Chemical Kinetics Model Question Paper )

Write your Comment