Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. 

  2. காற்றில்லாச் சூழலில் வறுத்தல் பற்றி எழுதுக.

  3. p-தொகுதி தனிமங்களின் உலோகப் பண்பினை பற்றி குறிப்பு வரைக.

  4. போரிக் அமிலத்தின் மீது வெப்பத்தின் விளைவு யாது?

  5. கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  6. ஆர்கானின் பயன்களைத் தருக.

  7. Cr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்சிஜனேற்றி விளக்குக.

  8. லாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக

  9. எண்முகி படிக புலத்தில், d – ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் வரைக

  10. Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.

  11. அயனிப் படிகங்கள் பற்றி எழுதுக.

  12. பேரியம் படிகத்தை 2.29A0 அலைநீளம் கொண்ட X-கதிர் மூலம் விளிம்பு விளைவிற்கு உட்படுத்தும் போது முதல்படி எதிரொளிப்பு 27081 ல் நடைபெறுகிறது. படிகத்தின் தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு யாது?

  13. அர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.

  14. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 2.3x10-4 s-1. வினைபடு பொருட்களின் ஆரம்பச் செறிவு 0.1 m எனில் 1 மணி நேரத்திற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் வினைபடு பொருளின் செறிவு யாது?

  15. ஒரு முதல் வகை வினை 48நிமிடங்களில் 75% நிறைவடைந்தால், அவ்வினையின் அரை வாழ் காலம் என்ன?

  16. pH வரையறு.

  17. நீண்ட காலத்திற்கு காப்பர் சல்பேட்டை இரும்புக் கலனில் சேமித்து வைக்க இயலுமா?  கொடுக்கப்பட்டது: \(E^{0}_{Cu^{2+}|Cu}=0.34 V\) and \(E^{0}_{Fe^{2+}|Fe}= -0.44V\)..

  18. ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய அமீன்களை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்?

  19. A,B மற்றும் C ஐ கண்டறிக  \(CH_3-NO_2\overset{LiAlH_4}\longrightarrow A\overset{2CH_3CH_2Br}\longrightarrow B \overset{H_2SO_4}\longrightarrow C\)

  20. மருந்துப் பொருட்கள் என்றால் என்ன ? அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Chemistry - Full Portion Three Marks Question Paper )

Write your Comment