அயனிச் சமநிலை மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. சோடியம் ஃ பார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே ___________

    (a)

    அமிலம், அமிலம், காரம்

    (b)

    காரம், அமிலம், காரம்

    (c)

    காரம், நடுநிலை, காரம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  2. 0.10M செறிவுடைய நீரிய பிரிடின் கரைசலில், பிரிடினியம் அயனியை \((C_{5}H_{5}NH)\) உருவாக்கக்கூடிய பிரிடின் \((C_{5}H_{5}N)\) மூலக்கூறுகளின் சதவீதம் ___________ \((K_{b}\ for\ C_{5}H_{5}N=1.7\times10^{-9})\)

    (a)

    0.006%

    (b)

    0.013%

    (c)

    0.77%

    (d)

    1.6%

  3. சம கனஅளவுள்ள 0.1M NaOH மற்றும் 0.01M HCl கரைசல்களை ஒன்றாக கலக்கும் போது கிடைக்கும் கரைசலின் pH மதிப்பு என்ன?

    (a)

    2.0

    (b)

    3

    (c)

    7.0

    (d)

    12.65

  4. பின்வருவனவ ற்றுள் எது லெளரி– ப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்?

    (a)

    HCl

    (b)

    SO42−

    (c)

    HPO42−

    (d)

    Br-

  5. NH4OH இன் பிரிகை மாறிலி மதிப்பு \(1.8\times10^{-5}\) எனில், NH4Cl இன் நீராற்பகுத்தல் மாறிலி மதிப்பு ________

    (a)

    \(1.8\times10^{-19}\)

    (b)

    \(5.55\times10^{-10}\)

    (c)

    \(5.55\times10^{-5}\)

    (d)

    \(1.80\times10^{-5}\)

  6. 5 x 2 = 10
  7. நீரின் அயனிப் பெருக்கம் வரையறு. அறை வெப்ப நிலையில் அதன் மதிப்பை தருக.

  8. HCN இன் Ka மதிப்பு 10-9 எனில் 0.4M HCN கரைசலின் pH மதிப்பு என்ன?

  9. 0.1 M அம்மோனியம் அசிட்டேட் கரைசலின் நீராற்பகுப்பு வீதம் மற்றும் pH மதிப்பை கணக்கிடுக. \(K_{a}=K_{b}=1.8\times10^{-5}\) என கொடுக்கப்பட்டுள்ளது.

  10. 0.001M HCl கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக

  11. 0.1M CH3COOH கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக. அசிட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு \(1.8\times10^{-5}\).

  12. 5 x 3 = 15
  13. பொது அயனி விளைவை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  14. ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டைத் தருவி.

  15. \(1.5\times10^{-3}\) M Ba (OH)2 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.t

  16. 50ml கனஅளவுடைய 0.025M KOH கரைசலுடன் 50ml கனஅளவுடைய 0.05M HNO3 கரைசல் சேர்க்கப்படுகிறது. இறுதியில் பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.

  17. 10-7 M HCl ன் pH மதிப்பை கணக்கிடுக.

  18. 4 x 5 = 20
  19. Ag2CrO4 ன் கரை திறன் பெருக்க மதிப்பு  \(1.1\times10^{-12}\) ஆகும். 0.1M K2CrO4 கரைசலில் Ag2CrO4 ன் கரை திறன் என்ன ?

  20. 0.150 L கனஅளவுடைய 0.1M Pb(NO3)2 மற்றும் 0.100 L கனஅளவுடைய 0.2M NaCl கரைசல் ஆகியவற்றை ஒன்றாக கலக்கும் போது வீழ்படிவு உருவாகுமா? \(K_{sp} (PbCl_{2})=1.2\times10^{-5}\).

  21. 1 mL 0.1M லெட் நைட்ரேட் கரைச ல் மற்றும் 0.5 mL 0.2 M NaCl கரைசல் ஆகியவற்றை ஒன்றாக கலக்கும் போது லெட் குளோரைடு வீழ்படிவாகுமா? வீழ்ப டிவாகாதா? என கண்டறிக. PbCl2 இன் Ksp மதிப்பு \(1.2\times10^{-5}\).

  22. பின்வருவனவற்றிற்கு, கரைதிறன் பெருக்கம் மற்றும் மோலார் கரைதிறன் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை நிறுவுக.
    a) BaSO4 b) Ag2(CrO4)

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - அயனிச் சமநிலை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Ionic Equilibrium Model Question Paper )

Write your Comment