மின் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வரும் அரைக்கல வினைகளை கருதுக
    \(Mn^{2+}+2e^{-}\rightarrow Mn=E^{0}=-1.18V\)   \(Mn^{2+}\rightarrow Mn^{3+}+e^{-}\quad E^{0}=-1.51V\)
    \(3Mn^{2+}\rightarrow Mn+2Mn^{3+}\), என்ற வினையின் E0 மதிப்பு முன்னோக்கு வினையின் சாத்தியக்கூறு முறையே ____________

    (a)

    2.69V மற்றும் தன்னிச்சையானது

    (b)

    - 2.69 மற்றும் தன்னிச்சையற்றது

    (c)

    0.33V மற்றும் தன்னிச்சையானது

    (d)

    4.18 V மற்றும் தன்னிச்சையற்றது

  2. 298 K வெப்பநிலையில் 0.5 mol dm-3 செறிவுடைய AgNO3 கரைசலின் மின்பகுளிக் கடத்துத்திறன் மதிப்பு \(5.76\times10^{-3} S cm^{-1}\) எனில், அதன் மோலார் கடத்துத்திறன் மதிப்பு ___________

    (a)

    2.88 S cm2 mol-1

    (b)

    11.52  S cm2 mol-1

    (c)

    0.086  S cm2 mol-1

    (d)

     28.8  S cm2 mol-1

  3. பின்வரும் வினை நிகழ எவ்வளவு ஃபாரடே மின்னோட்டம் தேவைப்படும்? \(MnO_{4}^{-} \rightarrow Mn^{2+}\)

    (a)

    5F

    (b)

    3F

    (c)

    1F

    (d)

    7F

  4. 1A மின்னுட்டத்தை பயன்படுத்தி மின்னாற்பகுக்கும் போது 60 விநாடிகளில் , எதிர்மின்முனையில் விடுவிக்கப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (எலக்ட்ரானின் மின்சுமை = \(1.6\times10\) -19C)

    (a)

    \(6.22\times10^{23}\)

    (b)

    \(6.022\times10^{20}\)

    (c)

    \(3.75\times10^{20}\)

    (d)

    \(7.48\times10^{23}\)

  5. லெட் சேமிப்புக்கலனை மின்னேற்றம்(charging) செய்யும் போது _____________

    (a)

    எதிர்மின்முனை யில் PbSO4  ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது

    (b)

    நேர்மின்முனையில் PbSO4 ஆனது PbO2 ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது

    (c)

    நேர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது

    (d)

    எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது

  6. 5 x 2 = 10
  7. மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.

  8. டேனியல் மின்கல கட்டமைப்பை விளக்குக. கலவினையை எழுதுக.

  9. கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனையானது எதிர்குறி கொண்டதாகவும் எதிர்மின்முனையானது நேர்குறி கொண்டதாகவும் கருதப்படுகிறது ஏன்?

  10. 0.1M HCl மற்றும் 0.1 M KCl இந்த இரண்டு கரைசல்ளில் எது அதிக \(\overset{0}{\Lambda}_{m}\) கடத்துத்திறனை கொண்டது? ஏன்?

  11. 25°C. வெப்பநிலையில் 0.025M செறிவுடைய நீர்த்த கால்சியம் குளோரைடு கரைசலின் மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக. கால்சியம் குளோரைடு கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பு 12.04 × 10-2 Sm-1.

  12. 5 x 3 = 15
  13. Fe3+ அயனிகள் திட்ட நிலைமைகளில் புரோமைடை புரோமினாக ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்யுமா? கொடுக்கப்பட்டது: \(E^{0}_{Fe^{3+}|Fe^{2+}}=0.771\)  \(E^{0}_{Br_{2}|Br^{-}}=1.09 V\).

  14. நீண்ட காலத்திற்கு காப்பர் சல்பேட்டை இரும்புக் கலனில் சேமித்து வைக்க இயலுமா?  கொடுக்கப்பட்டது: \(E^{0}_{Cu^{2+}|Cu}=0.34 V\) and \(E^{0}_{Fe^{2+}|Fe}= -0.44V\)..

  15. எரிபொருள் மின்கலத்தில் H2 மற்றும் O2 வினை புரிந்து மின்னோட்டத்தை உருவாக்குகின்றன. இந்த செயல்முறையில், H2 வாயு நேர்மின்முனையில் ஆக்ஸிஜனேற்றமடைகிறது, எதிர்மின்முனையில் O2 ஒடுக்கமடைகிறது. 25oC வெ ப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் 44.8 லிட்டர் H2 வாயு 10 நிமிடங்களுக்கு செலுத்தப்படுகிறது. உருவாக்கப்பட்ட சராசரி மின்னோட்ட அளவு யாது? மொத்த மின்னோட்டத்தையும் Cu2+ லிருந்து Cu ஐ மின்வீழ்படிவாக்கலுக்கு பயன்படுத்தினால், எவ்வளவு கிராம் காப்பர் வீழ்படிவாகும்?

  16. முறையே நிக்கல் நை ட்ரேட் மற்றும் குரோமியம் நைட்ரேட் கரைசல்களை கொண்டுள்ள இரண்டு தனித்தனி மின்னாற்பகுப்புக் கலன்களில் ஒரே அளவுள்ள மின்னோட்டம் செலுத்தப்படுகிறது. முதல் மின்கலத்தில் 2.935 கிராம் Ni வீழ்படிவாகிறது எனில் மற்றொரு மின்கலத்தில் வீழ்படிவாகும் குரோமியத்தின் அளவு என்ன?
    கொடுக்கப்பட்டுள்ளது : நிக்கல் மற்றும் குரோமியத்தின் மோலார் நிறைகள் முறையே 58.74 மற்றும் 52 கிராம் மோல்-1.

  17. கால்வானிக் மின்கலத்தில் நிகழும் நிகர வினை யானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
    2 Cr (s) + 3Cu2+   (aq)  → 2Cr3+ (aq) + 3Cu (s)
    மின்கல குறியீட்டை பயன்படுத்தி மின்கலத்தை விளக்குக, மே லும் அரை வினைக ளை எழுதுக.

  18. 4 x 5 = 20
  19. 25oC வெ ப்பநிலை யிலுள்ள 0.1M காப்பர் சல்பேட் கரைச லில் காப்பர் மின்முனை மூழ்கவைக்கப்பட்டுள்ளது. காப்பரின் மின்முனை மின்னழுத்தத்தை கணக்கிடுக. [குறிப்பு \(E^{0}_{Cu^{2+}|Cu}\)=0.34]

  20. நெர்ன்ஸ்ட் சமன்பாட்டைத் தருவி.

  21. H2 - O2 எரிபொருள் மின்கலத்தின் செயல்பாடுகளை விளக்குக.

  22. அளவிலா நீர்த்தலில் Al3+ மற்றும் SO42- ஆகிய அயனிகளின் அயனிக் கடத்துத்திறன் மதிப்புகள் முறையே 189 மற்றும் 160 மோ செ.மீ2 சமானம்-1. அளவிலா நீர்த்தலில்  Al2 (SO4)3 மின்பகுளியின் சமான மற்றும்  மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - மின் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Ionic Equilibrium Model Question Paper )

Write your Comment