கரிம நைட்ரஜன் சேர்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. அனிலீன் + பென்சோயில் குளோரைடு \(\overset{NaOH}\longrightarrow C_6H_5-NH-COC_6H_5\) இந்த வினையானது __________

    (a)

    ஃப்ரீடல் கிராப்ட் வினை

    (b)

    HVZ வினை

    (c)

    ஸ்காட்டன் பௌமான் வினை

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  2. ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் _______________

    (a)

    கார்பாக்சிலிக் அமிலம்

    (b)

    அரோமேட்டிக் அமிலம்

    (c)

    ஷிப் – காரம்

    (d)

    கீட்டோன்

  3. \(C_6H_5NO_2 \overset{Fe/Hcl}\longrightarrow A \overset{NaNO_2/HCl}{\underset{273K}\longrightarrow} B \overset{H_2O}{\underset{283K}\longrightarrow} C\) is ____________ 

    (a)

    C6H5- OH

    (b)

    C6H5- CH2OH

    (c)

    C6H5- CHO

    (d)

    C6H5NH2

  4. பின்வரும் அமீன்களில் அசிட்டைலேற்ற வினைக்கு உட்படாதது எது?

    (a)

    மூவிணைய பியூட்டைலமீன்

    (b)

    எத்தில் அமீன்

    (c)

    டைஎத்தில் அமீன்

    (d)

    ட்ரை எத்தில் அமீன்

  5. பென்சோயிக் அமிலத்தின் அம்மோனியம் உப்பை P2O5  உடன் நன்கு வெப்பப்படுத்தி கிடைக்கும் விளை பொருளை ஒடுக்கமடைடியச் செய்து அதனை NaNO2 / HCl உடன் குறைந்த வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது  இறுதியில் கிடைக்கும் விளைபொருள் _______________

    (a)

    பென்சீன்டையசோனியம் குளோரைடு

    (b)

    பென்சைல் ஆல்கஹால்

    (c)

    பீனால்

    (d)

    நைட்ரசோ பென்சீன்

  6. 5 x 2 = 10
  7. C4H9NO2 என மூலக்கூறு வாய்பாட்டில் அமையும் அனைத்து மாற்றியங்களையும் எழுது, IUPAC பெயரிடுக.

  8. CH2NO3 வாய்பாட்டிற்கு இரண்டு மாற்றியங்கள் உள்ளன. இவ்விரண்டையும் எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  9. நைட்ரோ பென்சீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்
    i. 1,3,5 - ட்ரை நைட்ரோபென்சீன்
    ii. ஆர்த்தோ மற்றும் பாரா நைட்ரோ பீனால்
    iii. m – நைட்ரோ அனிலீன்
    iv. அசாக்சி பென்சீன்
    v. ஹைட்ரசோ பென்சீன்
    vi. N – பினைல்ஹைட்ராக்சிலமீன்
    vii. அனிலீன்

  10. பின்வரும் வினைவரிசையில் உள்ள A,B மற்றும் C ஆகிய சேர்மங்களை கண்டறிக
    i) \(C_6H_5NO_2\overset{Fe/HCl}\longrightarrow A\overset{HNO_2}{\underset{273K}\longrightarrow} B\overset{C_6H_5OH}\longrightarrow C\)
    ii) \(C_6H_5N_2Cl\overset{CuCN}\longrightarrow A\overset{H_2O/H^+}\longrightarrow B\overset{NH_3}\longrightarrow C\)
    iii) 
    iv) \(CH_3NH_2\overset{CH_3Br}\longrightarrow A\overset{CH_3COCl}\longrightarrow B\overset{B_2H_6}\longrightarrow C\)
    v) 

    vi) 
    vii) \(CH_3CH_2NC\overset{HgO}\longrightarrow A\overset{H_2O}\longrightarrow B\overset{i) NaNO_2/HCl}{\underset{ii) H_2O}\longrightarrow}\)

  11. சிறு குறிப்பு வரைக
    i. ஹாப்மன் புரோமமைடு வினை
    ii. அமோனியாவால் பகுப்பு
    iii. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு
    iv. ஸ்காட்டன் – பெளமான் வினை
    v. கார்பைலமீன் வினை
    vi. கடுகு எண்ணெய் வினை
    vii. இணைப்பு வினை
    viii. டையசோஆக்கல் வினை
    ix. காம்பெர்க் வினை

  12. 5 x 3 = 15
  13. ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய அமீன்களை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்?

  14. பின்வருவனவற்றிற்கு காரணம் கூறு
    i. அனிலீன் பிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை
    ii. அலிபாட்டிக் அமீன்களை விட அரோமேட்டிக் அமீன்களின் டையசோனியம் உப்புகள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டது.
    iii. அனிலீனின் pKb மதிப்பு மெத்திலமீனை விட அதிகம்
    iv. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு வினை ஓரிணைய அமீன்களை தொகுப்பதற்கானது.
    v. எத்தில்மீன் நீரில் கரையும் ஆனால் அனிலீன் கரையாது.
    vi. அமைடுகளை விட அமீன்கள் அதிக காரத்தன்மை உடையது.
    vii. அரோமேட்டிக் எலக்ட்ரான்கவர் பதிலீட்டு வினைகளில் அமினோ தொகுதி o – மற்றும்  p – வழிநடத்தும் தொகுதியாக இருப்பினும்  அனிலீனின் நைட்ரோ ஏற்றம் செய்யும் வினைகளில் m – நைட்ரோ அனிலீன் கணிசமான விளைபொருளாக கிடைக்கிறது.

  15. பின்வருவனவற்றிலிருந்து புரப்பேன் – 1- அமீனை எவ்வாறு தயாரிப்பாய்?
    i) பியூட்டேன்நைட்ரைல்
    ii) புரப்பனமைடு
    iii) 1- நைட்ரோ புரப்பேன்

  16. A,B மற்றும் C ஐ கண்டறிக  \(CH_3-NO_2\overset{LiAlH_4}\longrightarrow A\overset{2CH_3CH_2Br}\longrightarrow B \overset{H_2SO_4}\longrightarrow C\)

  17. டை எத்திலமீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
    i) N, N – டை எத்தில் அசிட்டமைடு
    ii) N – நைட்ரசோடை எத்திலமீன்

  18. 4 x 5 = 20
  19. A,B மற்றும் C ஐ கண்ட றிக

  20. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க

  21. ‘A’ என்ற சேர்மத்தின் டை புரோமோ பெறுதியை KCN உடன் வினைப்படுத்தி அமில நீராற்பகுப்பிற்கு உட்படுத்தி வெப்பப்படுத்தும் போது CO2 ஐ வெளியிட்டு ஒரு காரத்துவ அமிலம் ‘B’ ஐ தருகிறது. “B” ஐ திரவ NH3 மற்றும் உடன் வெப்படுத்தி பிறகு Br2 /KOH உடன் வினைப்படுத்த சேர்மம் “C” ஐ கொடுக்கிறது. “C” ஐ NaNO2/HCl உடன் மிக குறைந்த வெப்பநிலையில் வினைப்படுத்தி ஆக்சிஜனேற்றம் செய்யும் போது ஒரு காரத்துவ அமிலம் “D” ஐ தருகிறது. D –ன் மூலக்கூறு நிறை 74 எனில் A, B, C மற்றும் D ஐ கண்டுபிடி.

  22. பின்வரும் வினைவரிசையில் உள்ள A முதல் E வரை உள்ள சேர்மங்களை கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - கரிம நைட்ரஜன் சேர்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Organic Nitrogen Compounds Model Question Paper )

Write your Comment