கரிம நைட்ரஜன் சேர்மங்கள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக மாற்றுகிறது.

    (a)

    Sn / HCl

    (b)

    ZnHg / NaOH

    (c)

    LiAlH4

    (d)

    இவை அனைத்தும்

  2. \(CH_3CH_2Br\overset{aq NaOH}{\underset{\Delta}\longrightarrow}A\overset{KMnO_4/H^+}{\underset{\Delta}\longrightarrow}B\overset{NH_3}{\underset{\Delta}\longrightarrow}C\overset{Br_2/NaOH}\longrightarrow D\) ‘D’ is __________

    (a)

    புரோமோ மீத்தேன்

    (b)

    α - புரோமோசோடியம்  அசிட்டேட்

    (c)

    மெத்தனமீன்

    (d)

    அசிட்டமைடு

  3. அனிலீன் + பென்சோயில் குளோரைடு \(\overset{NaOH}\longrightarrow C_6H_5-NH-COC_6H_5\) இந்த வினையானது __________

    (a)

    ஃப்ரீடல் கிராப்ட் வினை

    (b)

    HVZ வினை

    (c)

    ஸ்காட்டன் பௌமான் வினை

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  4. ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் _______________

    (a)

    கார்பாக்சிலிக் அமிலம்

    (b)

    அரோமேட்டிக் அமிலம்

    (c)

    ஷிப் – காரம்

    (d)

    கீட்டோன்

  5. \(C_6H_5NO_2 \overset{Fe/Hcl}\longrightarrow A \overset{NaNO_2/HCl}{\underset{273K}\longrightarrow} B \overset{H_2O}{\underset{283K}\longrightarrow} C\) is ____________ 

    (a)

    C6H5- OH

    (b)

    C6H5- CH2OH

    (c)

    C6H5- CHO

    (d)

    C6H5NH2

  6. 3 x 2 = 6
  7. C4H9NO2 என மூலக்கூறு வாய்பாட்டில் அமையும் அனைத்து மாற்றியங்களையும் எழுது, IUPAC பெயரிடுக.

  8. CH2NO3 வாய்பாட்டிற்கு இரண்டு மாற்றியங்கள் உள்ளன. இவ்விரண்டையும் எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  9. சிறு குறிப்பு வரைக
    i. ஹாப்மன் புரோமமைடு வினை
    ii. அமோனியாவால் பகுப்பு
    iii. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு
    iv. ஸ்காட்டன் – பெளமான் வினை
    v. கார்பைலமீன் வினை
    vi. கடுகு எண்ணெய் வினை
    vii. இணைப்பு வினை
    viii. டையசோஆக்கல் வினை
    ix. காம்பெர்க் வினை

  10. 3 x 3 = 9
  11. ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய அமீன்களை எவ்வாறு வேறுபடுத்தி அறிவாய்?

  12. பின்வருவனவற்றிற்கு காரணம் கூறு
    i. அனிலீன் பிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை
    ii. அலிபாட்டிக் அமீன்களை விட அரோமேட்டிக் அமீன்களின் டையசோனியம் உப்புகள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டது.
    iii. அனிலீனின் pKb மதிப்பு மெத்திலமீனை விட அதிகம்
    iv. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு வினை ஓரிணைய அமீன்களை தொகுப்பதற்கானது.
    v. எத்தில்மீன் நீரில் கரையும் ஆனால் அனிலீன் கரையாது.
    vi. அமைடுகளை விட அமீன்கள் அதிக காரத்தன்மை உடையது.
    vii. அரோமேட்டிக் எலக்ட்ரான்கவர் பதிலீட்டு வினைகளில் அமினோ தொகுதி o – மற்றும்  p – வழிநடத்தும் தொகுதியாக இருப்பினும்  அனிலீனின் நைட்ரோ ஏற்றம் செய்யும் வினைகளில் m – நைட்ரோ அனிலீன் கணிசமான விளைபொருளாக கிடைக்கிறது.

  13. A,B மற்றும் C ஐ கண்டறிக  \(CH_3-NO_2\overset{LiAlH_4}\longrightarrow A\overset{2CH_3CH_2Br}\longrightarrow B \overset{H_2SO_4}\longrightarrow C\)

  14. 3 x 5 = 15
  15. A,B,C மற்றும் D ஐ கண்டறிக 

  16. பின்வரும் வினையின் A,B,C மற்றும் D ஐக் கண்டறிக.

  17. பின்வரும் வினைவரிசையில் உள்ள A முதல் E வரை உள்ள சேர்மங்களை கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - கரிம நைட்ரஜன் சேர்மங்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Organic Nitrogen Compounds Model Question Paper )

Write your Comment