p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது _______.

    (a)

    NO மற்றும் NO2 கலவை

    (b)

    நைட்ரசோஃபெர்ரஸ் சல்பேட்

    (c)

    பெர்ரஸ் நைட்ரேட்

    (d)

    பெர்ரிக் நைட்ரேட்

  2. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.

    (a)

    6N

    (b)

    4N

    (c)

    2N

    (d)

    இவை எதுவுமல்ல

  3. ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது? 

    (a)

    Br2 > I2 > F2 > Cl2

    (b)

    F2 > Cl2 > Br2 > l2

    (c)

    I2 > Br2 > Cl2 > F2

    (d)

    Cl2 > Br2 > F2 > I2

  4. நைட்ரஜனின் மந்தத் தன்மைக்குக் காரணம், மூலக்கூறுகளின் ________.

    (a)

    அதிக எலக்ட்ரான் கவர்திறன்

    (b)

    குறைந்த எலக்ட்ரான் கவர்திறன்

    (c)

    அதிக பிணைப்பு ஆற்றல்

    (d)

    குறைந்த பிணைப்பு ஆற்றல்

  5. அதிகளவு அம்மோனியா, காப்பர் சல்பேட் கரைசலுடன் வினைபுரிந்து உருவாக்கும் அடர் நீலநிற அணைவு அயனி _______.

    (a)

    [Cu(NO3)2]

    (b)

    [Cu(NH3)2]2+

    (c)

    [Cu(NH3)4]2+

    (d)

    [Cu(NH3)4]2+

  6. மஞ்சள் பாஸ்பரஸை, பாஸ்பீன் வாயுவாக மாற்றும் வினையில் பாஸ்பரஸ் _________ ஆக செயல்படுகிறது.

    (a)

    ஆக்சிஜனேற்றி

    (b)

    ஒடுக்கும் காரணி

    (c)

    வினைவேகமாற்றி

    (d)

    நீராற்பகுப்பு காரணி

  7. திரவ நிலையில் உள்ள ஹேலஜன் _________.

    (a)

    ஃபுளுரின்

    (b)

    குளோரின்

    (c)

    புரோமின்

    (d)

    அயோடின்

  8. ஹேலஜன் அமிலங்களின் வலிமையின் சரியான வரிசை _________.

    (a)

    HF > HCl > HBr > HI

    (b)

    HF < HCl < HBr < HI

    (c)

    HF > HCl < HBr > HI

    (d)

    HF < HCl > HBr < HI

  9. விளம்பர பலகைகளின் விளக்குகளில் பயன்படும் வாயு எது?

    (a)

    He

    (b)

    Ne

    (c)

    Ar

    (d)

    Kr

  10. 1 x 1 = 1
  11. i) கந்தகம் படிக உருவமுடைய மற்றும் படிக உருவமற்ற வடிவங்களில் காணப்படுகிறது
    ii) சாய்சதுர கந்தகம் குறிப்பிட்ட மஞ்சள் நிறத்துடன், S8 மூலக்கூறுகளால் ஆனவை,
    iii) ஒன்றைச் சரிவு காந்தகம் 96oC வெப்பநிலைக்கு மேல் பொதுவாக வெப்பப்படுத்தும் போது சாய் சதுர கந்தகமாக மாறுகிறது
    iv) 140oC வெப்பநிலையில் சாய்சதுர கந்தகமானது உருகி நகரும் இயல்புடைய வெளிர் மஞ்சள் நிற 入 கந்தகம் என்ற திரவத்தை தருகிறது.
    அ) (i) & (ii)
    ஆ) (i) & (iii)
    இ) (ii) & (iii)
    ஈ) (iii) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அ) (i) & (ii)
    சரியான கூற்று: iii) ஒன்றைச் சரிவு காந்தகம் 96oC வெப்பநிலைக்கு மேல் பொதுவாக வெப்பப்படுத்தும் போது ஒற்றைச் சரிவு கந்தகமாக மாறுகிறது
    iv) 140oC வெப்பநிலையில் ஒற்றைச் சரிவு கந்தகமானது உருகி நகரும் இயல்புடைய வெளிர்மஞ்சள் நிற 入 கந்தகம் என்ற திரவத்தை தருகிறது

  12. 1 x 2 = 2
  13. கூற்று (A): ஹேலஜன் அமிலங்களில் HF அமிலம் குறைந்த உருகுநிலை மதிப்புகளைக் கொண்டது
    காரணம் (R): HF அமிலத்தில் வலிமையான ஹைட்ரஜன் பிணைப்பு காணப்படுகிறது
    i) A  மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
    ii) A சரி ஆனால் R தவறு
    iii) A தவறு ஆனால் R சரி
    iv) A மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.

  14. 1 x 2 = 2
  15. வினைத்திறனை பொறுத்து வேறுபட்டது எது?
    அ) F2
    ஆ) Cl2
    இ) Br2
    ஈ) I2

  16. 1 x 2 = 2
  17. i) காரக்கரைசலில் ஓசோனின் சிதைவடையும் வீதம் அதிகரிக்கிறது.
    ii) அமிலக்கரைசலில் ஓசோனின் ஆக்சிசனேற்றத்தின் ஃபுளுரின் மற்றும் அணுநிலை ஆக்ஜிசனை விஞ்சியிருக்கிறது.
    iii) குறிப்பிடத் தகுந்த அளவு ஓசோன் புரா ஊதாக் கதிர்களின் விளைவால் உயர் வளிமண்டலத்தில் உருவாக்கப்படுகிறது
    iv) ஓசோன் மூலக்கூறு நேர்கோடு வடிவமுடையது
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii)
    இ) (iiii) & (iv) 
    ஈ) (i) & (iv)

  18. 6 x 2 = 12
  19. பின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக.
    அ) OF2
    ஆ) O2F2
    இ) Cl2O3
    ஈ) I2O4

  20. ஹீலியத்தின் பயன்களைத் தருக.

  21. நைட்ரிக் அமிலம் ஒரு நைட்ரோ ஏற்ற காரணி என நிரூபி

  22. ஆய்வகத்தில் ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  23. குளோரினின் நிறம் வெளுக்கும் பண்பு பற்றி எழுது

  24. சோடியம் பெர்சினேட் ஒரு வலிமையான ஆக்சிஜனேற்றி என்பதை நிறுவுக 

  25. 4 x 3 = 12
  26. ஆர்கானின் பயன்களைத் தருக.

  27. கந்தக அமிலம் ஆக்சிஜனேற்றி என நிறுவுக

  28. மின்னாற்பகுத்தல் செயல்முறை மூலம் எவ்வாறு குளோரின் தயாரிக்கப்படுகிறது?

  29. செனான் புளுரைடுகளின் தயாரிப்பினை எழுது

  30. 2 x 5 = 10
  31. HF ஆனது ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆனால் பிற ஹாலஜன்களின் இருமை அமிலங்கள் வலிமை மிக்கதாக உள்ளன ஏன் என்பதற்கான காரணம் தருக.

  32. நைட்ரஜனின் ஆக்சோ அமிலங்களின் தயாரிப்பினை எழுது

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி வினாத்தாள் (12th Chemistry - p-Block Elements - II Model Question Paper)

Write your Comment