புறப்பரப்பு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கூற்று :  Al3+  அயனியின் வீழ்படிவாக்கும் திறன் Naஅயனியை விட அதிகம்.
    காரணம் : சேர்க்கப்பட்ட துகள்திரட்டு அயனியின் இணைதிறன் அதிகமாக உள்ள போது, அதன் வீழ்படிவாக்கும் திறனும் அதிகம்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். 

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  2. As2S கூழ்மத்தை திரியச் செய்ய மிகவும் பயனுள்ள மின்பகுளி __________

    (a)

    NaCl

    (b)

    Ba(NO3)

    (c)

    K3[Fe(CN)6

    (d)

    Al (SO4)

  3. ஒரு கூழ்மக்கரைசல் வழியே ஒளிகற்றையை செலுத்தும்போது காணக்கிடைக்கும் நிகழ்வு ___________

    (a)

    எதிர்மின்வாய் தொங்கலசைவு

    (b)

    மின்முனைக்கவர்ச்சி

    (c)

    திரிதல்

    (d)

    டிண்டால் விளைவு

  4. x என்பது பரப்புகவர் பொருளின் அளவு, m என்பது பரப்புப் பொருளின் அளவு எனக் கொண்டால்,  பின்வரும் தொடர்புகளில்  பரப்பு கவர்தல் செயல்முறை யுடன் தொடர்பில்லாதது   எது?

    (a)

     மாறாத T யில் \(\frac{x}{m}\) = f(P)

    (b)

    மாறாத P யில் \(\frac{x}{m}\) = f(T)

    (c)

    மாறாத \(\frac{x}{m}\) யில் P = f(T)

    (d)

    \(\frac{x}{m}\) = PT

  5. ஒரு அயனியின் வீழ்படிவாக்கும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது?

    (a)

    அயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி.

    (b)

    அயனியின் உருவளவை மட்டும்

    (c)

    அயனியின் மின்சுமையளவை மட்டும்

    (d)

    அயனியின் மின்சுமையின் குறியை மட்டும்

  6. 5 x 2 = 10
  7. வீழ்படிவை கூழ்மக் கரைசலாக மாற்றுவதற்காக கூழ்மமாக்கி சேர்க்கப்படுகிறது. இக்கூற்றை  எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  8. கூழ்ம நிலையிலுள்ள  Fe(OH) மற்றும் As2O ஆகியவற்றை ஒன்றாக கலக்கும்போது நிகழ்வதென்ன?

  9. கூழ்மம் மற்றும் களி ஆகிய்வற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

  10. Cu முன்னிலையில் H2 மற்றும் O2 ஆகியன வினை புரிவதால் நீர் உருவாகும் வினையை பின்வருமாறு எழுதலாம்.

  11. CuCl2 முன்னிலையில் காற்றைக் கொண்டு  HCl ஐ ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தல்.

  12. 5 x 3 = 15
  13. பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.

  14. நனைக்கப்பட்ட படிகாரத்தை தேய்க்கும்போது இரத்தக்கசிவு நிறுத்தப்படுவது ஏன்?

  15. ஒரு பொருள் நல்ல வினைவேக மாற்றியாக திகழ பரப்பு நீக்கம் அவசியம். ஏன்?

  16. கூற்றை பற்றி கருத்துரைக்க: கூழ்மம் என்பது ஒரு சேர்மமல்ல, ஆனால் அது சேர்மத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையாகும்.

  17. ஏதேனும் ஒரு திரிதல் முறையை விளக்குக.

  18. 4 x 5 = 20
  19. வினைவேகமாற்ற நச்சுகள் பற்றி குறிப்பு வரைக.

  20. வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை  ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  21. ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

  22. வினைவேக மாற்றம் பற்றிய பரப்பு கவர்தல் கொள்கையை விவரி. [அல்லது ] 
    பலபடித்தான விளைவேகமாற்று விளையில்‌ பரப்பு கவர்தலின் பங்கு என்ன?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - புறப்பரப்பு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Surface Chemistry Model Question Paper )

Write your Comment