Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை? 

  2. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்? 

  3. அமில வேதிக் கழுவுதல் என்றால் என்ன?

  4. போரிக் அமிலத்தின் மீது சோடியம் ஹைடிராக்சைட்டின் வினை யாது?

  5. மந்த இணை விளைவு என்றால் என்ன?

  6. ஏன் ஃ புளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலைலையினைப் பெற்றுள்ளது விளக்குக.

  7. அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?

  8. குளோரினின் பயன்களை எழுது

  9. ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.

  10. பொட்டாசியம் டைகுரோமேட் தயாரித்தலை விளக்குக.

  11. Mn2+ அயனியில் எத்தனை தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன? அவை எவ்வாறு அதன் காந்தத் தன்மையை பாதிக்கின்றன? 

  12. பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு வரிசையில் எழுதுக.
    (i) Mg[Cr(NH3)(Cl)5]
    (ii) Cr(NH3)5Cl]3[CoF6]2
    (iii) [Cr(NH3)3Cl3]

  13. [CuCl4]2- சாத்தியமானது ஆனால் [Cul4]2- சாத்தியமற்றது ஏன்?

  14. அறுங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பினை கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பிலிருந்து வேறுபடுத்துக.

  15. படிக அணிக்கோவைத் தளம் என்றால் என்ன?

  16. பின்வரும் வினைகளில், ஒவ்வொரு வினைபடு பொருள்களைப் பொருத்து வினை வேகங்ககளைக்  குறிப்பிடுக. வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
    அ) \(\\ 5{ Br }^{ - }(aq)+Br{ O }_{ 3 }^{ - }(aq)+{ 6H }^{ + }(aq)\longrightarrow 3{ Br }_{ 2 }(l)+3{ H }_{ 2 }O(l)\)
    சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேகவிதி 
    வினைவேகம் = K[Br-][BrO3-][H+]2
    ஆ) CH3CHO(g)\(\overset { \Delta }{ \longrightarrow } \)CH4(g)+CO(g) சோதனை மூலம் கணடறியப்பட வேகவிதி 
    Rate = K[CH3CHO]\(\frac {3}{2}\)

  17. N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.

  18. HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக.

  19. ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் 0.10M செறிவுடை ய கரைசல் 25oC ல் 1.20% வரை பிரிகையடைகிறது என கண்டறியப்பட்டுள்ளது. அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பை காண்க .

  20. இயற்புறப்பரப்பு கவர்தலை காட்டிலும் வேதிப்புறப்பரப்பு கவர்தலின் பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம் ஏன்?

  21. இருமோல் எத்தில்மெக்னீசியம் புரோமைடுடன் மெத்தில் பென்சோயேட்டை வினைப்படுத்தி பின் அமில நீராற்பகுக்க உருவாகும் முதன்மை விளைபொருள் யாது?

  22. C2H3N எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட சேர்மம் (A) ஆனது அமில நீராற்பகுப்பில் (B)ஐ தருகிறது, (B) ஆனது தயோனைல்குளோரைடுடன் வினைப்பட்டு சேர்மம் (C) ஐ தருகிறது. பென்சீன், நீரற்ற AlCl3 முன்னிலையில் (C) உடன் வினைப்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது.மேலும் (C) ஒடுக்கமடைந்து சேர்மம் (E) ஐ தருகிறது. (A), (B), (C), (D) மற்றும் (E)ஆகியவற்றை கண்டறிக. சமன்பாடுகளை எழுதுக.

  23. பின்வரும் வினைவரிசையில் உள்ள A,B மற்றும் C ஆகிய சேர்மங்களை கண்டறிக
    i) \(C_6H_5NO_2\overset{Fe/HCl}\longrightarrow A\overset{HNO_2}{\underset{273K}\longrightarrow} B\overset{C_6H_5OH}\longrightarrow C\)
    ii) \(C_6H_5N_2Cl\overset{CuCN}\longrightarrow A\overset{H_2O/H^+}\longrightarrow B\overset{NH_3}\longrightarrow C\)
    iii) 
    iv) \(CH_3NH_2\overset{CH_3Br}\longrightarrow A\overset{CH_3COCl}\longrightarrow B\overset{B_2H_6}\longrightarrow C\)
    v) 

    vi) 
    vii) \(CH_3CH_2NC\overset{HgO}\longrightarrow A\overset{H_2O}\longrightarrow B\overset{i) NaNO_2/HCl}{\underset{ii) H_2O}\longrightarrow}\)

  24. பின்வரும் குறைபாட்டு  நோய்களை உருவாக்கும் வைட்டமின்களின் பெயர்களை எழுதுக.
    i) ரிக்கட்ஸ்
    ii) ஸ்கர்வி

  25. வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Chemistry - Full Portion Two Marks Question Paper )

Write your Comment