" /> -->

நிகழ்தகவு பரவல்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. 52 சீட்டுகட்டுகளை உடைய ஒரு சீட்டுக்கட்டிலிருந்து இரு சீட்டுகள் ஒரே சமயத் தில் சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றன. அவ்வா று எடுக்கப்பட்ட  சீட்டுகள் கருப்பாக இருப்பின் சமவாய்ப்பு மாறியான X–இன் மதிப்புகளையும் அதன் நேர்மாறு பிம்பங்களில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கையையும் காண்க.

 2. ஆறு பக்க பகடை ஒன்றின் ஒரு பக்கத்தில் ‘2’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டு பக்கங்களில் ‘3’ எனவும், மீதமுள்ள மூன்று பக்கங்களில் ‘4’ எனவும் உள்ள து. இருமுறை பகடை உருட்டப்படுகிறது. X என்பது இரு உருட்டல்களில் கிடைக்கும் எண்களின் கூட்டுத்தொகையை குறிக்கிறது எனில், X –இன் மதிப்புகளையும் மற்றும் அதன் நேர்மாறு பிம்பங்களில் புள்ளிகளின் எண்ணிக்கையையும் காண்க.

 3. ஒரு தனிநிலை சமவாய்ப்பு மாறி 0, 1, மற்றும் 2 மதிப்புகளை மட்டுமே கொள்ளும் என்க .

  என வரையறுக்கப்பட்ட நிகழ்தகவு நிறை சார்பிற்கு
  (i) k-இன் மதிப்பு (ii) குவிவு பரவல் சார்பு (iii) P (X ≥ 1) ஆகியவற்றைக் காண்க.


 4. எனக் கொடுக்கப்பட்ட ஒரு தனிநிலை சமவாய்ப்பு மாறியின் குவிவு பரவல் சார்பிற்கு (i) நிகழ்தகவு நிறை சார்பு (ii)P(X <1)மற்றும் (iii) P(X ≥ 2)காண்க

 5. சமவாய்ப்பு மாறி X -யின் நிகழ்தகவு அடர்த்தி சார்பு
  எனில் k -ன் மதிப்பைக் காண்க.

 6. சமவாய்ப்பு மாறி X -யின் நிகழ்தகவு அடர்த்தி சார்பு,
   எனில்
  (i) பரவல் சார்பு F(x) (ii) P(−0.5 ≤ X ≤ 0.5) காண்க.

 7. கீழ்க்கா ணும் ஒரு சமவாய்ப்பு மாறி X -ன் நிகழ்தகவு நிறை சார்புகளுக்கு சராசரி மற்றும் பரவற்படி காண்க:

 8. நான்கு சிவப்பு பந்துகள் மற்றும் மூன்று கருப்பு பந்துகள் கொண்ட ஒரு கூடையிலிருந்து பதிலீடாக இடாது அடுத்தடுத்து இரு பந்துகள் வெளியில் எடுக்கப்ப டுகின்றன. சிவப்பு பந்து வெளியில் எடுக்கும் சாத்திய கூறுகளை X என்க . X-ன் நிகழ்தகவு நிறை சார்பையும் சராசரியையும் காண்க.

 9. நான்கு சீரான நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படுகின்றன. தலைகளின் எண்ணிக்கை
  நிகழ்விற்கு நிகழ்தகவு நிறை சார்பு, சராசரி, மற்றும் பரவற்படி காண்க.

 10. 600 டிக்கெட்டுகள் கொண்ட ஒரு லாட்டரியில் ஒரு பரிசு ரூ. 200 -க்கும் நான்கு பரிசுகள்
  ரூ. 100 -க்கும், ஆறு பரிசுகள் ரூ. 50 -க்கும் எனக்கொடுக்கிறது. டிக்கெட் செலவு ரூ. 2 என்றால், ஒரு டிக்கெட்டின் எதிர்பார்க்கப்படும் வெற்றி தொகையைக் கண்டறியவும்.

 11. n = 10, p = \(\frac{1}{5}\)k = 4

 12. n = 9, p = \(\frac{1}{2}\)k = 7

 13. எந்த முயற்சியிலும் ஒரு இலக்கைத் திரு.Qதாக்க நிகழ்தகவு \(\frac{1}{4}\) ஆகும். பத்து முறை இலக்கை அவர் தாக்க முயற்சிக்கிறார் எனக் கொள்க . இலக்கைத் தாக்க (i) சரியாக 4 முறைகள் (ii) குறைந்தபட்ச ம் ஒரு முறை தாக்குவதற்கு ஆகியவற்றிற்கான நிகழ்தகவு காண்க.

 14. ஒரு மின்சோதனையில் ஒரு குறிப்பிட்ட சாதனத்தின் தாங்கும் திறனுக்கான நிகழ்தகவு \(\frac{3}{4}\). சோதிக்கப்பட ஐந்தில் சரியாக மூன்று சாதனங்களின் தாங்கு திறனுக்கா ன நிகழ்தகவைக் கண்டறிக.

 15. 5 சார்பற்ற சோதனைகளை உடைய ஒரு ஈருறுப்பு பரவலின் 1 மற்றும் 2 வெற்றிக்கான
  நிகழ்தகவுகள் முறையே 0.4096 மற்றும் 0.2048 ஆகும். ஈருப்பு பரவலின் சராசரி மற்றும்
  பரவற்படி காண்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Probability Distributions Two Marks Question Paper )

Write your Comment