முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது______.

    (a)

    நிறுமம்

    (b)

    அரசு

    (c)

    சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

    (d)

    பன்னாட்டு நிறுவனங்கள்

  2. நிலை அறிக்கை ஒரு_______.

    (a)

    வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை

    (b)

    சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை

    (c)

    ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு

    (d)

    கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு

  3. தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது______.

    (a)

    தொடக்க முதல் கண்டறிய

    (b)

    இறுதி முதல் கண்டறிய

    (c)

    அவ்வாண்டின் இலாபம் கண்டறிய

    (d)

    அவ்வாண்டின் நட்டம் கண்டறிய

  4. பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் ______.

    (a)

    நட்டம்

    (b)

    ரொக்கம்

    (c)

    முதல்

    (d)

    இலாபம்

  5. கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

    (a)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு

    (b)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு

    (c)

    அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு

    (d)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது

  6. கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது______.

    (a)

    மொத்தக் கடனாளிகள் கணக்கு

    (b)

    மொத்தக் கடனீந்தோர் கணக்கு

    (c)

    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

    (d)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

  7. முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

    (a)

    இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை

    (b)

    ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.

    (c)

    இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

    (d)

    வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை

  8. உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை_____.

    (a)

    ரூ. 85,000

    (b)

    ரூ. 1,06,000

    (c)

    ரூ. 21,000

    (d)

    ரூ. 64,000

  9. தொடக்க முதல் ரூ. 10,000, அவ்வாண்டின் எடுப்புகள் ரூ. 6,000, அவ்வாண்டின் இலாபம் ரூ. 2,000 மற்றும் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 3,000 எனில் இறுதி முதல் காணவும்.

    (a)

    ரூ. 9,000

    (b)

    ரூ. 11,000

    (c)

    ரூ. 21,000

    (d)

    ரூ. 3,000

  10. கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு:?

    (a)

    ரூ. 30,000

    (b)

    ரூ. 1,30,000

    (c)

    ரூ. 40,000

    (d)

    ரூ. 20,000

*****************************************

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் Chapter 1 முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Accountancy Chapter 1 Accounts From Incomplete Records One Marks Model Question Paper )

Write your Comment