p-தொகுதி தனிமங்கள் - II முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

    (a)

    நெஸ்லர் காரணி

    (b)

    IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (c)

    IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (d)

    டாலன்ஸ் வினைப்பொருள்

  2. நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?

    (a)

    குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை உடைய தனிமம்

    (b)

    ஆக்சிஜனைக் காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது

    (c)

    d - ஆர்ப்பிட்டல்கள் உள்ளன

    (d)

    தன்னுடன் p\(\pi\)-p\(\pi\) பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது

  3. பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம் _________.

    (a)

    4

    (b)

    2

    (c)

    3

    (d)

    5

  4. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.

    (a)

    6N

    (b)

    4N

    (c)

    2N

    (d)

    இவை எதுவுமல்ல

  5. கூற்று: குளோரின் வாயுவைக் காட்டிலும் ஃ புளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம்.
    காரணம்: குளோரினானது, ஃபுளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினைப் பெற்றுள்ளது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  6. 5 x 2 = 10
  7. மந்த இணை விளைவு என்றால் என்ன?

  8. சால்கோஜன்சன் p-தொகுதி தனிமங்களாகும் காரணம் தருக.

  9. பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?

  10. ஹீலியத்தின் பயன்களைத் தருக.

  11. IF7ல் அயோடினின் இனக்கலப்பு யாது? அதன் வடிவமைப்பினைத் தருக.

  12. 5 x 3 = 15
  13. குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.

  14. ஆய்வகத்தில் எவ்வாறு குளோரினைத் தயாரிப்பாய்?

  15. கந்தக அமிலத்தின் பயன்களைத் தருக.

  16. கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  17. நைட்ரஜனின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் தருக.

  18. 4 x 5 = 20
  19. PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?

  20. HF ஆனது ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆனால் பிற ஹாலஜன்களின் இருமை அமிலங்கள் வலிமை மிக்கதாக உள்ளன ஏன் என்பதற்கான காரணம் தருக.

  21. ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிக

  22. பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
    அ) BrF5
    ஆ) BrF3

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் Chapter 3 p-தொகுதி தனிமங்கள் - II முக்கிய வினாத்தாள் ( 12th Standard Chemistry Chapter 3 p - Block Elements - II Important Question Paper )

Write your Comment