All Chapter 2 Marks

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    Answer All The Following Question:
    30 x 2 = 60
  1. ஓர் ஆண்டில், ஒரு மொத்த -காகித விற்பனை நிறுவனம் (Whole-sale) 7,50,000 குறிப்பேடுகளில் 6,25,600 குறிப்பேடுகளை விற்பனை செய்துள்ளது. விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கையைக் காண்க.

  2. பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
    33,75,98,482; பத்துக் கோடி

  3. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 'x' இன் 2 மடங்குடன் 56 ஐக் கூட்டுக. 

  4. கோபால், கர்ணனை விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், கர்ணனின் வயது என்ன ?

  5. 500 கி இக்கும் 250 கி இக்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க.

  6. \(\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 4 } ,\frac { 6 }{ 8 } ,\frac { 1 }{ 8 } \) ஆகிய பின்னங்களைச் சிறியதிலிருந்து பெரியது வரை வரிசைப்படுத்துக.

  7. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க .85°

  8. கோணமானியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட படத்திலுள்ள கோணங்களை அளக்க. அவற்றைக் குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம் அல்லது நேர்க்கோணம் என வகைப்படுத்துக.

  9. விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும் போது கிடைக்கும் விளைவுகளை ப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
    1 4 3 5 5 6 6 4 3 5 4 5 6 5 2
    4 2 6 5 5 6 6 4 5 6 6 5 4 1 1

  10. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .

    பள்ளிக்கு வரும் விதம் நடைப் பயணம் மிதிவண்டி ஈருளி பேருந்து மகிழுந்து
    மாணவர்கள் எண்ணிக்கை 350 300 150 100 100
  11. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
    (i)

    (ii)

    (iii)

    (iv)

  12. பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

  13. 31 மற்றும் 55 ஆகிய எண்களை எவையேனும் மூன்று ஒற்றைப் பகா எண்களின் கூடுதலாக எழுதுக.

  14. மூன்று தொடர்ச்சியான எண்களின் பெருக்கற்பலன் ஏப்போதும் 6 ஆல் வகுபடும் என்பதை ஓர்  எடுத்துக்காட்டுடன் மெய்ப்பிக்க.

  15. மலர்கொடி 650 மி.கி அளவுள்ள ஒரு மாத்திரையை வாங்கினார். அதன் எடையைக் கிராமில் குறிப்பிடுக.

  16. கீழ்க்கண்ட செயல்களை 1 நிமிடத்திற்கு உற்று நோக்கித் தகவல்களைச் சேகரிக்க.

    i. மூச்சுகளின் எண்ணிக்கை  ii. தோப்புக்கரணங்களின் எண்ணிக்கை 
    ii. இதயத் துடிப்புகளின் எண்ணிக்கை  iv கைதட்டுகளின் எண்ணிக்கை 
    iii. கண்சிமிட்டும்எண்ணிக்கை  vi. எழுதும் வரி்களின் எண்ணிக்கை 
    iv. நடக்கும் எண்ணிக்கை  viii. படிக்கும் வரிகளின் எண்ணிக்கை 
    v. ஓடும் எண்ணிக்கை  x. கூறும் தமிழ் வினைச் சொற்களின் எண்ணிக்கை 
  17. ஒருவர் ஒரு நாற்காலியை ரூ.1500 க்கு வாங்கினார். தள்ளுபடி ரூ.100 அளித்த பின் ரூ.250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு ?

  18. ஒரு பழ வணிகர் ஒரு கூடைப் பழங்களை ரூ.500க்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்ள்  நசுங்கிவிட்டன. மீதம் உள்ள பழங்களை ரூ.480க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம்  அல்லது நட்டம்  காண்க.

  19. பக்கங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களை அசமபக்க அல்லது இருசமபக்க அல்லது சமபக்க முக்கோணம் என வகைப்படுத்துக.

  20. நான், மூன்று கோணங்களும் 60ஆகக் கொண்ட ஒரு மூடிய உருவம் ஆவேன். நான் யார் ?

  21. முக்கோணத்தில் உள்ள புள்ளிகளைக்  குறிக்கும்  பின்னத்தை  எழுதுக.
     

  22. 12\(\frac { 3 }{ 8 } \) லிருந்து  7\(\frac { 1 }{ 6 } \) ஐக் கழிக்க  

  23. எண் கோட்டில் -4 ஐ  அடைய  3 இன்  இடதுபுறம்  நீ எத்தனை அலகுகள் நகர வேண்டும் ?    

  24. -15 < -26 என்பது சரியா ? ஏன் ?  

  25. ஓர் அசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 40 செ.மீ அதன் இரண்டு பக்கங்கள் 13 செ.மீ மற்றும் 15 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் காண்க.

  26. ஒரு புள்ளித் தாளில் 16 செ.மீ  சுற்றளவு  கொண்ட ஒரு வடிவம் வரைக.

  27. புள்ளிக் கோட்டினைச் சமச்சீர்க்கோடாகக் கொண்டு பின்வரும் படங்களை நிறைவு செய்க.

  28. ஒரு காகிதத்தில் பின்வரும் படங்களை வரைக. ஒவ்வொன்றயும் தனித்தனியே வெட்டியெடுத்து, ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் சரியாகப் பொருந்துமாறு மடிக்கவும்.

    அ) மேற்காணும் படங்களில் எவை ஒன்று, இரண்டு அல்லது பல சமச்சீர்க்கோடுகளைக் கொண்டுள்ளன ?
    ஆ) மேற்காணும் படங்களில் எவை சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கவில்லை ?

  29. கீழ்க்கண்ட அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.
    i) 50, 51, 53, 56, 60, …
    ii) 77, 69, 61, 53,…
    iii) 10, 20, 40, 80, …
    iv) \(\frac{21}{33},\frac{321}{444},\frac{4321}{5555},...\)

  30. கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயல்படுத்துக.
    i) மூன்று உருவங்களாலும் அடைபடும் இடத்தில் 10 ஐ எழுதுக.
    ii) சதுரம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 5 ஐ எழுதுக.
    iii) முக்கோணம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 7 ஐ எழுதுக.
    iv) சதுரம் மற்றும் முக்கோணத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 2 ஐ எழுதுக.
    v) சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தில் மட்டும் அடையுமாறு முறையே 12, 14, 8 ஆகிய எண்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Mathematics All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment