Term 1 விகிதம் மற்றும் விகித சமம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. கீழ்க்காணும் எண்களைத் தேவையான விகிதத்தில் பிரிக்கவும்.
    (i) 3 : 2 விகிதத்தில் 20 ஐப் பிரிக்கவும்

  2. விகித சமமாக எழுத முடியும் 
    விகித சமம் : 
    கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன் 
    நடு உறுப்புகளின் பொருக்கற்பலன் 
    கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன் = நடு உறுப்புகளின் பொருக்கற்பலன் 
    எனவே கொடுக்கப்பட்ட விகிதங்கள் விகிதசமம் 

  3. கீழ்க்காணும் விகிதங்கள் விகித சமமா எனக் காண்க. விகித சமம் எனில் அதன் கோடி
    மதிப்புகளையும் மற்றும் நடு மதிப்புகளையும் கண்டறிந்து எழுதுக.
    (i) 78 லிட்டருக்கும் 130லிட்டருக்கும் உள்ள விகிதம் மற்றும் 12 குப்பிகளுக்கும், 20 குப்பிகளுக்கும் உள்ள விகிதம்
    (ii) 400கிராமுக்கும், 50 கிராமுக்கும் உள்ள விகிதம் மற்றும் ரூ. 25 இக்கும், ரூ. 625 இக்கும் உள்ள விகிதம்.

  4. சில விலங்குகளின் அதிகளவு வேகம் கொடுக்கப்பட்டுள்ளது.
    யானை = 20 கிமீ/மணி, சிங்கம் = 80 கிமீ/மணி, சிறுத்தை = 100 கிமீ/மணி.
    (i) யானை மற்றும் சிங்கம்
    (ii) சிங்கம் மற்றும் சிறுத்தை 
    (iii) யானை மற்றும் சிறுத்தை
    ஆகியவற்றின் விகிதங்களை எளிய வடிவில் காண்க. மேலும், எந்த விகிதம் மிகச் சிறியது எனக் காண்க.

  5. ஒரு பள்ளிச் சுற்றுலாவில் 6ஆம் வகுப்பிலிருந்து 6 ஆசிரியர்களும் 12 மாணவர்களும், 7ஆம் வகுப்பிலிருந்து 9 ஆசிரியர்களும் 27 மாணவர்களும், 8 ஆம் வகுப்பிலிருந்து 4 ஆசிரியர்களும் 16 மாணவர்களும் பங்கு கொள்கிறார்கள் எனில், எந்த வகுப்பில் ஆசிரியர் – மாணவர் விகிதம் குறைவாக உள்ளது ?

  6. 5 x 5 = 25
  7. ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ரூ. 4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.

  8. 1 : 2 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட் டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.

  9. உன் நண்பன் 5 ஆப்பிள்களை ரூ.70 இக்கும், நீ 6 ஆப்பிள்களை ரூ.90 இக்கும் வாங்கினால். யார் வாங்கியது சிறப்பு ?

  10. என்னிடமுள்ள ஒரு பெட்டியில் 3 பச்சை, 9 நீலம், 4 மஞ்சள், 8 ஆரஞ்சு என 24 வண்ணக் கனச் சதுரங்கள் உள்ளன எனில்
    (அ) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கனச் சதுரங்களின் விகிதம் என்ன?
    (ஆ) பச்சை மற்றும் நீலம் கனச் சதுரங்களின் விகிதம் என்ன?
    (இ) ஒரு வண்ணத்தை மற்ற வண்ணங்களோடு ஒப்பிட்டு எத்தனை விகிதங்கள் காணலாம்.

  11. ஒரு பையிலுள்ள பச்சை, மஞ்சள் மற்றும் கருப்புப் பந்துகளின் விகிதம் 4 : 3 : 5 எனில்,
    (அ) பையில், எடுக்க அதிக வாய்ப்புடைய பந்து எது ?
    (ஆ) பையில் கருப்புப் பந்துகளின் எண்ணிக்கை 40 எனில், மொத்தப் பந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
    (இ) பச்சை மற்றும் மஞ்சள் பந்துகளின் எண்ணிக்கையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 1 விகிதம் மற்றும் விகித சமம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 1 Ratio And Proportion Three and Five Marks Question Paper )

Write your Comment