Term 2 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. சுகன் ஒரு ஜீன்ஸ் கால் சட்டையை ரூ 750 க்கு வாங்கினார். அது அவருக்குப் பொருந்தவில்லை. அதை அவருடைய நண்பருக்கு ரூ 710 க்கு விற்பனை செய்தார் எனில் சுகனுக்கு இலாபம் அல்லது நட்டம் காண்க.

  2. ஒருவர் ஒரு நாற்காலியை ரூ.1500 க்கு வாங்கினார். தள்ளுபடி ரூ.100 அளித்த பின் ரூ.250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு ?

  3. ஒரு பழ வணிகர் ஒரு கூடைப் பழங்களை ரூ.500க்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்ள்  நசுங்கிவிட்டன. மீதம் உள்ள பழங்களை ரூ.480க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம்  அல்லது நட்டம்  காண்க.

  4. பாரி ஓர் உந்து வண்டியை ரூ. 55,000 க்கு வாங்கி ரூ. 55,00 இலாபத்திற்கு விற்பனை செய்தார். எனில் உந்து வண்டியின் விற்பனை விலை என்ன ?

  5. ஒருவர் ரூ.300 க்கு 75 மாம்பழங்கள் வாங்கி அவற்றில் 50  மாம்பழங்களை ரூ.300 க்கு விற்பனை செய்தார். அனைத்து மாம்பழங்களும் விற்பனையான பின் அவரது இலாபம் அல்லது நாட்டம் காண்க. 

  6. ஒரு பழ வணிகர் ஒரு டசன் ஆப்பிள்களை ரூ.84 க்கு வாங்கினார். 2 ஆப்பிள்கள் அழுகிவிட்டன. அவருக்கு  ரூ.16 இலாபம் கிடைக்க வேண்டும் எனில், ஒரு அப்பிளின் விற்பனை விலையைக் காண்க.

  7. ஒரு பல்பொருள் அங்காடி  விற்பனையாளர் ரூ.750 க்கு ஒரு கணிப்பானை வாங்கினார்.அதனுள்  ரூ.100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ரூ.50 செலவிட்டார். அதை ரூ.850 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது  எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

  8. ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

  9. ஒரு விற்பனை நிலையம்  ஒரு டசன் பேனாக்களை ரூ.216 க்கு வாங்கியது.மேலும் சில்லறை செலவாக ரூ.50 செலவு செய்தது. பின்பு ஒரு பேனாவிற்கு ரூ.2 குறைத்து விற்பனை செய்ததில் இலாபம் ரூ.50 கிடைத்தது எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

  10. ஒரு எலக்ட்ரீசியன் பயன்படுத்ப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும், குளிர்சாதனப் பெட்டி ஒன்றையும் முறையே ரூ.12,000 க்கும், ரூ.11000 க்கும் வாங்கினார். தொலைக்காட்சிப் பெட்டியைச் சரி செய்ய ரூ.1000 உம்,குளிர்சாதனப் பெட்டிக்கு வண்ணம் செய்ய ரூ.1500 உம் செலவு செய்த பின் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ரூ.15000 மற்றும்  குளிர்சாதனப் பெட்டிக்கு ரூ.15500 என விலை நிர்ணயம் செய்தார். இவை ஒவ்வொன்றுக்கும் ரூ.1000 தள்ளுபடி செய்தார் எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 2 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 2 Bill, Profit And Loss Two Marks Question Paper )

Write your Comment