Term 2 தகவல் செயலாக்கம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. கீழ்காணும் எண்கணிதக் கோவைகளை மரவுரு வரைபடமாக மாற்றுக.
    (i) 8 + (6 x 2)
    (ii) 9 − (2 x 3)
    (iii) (3 x 5) − (4 ÷ 2)
    (iv) [(2 x 4) + 2] x (8 ÷ 2)
    (v) [(6 + 4) x 7] ÷ [ 2 x (10 − 5)]
    (vi) [(4 x 3) ÷ 2] + [8 x (5 − 3)]

  2. ஊட்டியில் நடைபெற்ற பூக்கண்காட்சியில் முதல், இரண்டு, மற்றும் நான்காவது நாட்களில் விற்ற நுழைவுச் சீட்டுகள் முறையே 1,10,010. 75,070, 25,720, 30,636 ஆகும். 4 நாட்களில் மொத்தமாக விற்பனை செய்யப்பட மொத்த நுழைவுச் சீட்டுகள் எத்தனை ? 

  3. ஒரு காகித விற்பனை நிறுவனம் தன்னுடைய இருப்பில் உள்ள 7,50,800 குறிப்பேடுகளில் 6,25,610 குறிப்பேடுகளை ஓர் ஆண்டில் விற்பனை செய்துள்ளாது எனில் அந்நிறுவனத்தில் விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கை காண்க.

  4. (9 x 5) + (10 x 12) ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.

  5. (10 x 9) - (8 x 2) + 3 ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.

  6. 5 x 5 = 25
  7. பின்வரும் இயற்கணிதக் கோவையை மரவுரு வரைபடமாக மாற்றுக.
    (i) 10v
    (ii) 3a − b
    (iii) 5x + y
    (iv) 20t x p
    (v) 2(a + b)
    (vi) (x x y) − (y x z)
    (vii) 4 x + 5y
    (viii) (lm − n) ÷ (pq + r)

  8. பின்வரும் வினாக்களை மரவுரு வரைபடமாக மாற்றுக.
    (i) ஒரு பொது நூலகத்திற்கு கடந்த ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்கள் எண்ணிக்கை முறையே 1210, 2100, 2550, 3160 மற்றும் 3310 ஆகும். அந்த நூலகத்திற்கு ஐந்து மாதங்களில் வருகை புரிந்தவர்கள் மொத்த எண்ணிக்கையை மரவுரு வரைபடமாக மாற்றுக.
    (ii) இராம் வங்கியில் சேமிப்பாக ரூ.7,55,250 ஐ வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக ரூ.5,34,500 ஐத் திரும்ப எடுத்தார். அவரின் கணக்கிலுள்ள மீதித் தொகையைக் காண்க.
    (iii) ஒரு மிதிவண்டித் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 1600 மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டது எனில், 20 நாட்களில் எத்தனை மிதி வண்டிகள் உற்பத்தி செய்யப்படும்?
    (iv) ஒரு நிறுவனம் புது வருடத்திற்கு வெகுமதி தொகையாக (போனஸ்) ரூ.90,000 ஐ 30 ஊழியர்களுக்குச் சமமாகப் பங்கிட்டு வழங்கியது எனில், ஒவ்வொருவரும் பெற்றத் தொகை எவ்வளவு ?  

  9. 10 ஐ விடையாகத் தரக்கூடிய எண்கோவையை எழுதுக. அதனை மரவுரு வரைபடமாக மாற்றுக.

  10. எண்கோவை 3 x 8 - 5 இன் மதிப்பு 19 ஆக கிடைக்குமாறு தகுந்த இடத்தில் அடைப்புக் குறியைப் பயன்படுத்தவும். மேலும் எண்கோவையை மரவுருவில் வரைக.

  11. ஒரு கால்பந்துக் குழு அடுத்தடுத்த 2 நாட்களில் 3 மற்றும் 4 புள்ளிகளைப் பெற்றது. 3 ஆவது நாளில் 5 புள்ளிகளை இழந்தது. அக்குழு பெற்ற மொத்தப் புள்ளிகள் எத்தனை? மேலும் இதனை மரவுரு வரைபடத்தில் குறிக்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 2 Information Processing Three and Five Marks Questions )

Write your Comment