Term 2 அளவைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு 42.195 கி.மீ. ஆகும் இந்தத் தொலைவினை மீட்டரில் கூறுக.

  2. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 998 மி.மீ இதனைச் சென்டி மீட்டரில் மாற்றுக.

  3. முரளியிடம் உள்ள ஒரு பையின் எடை 3 கி.கி 450 கி.இந்த எடையைக் கிராமில் குறிப்பிடுக.

  4. மலர்கொடி 650 மி.கி அளவுள்ள ஒரு மாத்திரையை வாங்கினார். அதன் எடையைக் கிராமில் குறிப்பிடுக.

  5. ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 கிராம் காய்கறி தேவைப்டுகிறது.90 குழந்தைகள் உள்ள பள்ளிக்கு எத்தனை கிலோகிராம் காய்கறி தேவைப்படும் ?

  6. ஒரு முட்டையில் 81 கி.கி.சர்க்கரை உள்ளது. கடைக்காரர் இதனை 750 கி எடையில் சிறிய பைகளில் நிரப்புகிறார் எனில், 81 கிலோ கிராம் சர்க்கரையை எத்தனை சிறிய பைகளில் நிரப்பலாம்?

  7. 12 மணி 18 நிமிடங்கள் 40 வினாடிகளில் இருந்து 10 மணி 20 நிமிடங்கள் 35 வினாடிகளைக் கழிக்க.

  8. கீழ்க்கண்ட நேரங்களுக்கு இடைப்படட கால இடைவெளியைக் காண்க
    (i) 5.30 மு.ப. முதல் 12.40 பி.ப வரை 
    (ii) 1.30 பி.ப முதல் 10.25 பி.ப வரை
    (iii) 20 மணி முதல் 4 மணி வரை
    (iv) 17 மணி முதல் 5.15 மணி வரை

  9. சென்னை எழும்பூரிலிருந்து மதுரை  வரைச் செல்லும் வைகை அதிவிரைவு தொடர்வண்டி (எண் 12635)-இன் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட தகவல்களைப் படித்துப் பதிலளிக்கவும்.

    நிலையம்  வந்து சேரும் நேரம்  புறப்படும் நேரம் 
    சென்னை எழும்பூர் - 13:40
    தாம்பரம் 14:08 14:10
    செங்கல்பட்டு  14:38 14:40
    விழுப்புரம்  15:50 15:55
    விருத்தாசலம்  16:28 16:30
    அரியலூர்  17 :04 17 :05
    திருச்சி  18:30 18:35
    திண்டுக்கல்  20:03 20:05
    சோழவந்தான்  20:34 20:35
    மதுரை  21:20 -

    i) வைகை அதிவிரைவு வண்டி எத்தனை மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேருகிறது ? 
    ii) சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன ?
    iii) விழுப்புரம் நிலையத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது ?
    iv) சோழவந்தனுக்கு வந்து சேரும் நேரம் என்ன ?
    v) சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வந்து சேர ஆகும் மொத்த பயண நேரத்தைக் காண்க.

  10. மாணிக்கம் 20.02.2017 அன்று சதுரங்க வகுப்பில் சேர்ந்தார். தேர்வின் காரணமாக  20 நாட்களுக்குப் பிறகு பயிற்சி வகுப்புக்குச் செல்லவில்லை. மீண்டும் அவர் 10.07.2017 முதல் 31.03.2018 வரை  சதுரங்கப் பயிற்சி வகுப்புக்குச் சென்றார் .எத்தனை நாள்கள் அவர் பயிற்சி வகுப்பிற்குச்  சென்றார் எனக் கணக்கிடுக.

  11. 2020 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு  தினத்திற்கும், கல்வி வளர்ச்சி நாளுக்கும் இடையில்  உள்ள  நாள்களைக் கணக்கிடுக.

  12. 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை எனில் அதே ஆண்டு சூலை 20 ஆம் தேதி என்ன கிழமை ?

  13. சரவணன் என்பவர் 5 கி.மீ தொலைவுள்ள சாலையின் ஒரு புறத்தில் 2 மீ 50 செ.மீ இடைவெளியில் மரக்கன்றுகளை நடுகிறார். அவரிடம் 2560 மரக்கன்றுகள் இருந்தால் எத்தனை மரக் கன்றுகளை நட்டிருப்பார்? மீதமுள்ள மரக்கன்றுகள் எத்தனை ?

  14. ஓர் அணில் தானியங்கள் உள்ள இடத்தை விரைவாக அடைய விரும்புகிறது. அது செல்ல வேண்டிய குறைந்த தொலைவுள்ள பாதையைக் கண்டுபிடிக்க உதவுங்கள். (அளவுகோளைப் பயன்படுத்திக் கோட்டுத் துண்டுகளை அளக்குவும் )

  15. சீதா முற்பகல் 5.20 மணிக்குத் துயில் எழுந்து 35 நிமிடங்கள் தன்னைத் தயார் செய்து  கொண்டு, 15 நிமிடத்தில் தொடர் வண்டி நிலையத்தை அடைந்தாள். தொடர் வண்டி சரியாக முற்ப்கல் 6 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது எனில் பூங்கோதை அந்த தொடர் வண்டியில் பயணம் செய்திருப்பாரா ?

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 2 அளவைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 2 Measurements Two Marks Question Paper )

Write your Comment