Term 3 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. கொடுக்கப்பட்ட 4 x 4 சதுரக் கட்டத்தை உற்றுநோக்குக, மேலும் கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எண் வரிசை அடுக்குகளின் தனித்தன்மையானது 139 என்ற கூடுதலைத் தருகிறது என்பதனை அறிக.
    அறிவுறுத்தல்கள்:
    எண்களை நிரை வாயிலாகக் கூட்டுக.
    எண்களை நிரல் வாயிலாகக் கூட்டுக.
    எண்களை மூலை விட்டங்களின் வாயிலாகக் கூட்டுக.
    சதுரத்தின் நான்கு மூலையில் உள்ள எண்களைக் கூட்டுக.
    கொடுக்கப்பட்ட சதுரத்தை நான்கு 2 x 2 சதுரங்களாகப் பிரித்து ஒவ்வொரு சதுரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து எண்களையும் கூட்டுக.

  2. 188 மற்றும் 230 இன் மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.

  3. 1 முதல் 50 வரை உள்ள எண்களை எழுதி அதிலிருந்து கீழ்கண்டவற்றை கண்டறிக.
    i) 2 மற்றும் 7 ஆலும் வகுப்படாத எண்கள்
    ii) 25 மற்றும் 40 க்கும் இடைப்பட்ட பகா எண்கள்
    iii) 50 க்குள் உள்ள சதுர எண்கள்

  4. கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி அட்டவணையை நிறைவு செய்க.

    A B C
    D E F
    G H I

    A : பிபனோசி தொடரின் 6வது எண்
    B : 2இன் முன்னி
    C : 2 மற்றும் 3 இன் மீ.சி.ம
    D : 6 மற்றும் 20 இன் மீ.பொ.கா
    E : \(1\over 5\)இன் தலைகீழ்
    F : -7 இன் எதிரென்
    G : முதல் பகு எண்
    H : 3செ.மீ பக்க அளவுள்ள சதுரத்தின் பரப்பளவு
    I : சமபக்க முக்கோணத்தில் உள்ள சமசீர் கோடுகளின் எண்ணிக்கை அட்டவணையை நிரப்பிய பின் நீங்கள் உற்று நோக்கி காண்பது என்ன ?

  5. 1H203W 4A5R6E 7Y809U ? என்ற அமைப்பை உற்று நோக்கி, எண்களை மறைக்கும் பொது எண்களுக்கு இடையே அமைந்த சொற்களை காண்க.

  6. 5 x 5 = 25
  7. உன் வீட்டில் நாள்தோறும் மாலை படிப்பதற்கான கால அட்டவணையை தயார் செய்க.

  8. வடிவியல் அமைப்பை உற்று நோக்குக. மேலும் கீழ்கண்ட வினாகளுக்கு விடையளிக்க 

    i) இந்த வடிவியல் தொடர் வளர் அமைப்பில் பயன்படுத்தப்பட்ட குச்சிகளின் எண்ணிக்கை?
    ii) அடுத்த வடிவியல் அமைப்பை வரைந்து அதில் எத்தனை குச்சிகள் பய்னபடுத்தப்பட்டுள்ளன எனக் காண்க.

  9. 28, 35, 42 மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.

  10. கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி உன்னுடைய பெயரை OMR தாளில் நிரப்புக
    இடமிருந்து வலமாக உன்னுடைய பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும்.
    ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே ஒரு எழுத்து மட்டும் இருக்க வேண்டும்.
    கடைசியில் உள்ள நிரப்பப்படாத கட்டங்களை விட்டு விட வேண்டும்
    பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களுக்கு நேராகக் கீழே உள்ள வட்டங்களை நிழலிட வேண்டும்

  11. அஞ்சல் அட்டையில் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் எடுத்துக்கொள்க. அஞ்சல் குறியீட்டு எண்களைக் கொண்டு எவ்வாறு கடிதங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன ?
    604506 ; 604516 ; 604560 ; 604506 ; 604516 ; 604516 ; 604560 ; 604516 ; 604505 ; 604470 ; 604515 ; 604520 ; 604303 ; 604509 ; 604470.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 3 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Information Processing Three and Five Marks Question Paper )

Write your Comment