Important Question Part-II

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    9 x 1 = 9
  1. 24 ÷ {8 − (3 x 2)} இன் மதிப்பு

    (a)

    0

    (b)

    12

    (c)

    3

    (d)

    4

  2. 'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

    (a)

    30 + w 

    (b)

    30 w 

    (c)

    7 + w 

    (d)

    7w 

  3. 4 : 7 இன் சமான விகிதமானது.

    (a)

    1 : 3

    (b)

    8 : 15

    (c)

    14 : 8

    (d)

    12 : 21

  4. படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?

    (a)

    E

    (b)

    F

    (c)

    G

    (d)

    H

  5. ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?

    (a)

    கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது

    (b)

    செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது

    (c)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது

    (d)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது

  6. இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு 

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    0

  7. எது பெரியது ? 0.007 கி, 70 மி.கி, 0.07 செ.கி.

    (a)

    0.07 செ.கி

    (b)

    0.007 கி

    (c)

    70 மி.கி

    (d)

    அனைத்தும் சமம் 

  8. தள்ளுபடி = குறித்த விலை-_______________.

    (a)

    இலாபம் 

    (b)

    விற்பனை விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    அடக்க விலை

  9. ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.

    (a)

    குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம் 

    (b)

    குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம் 

    (c)

    செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம் 

    (d)

    குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்

  10. Section - II

    16 x 2 = 32
  11. செய்தித்தாள் மற்றும் இதழ்களிலிருந்து 5 அல்லது 6 அல்லது 7 இலக்க எண்களைக் கண்டுபிடித்துப் பத்தாயிரத்துக்கு முழுமையாக்குக

  12. பின்வரும் உருவங்களை அமைக்க எத்தனை பனி இனிப்புக் குச்சிகள் தேவைப்படும்? மாறியின் விதியை எழுதுக.
    அ) C இன் அமைப்பு 
    ஆ) M இன் அமைப்பு  

  13. ஒரு மகிழுந்து 5 கிகி எரிபொருள் (LPG) வாயுவைப் பயன்படுத்தி 125 கிமீ தொலைவு கடக்கிறது. 3 கிகி எரிபொருள் பயன்படுத்தினால் எவ்வளவு தொலைவு கடக்கும்?

  14. படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.

    (i) அனைத்துச் சோடி இணைகோடுகள்
    (ii) அனைத்துச் சோடி வெட்டும் கோடுகள்.
    (iii) V-ஐ வெட்டும் புள்ளியாகக் கொண்ட கோடுகள்
    (iv) கோடுகள் 'I2' மற்றும் 'I3' இன் வெட்டும் புள்ளி
    (v) கோடுகள் 'I1' மற்றும் 'I5' இன் வெட்டும் புள்ளி

  15. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .

    பள்ளிக்கு வரும் விதம் நடைப் பயணம் மிதிவண்டி ஈருளி பேருந்து மகிழுந்து
    மாணவர்கள் எண்ணிக்கை 350 300 150 100 100
  16. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
    (i)

    (ii)

    (iii)

    (iv)

  17. 143 கணித நுல்களை எல்லா அடுக்குகளிலும் சம எண்ணிக்கையில் அடுக்கி வைத்தால், ஒவ்வோர் அடுக்கிலும் உள்ள நூல்களின் எண்ணிக்கை மற்றும் அடுக்குகளின் எண்ணிக்கையைக் காண்க.

  18. இரு எண்களின் மீ.சி.ம 210 மற்றும் மீ.பெ.கா 14 என்றுள்ளவாறு எத்தனை எண்சோடிகள் சாத்தியமாகும் ?

  19. இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.

  20. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 998 மி.மீ இதனைச் சென்டி மீட்டரில் மாற்றுக.

  21. ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 கிராம் காய்கறி தேவைப்டுகிறது.90 குழந்தைகள் உள்ள பள்ளிக்கு எத்தனை கிலோகிராம் காய்கறி தேவைப்படும் ?

  22. ஒருவர் ஒரு நாற்காலியை ரூ.1500 க்கு வாங்கினார். தள்ளுபடி ரூ.100 அளித்த பின் ரூ.250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு ?

  23. ஒரு பழ வணிகர் ஒரு கூடைப் பழங்களை ரூ.500க்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்ள்  நசுங்கிவிட்டன. மீதம் உள்ள பழங்களை ரூ.480க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம்  அல்லது நட்டம்  காண்க.

  24. ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

  25. பக்கங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களை அசமபக்க அல்லது இருசமபக்க அல்லது சமபக்க முக்கோணம் என வகைப்படுத்துக.

  26. கோணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களைக் குறுங்கோண அல்லது செங்கோண அல்லது விரிகோண முக்கோணம் என வகைப்படுத்துக.

  27. Section - III

    12 x 3 = 36
  28. முழு எண்களின் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக
    4 \(\times\) 132 \(\times\) 25

  29. அறிவழகன் அவரது தந்தையைவிட 30 வயது இளையவன். அறிவழகனின் வயதை அவரது தந்தையின் வயதைக் கொண்டு எழுதவும்.

  30. அகிலன் 1 மணி நேரத்தில் 10 கிமீ நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கிமீ நடக்கிறாள். எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க.

  31. பின்வரும் கோணங்களைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக. 90°

  32. கொடுக்கப்பட்ட தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக.
    உனக்கு ஏற்றாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க.

    மாதம் ஜூன் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர்
    விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை 300 450 600 550
  33. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  34. இரு சார்பகா எண்களின் மீ.சி.ம 5005. ஓர எண் 65 எனில், மற்சறார எண் என்ன?

  35. 1 மீ 20 செ.மீ, 3 மீ 60 செ.மீ மற்றும் 4 மீ அைளவுகளைக் கொண்ட கயிறுகளின் நிலங்களைச் சரியாக அளக்கப் பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம் என்ன?

  36. கீழின அலகாக மாற்றுக:
    (i) 15 கி.மீ (மீ, செ.மீ, மி.மீ)
    (ii) 12 கி.கி (கி, மி.கி)

  37. மாறன் ஒவ்வொரு நாளும் 1.5கி.மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார்.அதே நேரம் மகிழன் 1400 மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். இவர்களுள் யார் கூடுதல் தொலைவு நடக்கிறார்?எவ்வளவு தொலைவு கூடுதலாக நடக்கிறார் ?

  38. குணா தனது பொருளை ரூ.325 எனக் குறித்து ரூ.30 தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக்  காண்க.

  39. 8 செ.மீ, 3 செ.மீ மற்றும் 4 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?

  40. Section - IV

    10 x 5 = 50
  41. ஒரு நகை வியபாரி தனது வங்கிக் கணக்கில் ஜனவரி மாதம் ரூ 17,53,740 உம் பிப்ரவரி மாதம் ரூ 15,34,300 உம் செலுத்துகிறார். அவர் இரு மாதங்களில் செலுத்திய தொகையின் கூடுதலையும் வித்தியாசத்தையும் ஆயிரத்தில் முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பைக் காண்க

  42. பின்வரும் எண் அமைப்பினை நிரப்புக.
    9 − 1 =
    98 − 21 =
    987 − 321 =
    9876 − 4321 =
    98765 − 54321 =
    அடுத்து வரும் எண் அமைப்பை எழுதுக.

  43. அமெரிக்காவின் பிரபலமான தங்க நுழைவு வாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஒரு கண்காட்சியில் பயன்படுத்தப்ப ட்ட அதன் மாதிரிப் பாலத்தின் நீளம் 60 அடி மற்றும் உயரம் 7 அடியாகும். பயன்படுத்தப்பட்ட பாலத்தின் மாதிரி ஆனது உண்மைப் பாலத்திற்கு விகித சமமாக உள்ளதா ?

  44. கொடுக்கப்பட்டுள்ள படங்களில் குறுங்கோணங்களைக் கண்டறிக.

  45. பிருந்தா வெவ்வே று பாடங்களின் அடைவுத்தே ர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் விழுக்காடு பட்டை வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.

    பட்டை வரைபடத்தை உற்றுநோக்கிப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
    (i) செங்குத்துக்கோட்டில் 1 அலகு = __________ % மதிப்பெண்கள்.
    (ii) பிருந்தா __________ பாடத்தில் மிகவும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள் .
    (iii) பிருந்தா __________ பாடத்தில் மிகக் குறைந்த  மதிப்பெண்  பெற்றுள்ளாள் .
    (iv) அறிவியல் பாடத்தில் பிருந்தா பெற்ற  மதிப்பெண் விழுக்காடு __________.
    (v) __________ பாடத்தில் பிருந்தா 60% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    (vi) பிருந்தா __________ பாடத்தை விட __________ பாடத்தில் 20% அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள்.

  46. பின்வரும் படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?
    (i)

    (ii)

  47. ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும் ?

  48. சென்னை-திருச்சி விரைவு வண்டியின் வந்து சேரும் நேரமும், புறப்படும் நேரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    நிலையம்  வந்து சேரும் நேரம் புறப்படும் நேரம்
    சென்னை எழும்பூர்  - 20.30
    செங்கல்பட்டு  21.30 21.32
    விழுப்புரம் சந்திப்பு  23.15 23.25
    விருத்த்தச்சலம் சந்திப்பு  00.07 00.10
    திருச்சி 04.30 -

  49. இரம்யா  சில ஒப்பனைப்  பொருள்களை வாங்கிக் கொண்டு பின்வரும் பட்டியலைப் பெறுகிறார்.

                                ரொக்கப் பட்டியல்
           சாந்தி அலங்காரப் பொருள்கள் அங்காடி, தஞ்சாவூர் 
    பட்டியல் எண்:100                                                           நாள் : 15.05.2018
    வ.எண் பொருள்கள்  விலை(ரூ.இல்) அளவு  தொகை(ரூ.இல்)
    1.
    2.
    3.
    4.
    தலைமுடிக் கவ்வி (Hair clip)
    தலைமுடிச் செருகி(Hair pin)
    நாடா(Ribbon)
    கைக்குட்டை(Hand kerchief)
    15 /ஒன்று
    10 /ஒன்று
    12 /மீட்டர்
    25 /ஒன்று
    6
    4
    3
    2
    90
    40
    36
    50
      மொத்தம்      216

    பட்டியலைக் கவனித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
    (i) பட்டியல் எண் என்ன ?
    (ii) பொருள்கள் வாங்கப்பட்ட தேதியைக் குறிப்பிடுக.
    (iii) வாங்கப்பட்ட வெவ்வேறு  பொருள்கள் எத்தனை ?
    (iv) ஒரு தலைமுடிக் கவ்வியின் விலை என்ன ?
    (v) நாடாவின் மொத்த விலை என்ன ?

  50. கொடுக்கப்பட்டுள்ள கோட்டின் மீதுள்ள ஒரு புள்ளியில் இருந்து அக்கோட்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 6th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Question All Chapter 2019-2020 )

Write your Comment