" /> -->

7 ஆம் வகுப்பு அறிவியல் T3 - ஒளியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

  பகுதி 1

  10 x 1 = 10
 1. ஆடியில்படும் ஒளியானது __________

  (a)

  ஊடுருவிச் செல்கிறது

  (b)

  எதிரொளிப்பு அடைகிறது

  (c)

  உட்கவரப்படுகிறது

  (d)

  விலகலடைகிறது

 2. ._____ பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது.

  (a)

  நீர்

  (b)

  குறுந்தகடு

  (c)

  கண்ணாடி

  (d)

  கல்

 3. ஒளி என்பது ஒரு வகை ____

  (a)

  பொருள்

  (b)

  ஆற்றல்

  (c)

  ஊடகம்

  (d)

  துகள்

 4. நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளபளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால் மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது.ஏனெனில்______

  (a)

  ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மேஜையின் நடைபெறுகிறது.

  (b)

  ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மேஜையில் நடைபெறுகிறது.

  (c)

  இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.

  (d)

  .இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.

 5. பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?

  (a)

  கண்ணாடி

  (b)

  மரம்

  (c)

  நீர்

  (d)

  மேகம்

 6. ஒளியானது ______ எதிரொளிப்பு நடைபெறுகிறது.

  (a)

  எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது

  (b)

  எதிரொளிக்கும் பரப்பை அணுகும் போது

  (c)

  எதிரொளிக்கும் பரப்பின் வழியே செல்லும்போது

  (d)

  மேற்கூறிய எதுவும் இல்லை

 7. கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?

  (a)

  பிளாஸ்டிக் தட்டு

  (b)

  சமதள ஆடி

  (c)

  சுவர்

  (d)

  காகிதம்

 8. சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலானது ______

  (a)

  தோன்றாது

  (b)

  காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்திசையில் தோன்றும்.

  (c)

  காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது. மற்றும் நிழல், சூரியனின் அதே திசையில் தோன்றும்

  (d)

  காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது.

 9. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் _______ 

  (a)

  ஒளியானது நேர்கோட்டில் செல்லும்.

  (b)

  ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்லும்போது தலைகீழாகச் செல்கிறது.

  (c)

  ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்கிறது.

  (d)

  ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.

 10. பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது?
  1. ஒளி நேர்கோட்டில் செல்கிறது.
  2. ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை.
  3. எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது.
  4. இடவல மாற்றம் அடைகிறது.

  (a)

  அ மற்றும் ஆ

  (b)

  அ மற்றும் ஈ

  (c)

  அ மற்றும் இ

  (d)

  அ மட்டும்

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் T3 - ஒளியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T3 - Light Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment