" /> -->

நேர் மற்றும் எதிர் விகிதங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. ஒரு டசன் (dozen)  வாழைப்பழங்களின் விலை ரூ.20 எனில், 48 வாழைப் பழங்களின் விலை என்ன?

 2. ஒரு மாயாஜாலக் காட்சியைக் கண்டுகளிக்க 21 மாணவர்களுக்கு ரூ.840 நுழைவுக் கட்டணமாகச் செலுத்தப்பட்டது. ரூ.1680 ஐ நுழைவுக் கட்டணமாகச் செலுத்தினால் எத்தனை மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும்?

 3. ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணிநேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில், அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்?

 4. அரை மீட்டர் துணியின் விலை ரூ.15 எனில், 8\(\frac { 1 }{ 3 } \) மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு?

 5. 30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், 20 நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள்? (அலகு முறையைப் பயன்படுத்துக)

 6. வள்ளி 10 பேனாக்களை ரூ.108 இக்கு வாங்குகிறார். கமலா 8 பேனாக்களை ரூ.96 இக்கு வாங்குகிறார். இருவரில் யார் குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கினர்? (அலகு முறையைப் பயன்படுத்துக)

 7. ஒரு நீர்த்தேக்கத் தொட்டியைநிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன. ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?

 8. 500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம் மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (parcels) அவள் அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத்தின் (parcel) எடை எவ்வளவு இருக்கும்?

 9. ஒரு தோட்டத்தை களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள் தேவை?

 10. 7 கி.கி வெங்காயத்தின் விலை ரூ.84 எனில் பின்வருவனவற்றைக் காண்க
  (i) ரூ.180 இக்கு வாங்கிய வெங்காயத்தின் எடை
  (ii) 3 கி.கி வெங்காயத்தின் விலை.

 11. தமிழ்ச்செல்வன் ரூ.5000 ஐ மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கிக்கணக்கில் சேமித்து வருகிறார். அவர் ரூ.1,50,000 ஐ சேமிக்க எத்தனை வருடங்களாகும்?

 12. 6 பழரசப் பாட்டில்களின் விலை ரூ.210 எனில், 4 பழரசப் பாட்டில்களின் விலை என்ன?

 13. ஒரு சரக்கு வண்டி 594 கி.மீ தூரத்தைக் கடக்க 108 லி டீசல் தேவைப்படுகிறது எனில், அவ்வண்டி 1650 கி.மீ தூரத்தைக் கடக்கத் தேவைப்படும் டீசலின் அளவு எவ்வளவு?

 14. 105 நோட்டுப் புத்தகங்களின் விலை ரூ.2415. ரூ.1863 இக்கு எத்தனை நோட்டு புத்தகங்கள் வாங்கலாம்?

 15. 10 விவசாயிகள் 21 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர்?

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - நேர் மற்றும் எதிர் விகிதங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths - Direct And Inverse Proportion Two Marks Questions )

Write your Comment