" /> -->

எண்ணியல் இரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1.  கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
  (i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
  (ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
  (iii) (−100)+(-10)
  (iv) 20+(-72)
  (v)82+(-75)
  (vi) -48+(-15)
  (vii) -225+(-63)

 2. ஒரு வினாடி வினாவில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு A பெற்ற மதிப்பெண்கள்+30,–20, 0 மற்றும் குழு B பெற்ற மதிப்பெண்கள் –20, 0, +30 எனில், வெற்றி பெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?

 3. (11+7)+10 மற்றும் 11+(7+10)சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?

 4. கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க.
  (i) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: –3–(–4)
  (ii) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: 7–(–10)
  (iii) 35-(-64)
  (iv) -200-(+100)

 5. (–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?

 6. பெருக்கற் பலனைக் காண்க.
  (i) (-35)×22
  (ii) (-10)×12(-9)
  (iii) (-9)×(-8)×(-7)×(-6)
  (iv) (-25)×0×45×90
  (v) (-2)×(+50)×(-25)×4

 7. பெருக்கற் பலன்−50 ஐத் தரக்கூடிய அனைத்துச் சோடி முழுக்களையும் காண்க.

 8. 30 நாள்கள் நடைப்பயணத்திற்குப் பிறகு, நான் 4800 கலோரிகள் இழந்திருந்தேன், என் கலோரி இழப்பு சீரானது எனில், ஒரு நாளில் இழந்த கலோரியைக் காண்க.

 9. மதிப்பு காண்க: (–25) + 60 + (–95) + (–385)

 10. காஷ்மீரில், ஒரு நாள் இரவின்  வெப்ப நிலை –5˚C. மறுநாள், அவ்வெப்பநிலை 9˚C ஆக உயர்ந்தது எனில், அதிகரித்த வெப்ப அளவினைக் காண்க.

 11. என்னுடன் 2 ஐக் கூட்டுங்கள். பிறகு 5 ஆல் பெருக்கவும், அதிலிருந்து 10 ஐக் கழிக்கவும். அதனை நான்கால் வகுத்தால் 15 கிடைக்கும் எனில், நான் யார்?

 12. P =−15 மற்றும் Q = 5 எனில், (P-Q) ÷ (P+Q) ஐக் காண்க.

 13. கண்ணன் ஒரு பழ வணிகர். அவர் ஒரு பழத்திற்கு ரூ.2 வீதம் நட்டத்தில், 1 டஜன் வாழைப் பழங்களை விற்றால், அவரது இழப்புத் தொகையைக் கணக்கிடுக.

 14. ஒரு நீர்மூழ்கிக் கப்பல், கடல் மட்டத்திலிருந்து 650 அடி ஆழத்தில் உள்ளது. அது 200 அடி கீழிறங்கினால், அது இருக்கும் ஆழத்தைக் காண்க

 15. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க.
  (i) (-75) ÷ 5
  (ii) (-100) ÷ (-20)
  (iii) 45 ÷ (-9)
  (iv) (-82) ÷ 82

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - எண்ணியல் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths - Number System Two Marks Model Question Paper )

Write your Comment