" /> -->

Term 1 இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. 3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

    (a)

    mn

    (b)

    −mn

    (c)

    2mn

    (d)

    3mn

  2. ‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

    (a)

    0

    (b)

    2a

    (c)

    -2a

    (d)

    -a

  3. 3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

    (a)

    n

    (b)

    2n

    (c)

    3n

    (d)

    4n

  4. 3x + 5 = x + 9 என்பதன் தீர்வு

    (a)

    2

    (b)

    3

    (c)

    5

    (d)

    4

  5. y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

    (a)

    0

    (b)

    -1

    (c)

    1

    (d)

    -2

  6. 5 x 2 = 10
  7. பின்வருவனவற்றுள் ஒத்த உறுப்புகளை வகைப்படுத்துக : 7x, 5y, −8x, 12y, 6z, z, −12x, −9y, 11z.

  8. x = 2 மற்றும் y = 3, எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக்  காண்க.
    (i) 2x − 3y
    (ii) x + y
    (iii) 4y − x
    (iv) x + 1 − y

  9. கழிக்க:
    (i) 12k லிருந்து 4k
    (ii) 25q லிருந்து 15q
    (iii) 17xyz லிருந்து 7xyz

  10. தீர்க்க:
    (i) x + 5 = 8
    (ii) p − 3 = 7
    (iii) 2x=30
    (iv) \(\frac { m }{ 6 } \)=5
    (v) 7x+10=80

  11. 5a − 3b + 2c உடன் எந்தக் கோவையைக் கூட்டினால், a − 4b − 2c கிடைக்கும்?

  12. 5 x 3 = 15
  13. பின்வரும் உறுப்புகளின் எண்கெழுக்களைச் காண்க. மேலும், ஒவ்வொரு உறுப்பிற்கும் x மற்றும் y இன் கெழுக்களைக் காண்க: 3x, - 5xy, - yz, 7xyz, y, 16yx.

  14. m = 2, n = -1 எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
    (i) 3m + 2n
    (ii) 2m − n
    (iii) mn − 1

  15. ஒருவர் ரூ.960 இக்கு ரூ.1,  ரூ.5 மற்றும் ரூ.10 ஆகிய மதிப்பிலான பணத் தாள்களை வைத்துள்ளார். இம்மூன்று மதிப்பிலுள்ள பணத்தாள்களின் எண்ணிக்கையும் சமமெனில், அவரிடமுள்ள மொத்தப்  பணத்தாள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

  16. 60 மாணவர்களுடன் ஒரு பள்ளிப்பேருந்து புறப்பட்டது. முதல் நிறுத்தத்தில் சில மாணவர்கள் இறங்கினார்கள். இரண்டாம் நிறுத்தத்தில், முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு மாணவர்கள் இறங்கினார்கள். மூன்றாம் நிறுத்தத்தில் 6 மாணவர்கள் இறங்கிய பிறகு, பேருந்தில் 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர் எனில், முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

  17. ஒரு மட்டைப்பந்து அணி (Cricket Team) கலந்து கொண்ட  போட்டிகளில், தோற்றதை விட இரு ஆட்டங்கள் அதிகமாக வென்றார்கள். வெற்றிக்கு 5 புள்ளிகளும், தோல்விக்கு − 3 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த அணி மொத்தத்தில் 50 புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த அணி கலந்துகொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கையைக் காண்க.

  18. 4 x 5 = 20
  19. கழிக்க:
    i) 11pq லிருந்து 7pq
    ii) a லிருந்து -a
    iii) 21x + 9 லிருந்து 5x+7

  20. i) கூட்டுக: 3x − 4y + z and 2x − z + 3y
    ii) 4x + 3y லிருந்து, 2x − 5y -ஐக் கழிக்க.

  21. இரவு உணவு சாப்பிடுவதற்காக மணி தன் நண்பன் முகமது உடன் உணவகம் சென்றான். 2 இட்லிகளும், 2 தோசைகளும் மணி சாப்பிட்டான். முகமது 4 இட்லிகளும், 1 தோசையும் சாப்பிட்டான். x மற்றும் y முறையே, ஒரு இட்லியின் விலை மற்றும் ஓர் தோசையின் விலை எனில், அவர்கள் செலுத்தவேண்டிய பட்டியல் தொகையை (bill amount) x மற்றும் y இல் கணக்கிடுக.

  22. ராணி வேலைக்குச் சென்ற முதல் நாள் ரூ.200 கூலியாகப் பெற்று, அதிலிருந்து ஒரு தொகையை அன்றே செலவு செய்தாள். மறுநாள் Rs.300 கூலியாகப் பெற்று, அதிலிருந்து முதல்நாள் செலவழித்ததைப்போல், இருமடங்கு செலவு செய்தாள். மூன்றாம் நாள் ரூ.400 கூலியில், முதல் நாளைப்போல் 4 மடங்கு செலவு செய்தாள். இந்தச் சூழலிலிருந்து. அவளிடம் மூன்றாம் நாள் இறுதியில் மீதமிருக்கும் மொத்தத் தொகையைக் கணக்கிட உதவும் இயற்கணிதக் கோவையை உருவாக்குக.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - Term 1 இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 Algebra Model Question Paper )

Write your Comment