Term 1 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. பின்வரும் கோவைகளில் மாறி, உறுப்புகள் மற்றும் உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
    (i)12−x
    (ii) 7 + 2y
    (iii) 29+3x+5y
    (iv) 3x–5+7z

  2. பின்வரும் உறுப்புகளின் எண்கெழுக்களைச் காண்க. மேலும், ஒவ்வொரு உறுப்பிற்கும் x மற்றும் y இன் கெழுக்களைக் காண்க: 3x, - 5xy, - yz, 7xyz, y, 16yx.

  3. ஒருவர் ரூ.960 இக்கு ரூ.1,  ரூ.5 மற்றும் ரூ.10 ஆகிய மதிப்பிலான பணத் தாள்களை வைத்துள்ளார். இம்மூன்று மதிப்பிலுள்ள பணத்தாள்களின் எண்ணிக்கையும் சமமெனில், அவரிடமுள்ள மொத்தப்  பணத்தாள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

  4. 60 மாணவர்களுடன் ஒரு பள்ளிப்பேருந்து புறப்பட்டது. முதல் நிறுத்தத்தில் சில மாணவர்கள் இறங்கினார்கள். இரண்டாம் நிறுத்தத்தில், முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு மாணவர்கள் இறங்கினார்கள். மூன்றாம் நிறுத்தத்தில் 6 மாணவர்கள் இறங்கிய பிறகு, பேருந்தில் 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர் எனில், முதல் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

  5. ஒரு மட்டைப்பந்து அணி (Cricket Team) கலந்து கொண்ட  போட்டிகளில், தோற்றதை விட இரு ஆட்டங்கள் அதிகமாக வென்றார்கள். வெற்றிக்கு 5 புள்ளிகளும், தோல்விக்கு − 3 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த அணி மொத்தத்தில் 50 புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த அணி கலந்துகொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கையைக் காண்க.

  6. 5 x 5 = 25
  7. கோவைகளைக் கூட்டுக:
    (i) pq −1 மற்றும் 3pq + 2
    (ii) 8x + 3 மற்றும் 1 − 7x

  8. கழிக்க:
    i) 11pq லிருந்து 7pq
    ii) a லிருந்து -a
    iii) 21x + 9 லிருந்து 5x+7

  9. சுருக்குக: 100x + 99y – 98z + 10x + 10y + 10z – x – y + z.

  10. i) கூட்டுக: 3x − 4y + z and 2x − z + 3y
    ii) 4x + 3y லிருந்து, 2x − 5y -ஐக் கழிக்க.

  11. ராணி வேலைக்குச் சென்ற முதல் நாள் ரூ.200 கூலியாகப் பெற்று, அதிலிருந்து ஒரு தொகையை அன்றே செலவு செய்தாள். மறுநாள் Rs.300 கூலியாகப் பெற்று, அதிலிருந்து முதல்நாள் செலவழித்ததைப்போல், இருமடங்கு செலவு செய்தாள். மூன்றாம் நாள் ரூ.400 கூலியில், முதல் நாளைப்போல் 4 மடங்கு செலவு செய்தாள். இந்தச் சூழலிலிருந்து. அவளிடம் மூன்றாம் நாள் இறுதியில் மீதமிருக்கும் மொத்தத் தொகையைக் கணக்கிட உதவும் இயற்கணிதக் கோவையை உருவாக்குக.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 1 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Term 1 Algebra Three and Five Marks Questions )

Write your Comment