" /> -->

Term 1 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. 3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

    (a)

    ரூ.300

    (b)

    ரூ.320

    (c)

    ரூ.360

    (d)

    ரூ.400

  2. ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.

    (a)

    150

    (b)

    70

    (c)

    100

    (d)

    147

  3. 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ____ முறை பயணம் செய்யலாம்.

    (a)

    8

    (b)

    10

    (c)

    9

    (d)

    12

  4. 50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ____.

    (a)

    9

    (b)

    10

    (c)

    15

    (d)

    6

  5. 12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

    (a)

    15

    (b)

    18

    (c)

    6

    (d)

    8

  6. 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

    (a)

    7

    (b)

    8

    (c)

    9

    (d)

    10

  7. 11 x 2 = 22
  8. ஒரு டசன் (dozen)  வாழைப்பழங்களின் விலை ரூ.20 எனில், 48 வாழைப் பழங்களின் விலை என்ன?

  9. 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?

  10. தாமரை வாடகைப் பணமாக ரூ.7500 ஐ 3 மாதங்களுக்குச் செலுத்துகிறார் எனில், அதே போல, அவர் ஒரு வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வாடகைப் பணம் எவ்வளவு? (அலகு முறையைப் பயன்படுத்துக)

  11. ஒரு நீர்த்தேக்கத் தொட்டியைநிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன. ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?

  12. ஒரு விவசாயிடம் 144 வாத்துகளுக்குத் 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துகளை விற்றுவிட்டார் எனில், அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்?

  13. நாற்பது மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள் சேமித்து வைக்கப்பப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக மாறினால் அவ்வுணவுப் பொருள்  அவர்களுக்கு எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்?

  14. நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ/மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு?

  15. C = kd என்பதில்
    (i) C இக்கும் d இக்கும் இடையேயுள்ள உறவு என்ன?
    (ii) C = 30 மற்றும் d = 6 எனில், k ன் மதிப்பு என்ன?
    (iii) d = 10 எனில், C ன் மதிப்பு என்ன?

  16. ஒரு சரக்கு வண்டி 594 கி.மீ தூரத்தைக் கடக்க 108 லி டீசல் தேவைப்படுகிறது எனில், அவ்வண்டி 1650 கி.மீ தூரத்தைக் கடக்கத் தேவைப்படும் டீசலின் அளவு எவ்வளவு?

  17. 10 விவசாயிகள் 21 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர்?

  18. 6 நபர்கள் ஒரு வேலையை 12 நாள்களில் செய்து முடிக்கின்றனர். 2 நாள்கள் கழித்து மேலும் 6 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில், அவ்வேலையைச் செய்ய எத்தனை நாள்கள் எடுத்துக்கொள்வார்கள்?

  19. 4 x 3 = 12
  20. 24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல் கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?

  21. 15 அட்டைகளின் (charts) மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2\(\frac { 1 }{ 2 } \) கி.கி எடையில் எத்தனை அட்டைகள் (charts) இருக்கும்?

  22. அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ரூ.24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?

  23. ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?

  24. 2 x 5 = 10
  25. 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

  26. ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்?

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - Term 1 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 Direct And Inverse Proportion Model Question Paper )

Write your Comment