" /> -->

Term 1 எண்ணியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. 20+(-9)+9=____ 

    (a)

    20

    (b)

    29

    (c)

    11

    (d)

    38

  2. (-5)-(-18)=_____ 

    (a)

    23

    (b)

    -13

    (c)

    13

    (d)

    -23

  3. (5×2)+(5×5)=5×(2+5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

    (a)

    பரிமாற்றுப் பண்பு

    (b)

    அடைவுப் பண்பு

    (c)

    பங்கீட்டுப் பண்பு

    (d)

    சேர்ப்புப் பண்பு

  4. (-16)÷4 இக்கு சமமானது எது?

    (a)

    -(-16÷4)

    (b)

    -(16)÷(-4)

    (c)

    16÷(-4)

    (d)

    -4÷16

  5. பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை’ பெறாது?

    (a)

    கூட்டல்

    (b)

    கழித்தல்

    (c)

    பெருக்கல்

    (d)

    வகுத்தல்

  6. 5 x 2 = 10
  7. ஒரு வினாடி வினாவில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு A பெற்ற மதிப்பெண்கள்+30,–20, 0 மற்றும் குழு B பெற்ற மதிப்பெண்கள் –20, 0, +30 எனில், வெற்றி பெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?

  8. கூட்டினால் தீர்வு 2 வரும்படி ஏதாவது 5 இணை முழுக்களைக் காண்க.

  9. ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?

  10. ஒரு மாணவரிடம் (–47) லிருந்து (–12) ஐக் கழிக்கக் கேட்கப்பட்டது. அவருக்கு விடை (–30) எனக் கிடைத்தது. அது சரியா/தவறா? நியாயப்படுத்துக.

  11. கீழுள்ளவற்றைச் சமமானவையா எனச் சோதிக்க. சமம் எனில், அப்பண்பின் பெயரைக் கூறுக.
    (i ) (8 - 13) × 7 மற்றும் (-6) - [8 × 9 - 4)]
    (ii) [(-6) - (+8)] × (-4) மற்றும் (-6)[8 × (-4)]
    (iii) 3 × [(-4) + (-10) மற்றும் [3 × (-4) + 3 × (-10)

  12. 5 x 3 = 15
  13. (i) 120 + 51 மற்றும் 51 + 120 ஆகிய இரண்டும் சமமானவையா?
    (ii) (-5) + [(-4) + (-3)] மற்றும் [(-5) + (-4)] + (-3) ஆகிய இரண்டும் சமமானவையா?

  14. ஒரு பழ வியாபாரி கிலோவுக்கு ரூ.15 லாபம் வீதம் 5கிலோ மாம்பழங்களை விற்றார் பிறகு கிலோவுக்கு ரூ.30 நட்டம் வீதம் 3 கிலோ ஆப்பிள்களை விற்றார் எனில் அவருடைய நிகர லாபம் அல்லது நட்டம் எவ்வளவு?

  15. (–81) × [5 × (–2)], [(–81) × 5] × (–2) ஆகியவை சமமானவையா? அவ்வாறு இருப்பின் அப்பண்பின் பெயரைக் கூறுக.

  16. 3 × [(–4) + 6], [3 × (–4)] + (3 × 6) ஆகியவை சமமானவையா? எனில் பண்பின் பெயரைக் கூறுக.

  17. கொடி தினத்தை முன்னிட்டுப் பெரோஸ்கான் தன் வகுப்புத் தோழர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.25 வீதம் மொத்தம் ரூ.1150 வசூலிக்கிறான். ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு வகுப்புக்கும் ரூ.8 திருப்பித் தருகிறான் எனில், ஆசிரியரிடம் ஒப்படைத்தத் தொகையினைக் காண்க.

  18. 4 x 5 = 20
  19. சித்ரா என்பவர் தன்னிடம் ரூ.150 வைத்துள்ளார். அவர் ரூ.225 மதிப்புள்ள ஒரு கைப்பையை வாங்க நினைத்தால் அவர் தோழியிடம் கடன் பெற வேண்டிய தொகை எவ்வளவு?

  20. செழியன் என்பவர் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1079 மதிப்பள்ள பொருள்களை வாங்குகிறார். அதற்கு முன்பு அவருடைய கணக்கில் ரூ.5000 இருந்திருந்தால், தற்போது அவருடைய கணக்கில் எவ்வளவு பணம் இருக்கும்?

  21. கலைவிழி கலந்துகொண்ட ஒருபோட்டி தேர்வில் சரியான விடைக்கு 4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு –2 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. அவள் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தாள். அவற்றுள் பத்துச் சரியான விடைகள் இருந்தபோதிலும், அவளால் 20 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது எனில், அவள் எழுதிய தவறான விடைகள் எத்தனை

  22. வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - Term 1 எண்ணியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 Number System Model Question Paper )

Write your Comment