Term 1 எண்ணியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. ஒரு நீர்மூழ்கிக் கப்பலானது கடல் மட்டத்திலிருந்து 32 அடிகள் கீழே உள்ளது. பிறகு அது 8 அடிகள் மேல் நோக்கி நகர்கிறது. நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் ஆழத்தைக் காண்க.

  2. சீதா தனது சேமிப்பான ரூ.225 இல் அலுவலகப் பொருள்களை வாங்கும் கடைக்குச் சென்று கடன் அட்டையைப் பயன்படுத்தி ரூ.400 இக்குப் பொருள்கள் வாங்குகிறாள் எனில், வங்கிக்கு அவள் மீதம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

  3. தரைத்தளத்திலிருந்து ஒருவர் ஆறு தளம் மேலே செல்கிறார். மேலும் அவர் ஆறு தளம் கீழே இறங்குகிறார். தற்பொழுது அவர் எந்தத் தளத்தில் உள்ளார் எனக் கண்டறிக.

  4. (i) 120 + 51 மற்றும் 51 + 120 ஆகிய இரண்டும் சமமானவையா?
    (ii) (-5) + [(-4) + (-3)] மற்றும் [(-5) + (-4)] + (-3) ஆகிய இரண்டும் சமமானவையா?

  5. 3 × [(–4) + 6], [3 × (–4)] + (3 × 6) ஆகியவை சமமானவையா? எனில் பண்பின் பெயரைக் கூறுக.

  6. 5 x 5 = 25
  7. எண்கோட்டைப் பயன்படுத்திக் கழிக்க
    (i) –3 – (–2)
    (ii) +6 – (–5)

  8. சித்ரா என்பவர் தன்னிடம் ரூ.150 வைத்துள்ளார். அவர் ரூ.225 மதிப்புள்ள ஒரு கைப்பையை வாங்க நினைத்தால் அவர் தோழியிடம் கடன் பெற வேண்டிய தொகை எவ்வளவு?

  9. செழியன் என்பவர் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1079 மதிப்பள்ள பொருள்களை வாங்குகிறார். அதற்கு முன்பு அவருடைய கணக்கில் ரூ.5000 இருந்திருந்தால், தற்போது அவருடைய கணக்கில் எவ்வளவு பணம் இருக்கும்?

  10. கலைவிழி கலந்துகொண்ட ஒருபோட்டி தேர்வில் சரியான விடைக்கு 4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு –2 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. அவள் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தாள். அவற்றுள் பத்துச் சரியான விடைகள் இருந்தபோதிலும், அவளால் 20 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது எனில், அவள் எழுதிய தவறான விடைகள் எத்தனை

  11. வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 1 எண்ணியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Term 1 Number System Three and Five Marks Questions )

Write your Comment