" /> -->

முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  25 x 2 = 50
 1. தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேற்கிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் 25 வினாக்கள் தவறாகப் பதில் அளிக்கிறாள். மேலும் தாள் II இல் 13 வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்டறிக.

 2. கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க.
  (i) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: –3–(–4)
  (ii) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: 7–(–10)
  (iii) 35-(-64)
  (iv) -200-(+100)

 3. ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?

 4. (–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?

 5. பெருக்கற் பலனைக் காண்க.
  (i) (-35)×22
  (ii) (-10)×12(-9)
  (iii) (-9)×(-8)×(-7)×(-6)
  (iv) (-25)×0×45×90
  (v) (-2)×(+50)×(-25)×4

 6. பெருக்கற் பலன்−50 ஐத் தரக்கூடிய அனைத்துச் சோடி முழுக்களையும் காண்க.

 7. ஓர் இடத்தில் வெப்பம் சீராகக் குறைகிறது. மேலும் 8 மணிநேர இடைவெளியின்போது, வெப்பம் 24OC குறைந்தது எனில், ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் குறைந்த வெப்பத்தின் அளவு என்ன?

 8. 30 நாள்கள் நடைப்பயணத்திற்குப் பிறகு, நான் 4800 கலோரிகள் இழந்திருந்தேன், என் கலோரி இழப்பு சீரானது எனில், ஒரு நாளில் இழந்த கலோரியைக் காண்க.

 9. 168×32=5376 தரப்பட்டுள்ளது. (-5376)÷−(-32) ஐக் காண்க.

 10. -70 + 20 = [] - 10

 11. மதிப்பு காண்க: (–25) + 60 + (–95) + (–385)

 12. (-30) x (-70) x 15 இன் பெருக்கற்பலன் காண்க.

 13. (−72) ஐ 8 ஆல் வகுக்க.

 14. பின்வருவனவற்றைச் சரிபார்க்க.
  (i) (11 + 7) + 10 மற்றும் 11 + (7 + 10) ஆகியவை சமம்.
  (ii) (8 - 13) x 7 மற்றும் 8 - (13 x 7) ஆகியவை சமம்.
  (iii) [(-6) - (+8)] x (-4) மற்றும் (-6) - [8 x (-4)] ஆகியவை சமம்.
  (iv) 3 x [(-4) + (-10)] மற்றும் [3 x (-4) + 3 x (-10)] ஆகியவை சமம்.

 15. 01.01.2018 அன்று கலைவாணியின் வங்கிக் கணக்கு இருப்பு ரூ.5000. அவர், சனவரியில் ரூ.2000 பணம் செலுத்தினார், பிப்ரவரியில் ரூ.700 பணம் எடுத்தார். மார்ச் மாதத்தில் ரூ.1000 செலுத்தி, ரூ.500 எடுத்திருந்தால், அவர் கணக்கில் 01.04.2018 அன்று உள்ள வங்கி இருப்பைக் காண்க.

 16. காஷ்மீரில், ஒரு நாள் இரவின்  வெப்ப நிலை –5˚C. மறுநாள், அவ்வெப்பநிலை 9˚C ஆக உயர்ந்தது எனில், அதிகரித்த வெப்ப அளவினைக் காண்க.

 17. வெப்பத்தை அளவிட, வழக்கமான செல்சியஸ் பாகைகளுக்கு (oC) பதிலாகக் கெல்வின் அளவுகளை (K) அறிவியலாளர் பயன்படுத்துவர். இரண்டிற்கும் உள்ள உறவைக் கூறும் சமன்பாடுT°C=(T+273) K. பின்வரும் அளவுகளைக் கெல்வினாக மாற்றி எழுதுக.
  (i) –275˚C
  (ii) 45˚C
  (iii) –400˚C
  (iv) –273˚C

 18. என்னுடன் 2 ஐக் கூட்டுங்கள். பிறகு 5 ஆல் பெருக்கவும், அதிலிருந்து 10 ஐக் கழிக்கவும். அதனை நான்கால் வகுத்தால் 15 கிடைக்கும் எனில், நான் யார்?

 19. காமாட்சி என்னும் பழ வணிகர், 30 ஆப்பிள்களையும், 50 மாதுளைகளையும் விற்கிறார். அவருக்கு, ஓர் ஆப்பிளால் ரூ.8 இலாபமும், ஒரு மாதுளையால் ரூ.5 நட்டமும் கிடைத்தது எனில், அவரது ஒட்டுமொத்த இலாப/நட்டத் தொகையினைக் காண்க.

 20. புத்தர் கி.மு (பொ.ஆ.மு) 563 இல் பிறந்து, கி.மு (பொ.ஆ.மு) 483 இல் இறந்தார். அவர் கி.மு. (பொ.ஆ.மு) 500 இல் உயிர் வாழ்ந்தாரா? அவருடைய ஆயுட்காலம் எவ்வளவு?

 21. 72+(-5)-?=72 என்னும் சமன்பாட்டில், கேள்விக்குறி(?)ஐ நிறைவு செய்யும் எண்ணைக் காண்க.

 22. A யிலிருந்து M வரையிலான ஆங்கில எழுத்துகள், முறையே 1 லிருந்து 13 வரையான எண்களைக் குறிக்கின்றன; N என்பது 0 ஐக் குறிக்கிறது; O விலிருந்து Z வரையான ஆங்கில எழுத்துகள் முறையே (−1) லிருந்து (−12) வரையிலான எண்களைக் குறிக்கின்றன என்க. பின்வரும் ஆங்கில வார்த்தைகளுக்கான முழுக்களின் கூடுதலைக் காண்க.
  உதாரணமாக, MATH ⟶ கூட்டல் பலன் ⟶ 13+1-6+8 = 16
  (i) YOUR NAME
  (ii) SUCCESS

 23. ஒரு நாள் தண்ணீர் குடிப்பதற்காக, ஒரு கிணற்றின் படிக்கட்டுகளில் நாய் தாவிக் குதித்துக் கீழிறங்கியது. ஒரு தாவலில், 4 படிக்கட்டுகளைக் கடந்தது. அந்தக் கிணற்றின் நீர்மட்டத்தை அடைய 20 படிகள் இருந்தால், அந்த நாய் எத்தனை முறை தாவிக்குதித்து நீரை அடைந்திருக்கும்?

 24. கீழ்க்காணும் மாயச் சதுரத்தில் நிரை, நிரல் மற்றும் மூலைவிட்டத்தில் உள்ள எண்களின் கூடுதல் சமம் எனில், x, y மற்றும் z இன் மதிப்புகளைக் காண்க.

  1 -10 x
  y -3 -2
  -6 4 z
 25. ஒரு நீர்மூழ்கிக் கப்பல், கடல் மட்டத்திலிருந்து 650 அடி ஆழத்தில் உள்ளது. அது 200 அடி கீழிறங்கினால், அது இருக்கும் ஆழத்தைக் காண்க

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths - Term 1 Two Marks Model Question Paper )

Write your Comment