Term 2 அளவைகள் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45
    15 x 3 = 45
  1. படம் 2.5 இல் உள்ள வளையலின் சுற்றளவைக் கணக்கிடுக. (π = 3.14 என்க)

  2. ஆரம் 14 செ.மீ உடைய வட்டத் தகட்டின் சுற்றளவைக் காண்க . (π=\(\frac { 22 }{ 7 } \) என்க)

  3. ஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க.  (π=\(\frac { 22 }{ 7 } \) என்க)

  4. கடிகாரத்தில், 56 மி.மீ நீளமுள்ள வினாடி முள்ளின் முனை ஒரு நிமிடத்தில் கடக்கும் தொலைவைக் கணக்கிடுக.(இங்கு π=\(\frac { 22 }{ 7 } \))

  5. ஒரு டிராக்ட ர் வண்டிச் சக்கரத்தின் ஆரம் 77 செ.மீ
    எனில், அது 35 முறை சுற்றும்போது, கடக்கும் தொலைவைக் காண்க. (π=\(\frac { 22 }{ 7 } \) என்க)

  6. ஒரு விவசாயி, 420 மீ ஆரமுடைய வட்ட வடிவில் அமைந்திருக்கும் கோழிப் பண்ணையைச் சுற்றி, முள்வேலி அமைக்க விரும்புகிறார். அதற்கு ஒரு மீட்டருக்கு Rs.12 வீதம் செலவாகும். அவரிடம் Rs.30,000 உள்ளது எனில், அவரது பண்ணைக்கு முள்வேலி அமைக்க இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும்?(இங்கு, π=\(\frac { 22 }{ 7 } \))

  7. படம் 2.9 இல் உள்ள உருவத்தின் சுற்றளவு காண்க .(இங்கு, π=\(\frac { 22 }{ 7 } \))

  8. கண்ணன் என்பவர் 14 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்
    தகட்டை நான்கு சமபாகங்களாகப் பிரிக்கிறார். அதன் ஒரு கால் வட்டத் தகட்டின் சுற்றளவு காண்க.(இங்கு, π=\(\frac { 22 }{ 7 } \))

  9. ஒரு பூங்கா வட்ட வடிவில் உள்ளது. அதன் மையப்பகுதியில், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியும், அதனைச் சுற்றி வட்ட வடிவ நடைப் பயிற்சிப் பாதையும் அமைந்துள்ளது. அந்தப் பூங்காவின் வெளிவட்ட ஆரம் 10 மீ மற்றும் உள்வட்ட ஆரம் 3 மீ எனில், நடைப்பயிற்சிப் பாதையின் பரப்பளவு காண்க.

  10. ஒரு வட்ட வடிவப் பூந்தோட்டத்தின் ஆரம் 21 மீ. அந்தத் தோட்டத்தைச் சுற்றி, 14 மீ அகலம் உள்ள வட்ட நடைபாதை உள்ளது எனில், அந்த வட்டப்பாதையின் பரப்பளவு காண்க.

  11. வட்ட வடிவ மட்டைப் பந்துத் (cricket) திடலின் ஆரம் 76 மீ. அந்தத் திடலைச் சுற்றிலும் 2 மீ அகலத்தில் மழைநீர் வடிவதற்கான வடிகால் (drainage) அமைக்க வேண்டியிருந்தது. ஒரு சதுர மீட்டருக்கு Rs 180 வீதம் செலவானால், அந்த வடிகால் அமைக்கத் தேவையான  மொத்தத் தொகையைக் காண்க.

  12. ஒரு தளம் 10 மீ நீளமும், 8 மீ அகலமும் உள்ளது. அதன் மீது 7 மீ நீளமும், 5 மீ அகலமும் உள்ள விரிப்பு விரிக்கப்பட்டுள்ள து. அந்த விரிப்பால் மூடப்படாத பகுதியின் பரப்பளவைக் காண்க.

  13. 23 செ.மீ நீளமும், 11 செ.மீ அகலமும் உள்ள ஓர் அட்டையில், அனைத்துப் பக்கங்களிலும் 3 செ.மீ விளிம்பு (margin) இருக்கும் வகையில் ஓர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த விளிம்புப் பகுதியின் பரப்பளவைக் காண்க.

  14. 9 மீ நீளமும், 7 மீ அகலமும் உள்ள ஓர் அறைக்கு வெளியே, 3 மீ சீரான அகலமுள்ள ஒரு தாழ்வாரம் (verandah) உள்ளது. (அ) தாழ்வாரத்தின் பரப்பளவு காண்க. (ஆ) அந்தத் தாழ்வாரப் பகுதிக்கு ச.மீ-க்கு Rs 15 வீதம் சிமெண்ட் பூச ஆகும் செலவைக் காண்க.

  15. 30 மீ × 19 மீ பரிமாணங்களுடைய ஒரு கோ - கோ விளையாட்டுத் திடல், அதன் அனைத்துப் பக்கங்களிலும் லாபியியுடன் (lobby) அமைந்துள்ளது. விளையாடும் பகுதிக்கான பரிமாணங்கள் 27 மீ × 16 மீ எனில், லாபியின் பரப்பளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 அளவைகள் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Measurements Three Marks Question Paper )

Write your Comment