" /> -->

Term 2 அளவைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக்
    காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
    d = 70 செ.மீ

  2. வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக்
    காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
    d = 28 மி.மீ

  3. 49 மீ விட்டமுள்ள வட்ட வடிவப் பூந்தோட்டத்தைத் தேன்மொழி சீரமைக்க விரும்பினாள். ஒரு சதுர மீட்டருக்கு Rs 150 வீதம் செலவாகுமெனில், மொத்தச் செலவுத் தொகையைக் கணக்கிடுக.

  4. ஒரு செவ்வக வடிவத் தோட்டத்தின் பரிமாணங்கள் 11 மீ × 8 மீ என்க. அதன் பக்கங்களை அடுத்து 2 மீ அகலமுள்ள பாதை அமைக்கப்படுகிறது. அந்தப் பாதையின் பரப்பளவு காண்க.

  5. 30 செ.மீ × 20 செ.மீ பரிமாணமுள்ள ஒரு செவ்வக அட்டையின் பக்க விளிம்பிலிருந்து 4 செ.மீ அகலம் உள்ள பகுதி வெட்டியெடுக்கப்படுகிறது எனில், அந்த வெட்டப்பட்ட பகுதியின் பரப்பளவு காண்க. மேலும், அட்டையின் மீதமுள்ள பகுதியின் பரப்பளவு காண்க.

  6. ஒரு மகிழுந்தின் (car) சக்கரம் 20 சுற்றுகளில் 3520 செ.மீ தொலைவைக் கடக்கிறது எனில், அதன் ஆரம் காண்க

  7. ஒரு செவ்வக நிலத்தின் பரிமாணங்கள் 20 மீ × 15 மீ. அதன் மையம் வழியாகவும், இரு பக்கங்களுக்கு இணையாகவும் இருக்குமாறு இரண்டு பாதைகள் உள்ளன. நீளமாக உள்ள பாதையின் அகலம் 2 மீ மற்றும் குறைந்த நீளமுள்ள பாதையின் அகலம் 1 மீ எனில், கீழ்க்கண்டவற்றைக் காண்க.
    பாதைகளின் பரப்பளவு

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 அளவைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Measurements Two Marks Question Paper )

Write your Comment