Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா ? ஏன்?

  2. நம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது?

  3. மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?

  4. மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும்முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?

  5. மின்னோட்டடத்தின் வேகம் என்ன?

  6. மின்கடத்துத்திறனின் S.I. அலகு என்ன?

  7. மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.

  8. மின் உருகி என்பது என்ன?

  9. மின்னோட்டத்தின் வெப்பவிளைவின் மூலம் இயங்கும் சாதனங்களைக் கூறுக.

  10. அரிதிற்கடத்திகள் சிலவற்றைக் கூறுக.

  11. கால ஒழுங்கு மாற்றங்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  12. செயற்கை முறையில் பழத்தினை பழுக்க வைத்தல் எந்த வகை மாற்றமாகும்?

  13. ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் எவ்வகை மாற்றமாகும்?

  14. இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும். ஏன்?

  15. சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு எது?

  16. செல் சவ்வு என்ன செய்கிறது?

  17. லைசோஸோம், செல்களின் துப்புரவாளர்கள் என ஏன் அழைக்கப்படுகிறது?

  18. "ஒரு வைரஸ் ஒரு உயிரினம் அல்ல " என ஆசிரியர் கூறினார். நீங்கள் அவரது கூற்றினை ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா? ஏன் என விளக்குக

  19. ஐந்துலக வகைப்பாட்டினைப் பட்டியலிடுக

  20. இருபிளவு திறவுகோல் –வரையறு?

  21. மொனிராவிற்கு இரண்டு உதாரணம் தருக.

  22. புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.

  23. Tux Paint என்றால் என்ன?

  24. சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?

  25. ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Science Term 2 Chapter Two Marks Question Paper )

Write your Comment