" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  10 x 1 = 10
 1. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்

  (a)

  விரிவடைகிறது

  (b)

  சுருங்குகிறது

  (c)

  அதே நிலையில் உள்ளது

  (d)

  மேற்கூறிய ஏதுமில்லை

 2. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

  (a)

  10 ஆம்பியர்

  (b)

  1 ஆம்பியர்

  (c)

  10 வோல்ட்

  (d)

  1 வோல்ட்

 3. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?

  (a)

  சாவி L மட்டும்

  (b)

  சாவி M மற்றும்

  (c)

  சாவிகள் M மற்றும் N மட்டும்

  (d)

  சாவி L அல்லது M மற்றும் N

 4. கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.

  (a)

  நீர் மேகங்களாவது

  (b)

  ஒரு மரத்தின் வளர்ச்சி

  (c)

  பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது

  (d)

  பனிக்கூழ் கரைந்த நிலை - பனிக்கூழாவது

 5. ________ வேதிமாற்றம் அல்ல.

  (a)

  அம்மோனியா நீரில் கரைவது

  (b)

  கார்பன் - டை - ஆக்ஸைடு நீரில் கரைவது

  (c)

  உலர் பனிக்கட்டி நீரில் கரைவது

  (d)

  துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

 6. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

  (a)

  லைசோசோம்

  (b)

  ரைபோசோம்

  (c)

  மைட்டோகாண்ட்ரியா

  (d)

  உட்கரு

 7. ________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.

  (a)

  எண்டோபிளாஸ்மிக் வளை

  (b)

  கோல்கை உறுப்புகள்

  (c)

  சென்ட்ரியோல்

  (d)

  உட்கரு

 8. ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

  (a)

  அரிஸ்டாட்டில்

  (b)

  லின்னேயஸ்

  (c)

  விட்டேக்கர்

  (d)

  பிளேட்டோ

 9. புறாவின் இருசொற் பெயர்

  (a)

  ஹோமோ செப்பியன்

  (b)

  ராட்டஸ் ராட்டஸ்

  (c)

  மாஞ்சிபெரா இண்டிகா

  (d)

  கொலம்பா லிவியா

 10. Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?

  (a)

  எளிய கூட்டல்

  (b)

  வகுத்தல்

  (c)

  படம் வரைதல்

  (d)

  பெருக்கல்

 11. எவையேனும் 15 வினாக்களுக்கு விடையளி

  15 x 2 = 30
 12. ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா ? ஏன்?

 13. மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?

 14. மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும்முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?

 15. மின்னோட்டத்தின் வெப்பவிளைவின் மூலம் இயங்கும் சாதனங்களைக் கூறுக.

 16. அரிதிற்கடத்திகள் சிலவற்றைக் கூறுக.

 17. மின்கலம் என்பது என்ன?

 18. இரு வெப்ப உமிழ் வினைகளைக் குறிப்பிடுக.

 19. குளிர்ந்த பாலினை வெப்பப்படுத்தினால் அது சூடாகிறது. இது எந்த வகையான மாற்றம்?

 20. ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் எவ்வகை மாற்றமாகும்?

 21. இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும். ஏன்?

 22. தாவர செல்லில் செல் சுவரின் பணிகள் யாவை ?

 23. சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு எது?

 24. செல் சவ்வு என்ன செய்கிறது?

 25. வகைப்பாட்டியல் என்றால் என்ன?

 26. ஐந்துலக வகைப்பாட்டினைப் பட்டியலிடுக

 27. இருசொற்பெயரைக் குறிப்பிடுக.
  அ.மனிதன் ஆ.நெல்

 28. புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.

 29. Tux Paint என்றால் என்ன?

 30. பனுவல் கருவியின் (Text Tool) பயன் என்ன?

 31. சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?

 32. எவையேனும்வினாக்களுக்கு விடையளி

  4 x 5 = 20
 33. சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள் . நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்

 34. மின்னோட்டம் வரையறு.

 35. இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் வேறுபடுத்துக.

 36. ஏதேனும் மூன்று நுண் உறுப்புகளைக் பற்றி விவரிக்கவும்.

 37. தாவர உலகம் மற்றும் விலங்கு உலகத்தை வேறுபடுத்துக.

 38. ஆய்வக வெப்பநிலைமானிக்கும், மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை?

 39. உரித்த வாழைப்பழமும், உரிக்காத வாழைப்பழமும் பார்ப்பதற்கு வேறு வேறாகத் தெரிகிறது. இதிலிருந்து வாழைப்பழம் உரிப்பது வேதியியல் மாற்றம் என்று கூற இயலுமா?

 40. தாவர செல் மற்றும் விலங்கு செல்களை ஒப்பிட்டு கீழே உள்ளவற்றை நிறைவு செய்யுங்கள்.

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 7th Social Science - Half Yearly Model Question Paper 2019 - 2020 )

Write your Comment