" /> -->

நேர் மற்றும் எதிர் விகிதங்கள் முக்கிய வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. 3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

  (a)

  ரூ.300

  (b)

  ரூ.320

  (c)

  ரூ.360

  (d)

  ரூ.400

 2. ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.

  (a)

  150

  (b)

  70

  (c)

  100

  (d)

  147

 3. 12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

  (a)

  15

  (b)

  18

  (c)

  6

  (d)

  8

 4. 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

  (a)

  7

  (b)

  8

  (c)

  9

  (d)

  10

 5. 4 x 1 = 4
 6. 8 ஆப்பிள்களின் விலை ரூ.56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.

  ()

  ரூ.84

 7. ஒரு மகிழ்ந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழ்ந்து 200 கி.மீ தூரத்தை சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு _________. 

  ()

  10 லிட்டர்கள் 

 8. குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை ________.

  ()

  360

 9. 40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்கள் முடிப்பார்கள் எனில் அதே வேலையை 4 நாள்களில் முடிக்க தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை _____ .

  ()

  80

 10. 5 x 1 = 5
 11. ஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரமும் நேர் விகிதத் தொடர்புடையன.

  (a) True
  (b) False
 12. ஒரு குடும்பத்தின் செலவினமானது, அக்குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையோடு நேர்விகிதத் தொடர்புடையது.

  (a) True
  (b) False
 13. ஒரு விடுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் உண்ணும் உணவின் அளவும் நேர் விகிதத்தில் இல்லை

  (a) True
  (b) False
 14. மல்லிகா 1 கி.மீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்தால், அவள் 3 கி.மீ தூரத்தை 1 மணி நேரத்தில் கடந்து முடிப்பாள்.

  (a) True
  (b) False
 15. 12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள்

  (a) True
  (b) False
 16. 9 x 2 = 18
 17. ஒரு டசன் (dozen)  வாழைப்பழங்களின் விலை ரூ.20 எனில், 48 வாழைப் பழங்களின் விலை என்ன?

 18. 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?

 19. அரை மீட்டர் துணியின் விலை ரூ.15 எனில், 8\(\frac { 1 }{ 3 } \) மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு?

 20. வள்ளி 10 பேனாக்களை ரூ.108 இக்கு வாங்குகிறார். கமலா 8 பேனாக்களை ரூ.96 இக்கு வாங்குகிறார். இருவரில் யார் குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கினர்? (அலகு முறையைப் பயன்படுத்துக)

 21. ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக்கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில், 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்?

 22. 500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம் மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (parcels) அவள் அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத்தின் (parcel) எடை எவ்வளவு இருக்கும்?

 23. C = kd என்பதில்
  (i) C இக்கும் d இக்கும் இடையேயுள்ள உறவு என்ன?
  (ii) C = 30 மற்றும் d = 6 எனில், k ன் மதிப்பு என்ன?
  (iii) d = 10 எனில், C ன் மதிப்பு என்ன?

 24. ஒரு டசன் (dozen) சோப்புகளின் விலை ரூ.396 எனில், 35 சோப்புகளின் விலை என்ன?

 25. 10 விவசாயிகள் 21 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர்?

 26. 3 x 3 = 9
 27. 24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல் கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 28. அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ரூ.24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?

 29. ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?

 30. 2 x 5 = 10
 31. 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

 32. ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்?

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 4 Direct and Inverse Proportion Important Question Paper )

Write your Comment