" /> -->

முதல் பருவம் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  6 x 1 = 6
 1. குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  (a)

  -9+(-5)+6

  (b)

  8+(-12)-6

  (c)

  -4+2+10

  (d)

  10+(-4)+8

 2. 10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு

  (a)

  70 ச.மீ

  (b)

  35 ச.மீ

  (c)

  7 ச.மீ

  (d)

  10 ச.மீ

 3. சாய்சதுரத்தின் மூலை விட்டங்களுக்கு இடையே உள்ள கோணம் 

  (a)

  120o

  (b)

  180º

  (c)

  90º

  (d)

  100º

 4. 3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

  (a)

  mn

  (b)

  −mn

  (c)

  2mn

  (d)

  3mn

 5. மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ரூ.75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ரூ.105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்

  (a)

  6

  (b)

  7

  (c)

  8

  (d)

  5

 6. ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

  (a)

  360˚

  (b)

  180˚

  (c)

  90˚

  (d)

 7. 5 x 1 = 5
 8. -44+____=-88

  ()

  -44

 9. −3m லிருந்து 5m ஐக் கழிக்கக் கிடைப்பது ______

  ()

  –8m

 10. a = 5, எனில், 2a + 5 ன் மதிப்பு  ______ 

  ()

  15

 11. குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை ________.

  ()

  360

 12. சமசீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக_______

 13. 5 x 1 = 5
 14. (–32) இன் கூட்டல் எதிர்மறை (–32)

  (a) True
  (b) False
 15. ஒரு மிகை முழு, ஒரு குறை முழு ஆகியவற்றின் கூடுதல், எப்போதும் முழுவாகும்.

  (a) True
  (b) False
 16. இரண்டு ஒத்த உறுப்புகளைக் கூட்டுவதற்கு அதன் கெழுக்களைக் கூட்ட வேண்டும்.

  (a) True
  (b) False
 17. ஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரமும் நேர் விகிதத் தொடர்புடையன.

  (a) True
  (b) False
 18. 12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள்

  (a) True
  (b) False
 19. 10 x 2 = 20
 20. தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேற்கிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் 25 வினாக்கள் தவறாகப் பதில் அளிக்கிறாள். மேலும் தாள் II இல் 13 வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்டறிக.

 21. (–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?

 22. மதிப்பு காண்க: (–25) + 60 + (–95) + (–385)

 23. ஜானகி என்பவரிடம் உள்ள ஓர் இணைகர வடிவிலான துணியின் உயரமும் நீளமும் முறையே, 12 செ.மீ மற்றும் 18 செ.மீ. மேலும் அதை நான்கு சமமான இணைகரங்களாக்கிப் பிரித்துப் (இணைப்பக்கங்களின் மையப்புள்ளி வழியாக) புதிய இணைகரத்தின் பரப்பளவு காண்க

 24. அடிப்பக்கம் 14 செ.மீ உம், உயரம் 9 செ.மீஉம் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.

 25. பரப்பளவு 576 ச.செ.மீ உம், உயரத்தைப்போல் நான்கு மடங்கு கொண்ட அடிப்பாகத்தையும் உடைய இணைகரத்தின் உயரம் காண்க.

 26. x = 2 மற்றும் y = 3, எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக்  காண்க.
  (i) 2x − 3y
  (ii) x + y
  (iii) 4y − x
  (iv) x + 1 − y

 27. 2m + 8n + 10 லிருந்து, எதனைக் கழித்தால் −3m + 7n + 16 கிடைக்கும்?

 28. 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?

 29. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் \(\angle \)GEH ன் மதிப்பைக் காண்க.

   

 30. 3 x 3 = 9
 31. கூட்டுக
  (i) (–40) மற்றும் (30)
  (ii) 60 மற்றும் (–50)

 32. அடிப்பக்கம் 12 மீ மற்றும் உயரம் 8 மீ அளவுகள் கொண்ட இணைக்கரத்தின் பரப்பளவு காண்க.

 33. பின்வரும் உறுப்புகளின் எண்கெழுக்களைச் காண்க. மேலும், ஒவ்வொரு உறுப்பிற்கும் x மற்றும் y இன் கெழுக்களைக் காண்க: 3x, - 5xy, - yz, 7xyz, y, 16yx.

 34. 3 x 5 = 15
 35. எண்கோட்டைப் பயன்படுத்திக் கழிக்க
  (i) –3 – (–2)
  (ii) +6 – (–5)

 36. இரவு உணவு சாப்பிடுவதற்காக மணி தன் நண்பன் முகமது உடன் உணவகம் சென்றான். 2 இட்லிகளும், 2 தோசைகளும் மணி சாப்பிட்டான். முகமது 4 இட்லிகளும், 1 தோசையும் சாப்பிட்டான். x மற்றும் y முறையே, ஒரு இட்லியின் விலை மற்றும் ஓர் தோசையின் விலை எனில், அவர்கள் செலுத்தவேண்டிய பட்டியல் தொகையை (bill amount) x மற்றும் y இல் கணக்கிடுக.

 37. 80˚ அளவுடைய \(\angle \)ABC இன் கோண இரு சமவெட்டி வரைக.

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths Term 1 Model Question Paper )

Write your Comment