" /> -->

முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  25 x 2 = 50
 1.  கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
  (i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
  (ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
  (iii) (−100)+(-10)
  (iv) 20+(-72)
  (v)82+(-75)
  (vi) -48+(-15)
  (vii) -225+(-63)

 2. (11+7)+10 மற்றும் 11+(7+10)சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?

 3. ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?

 4. (–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?

 5. கோடைக் காலத்தில், குளத்தில் உள்ள நீரின் அளவு ஒரு வாரத்திற்கு வெப்பத்தினால் 2 அங்குலம் வீதம் குறைகிறது. இது 6 வாரங்களுக்கு நீடித்தால், நீரின் அளவு எவ்வளவு குறைந்திருக்கும்?

 6. -70 + 20 = [] - 10

 7. ஜானகி என்பவரிடம் உள்ள ஓர் இணைகர வடிவிலான துணியின் உயரமும் நீளமும் முறையே, 12 செ.மீ மற்றும் 18 செ.மீ. மேலும் அதை நான்கு சமமான இணைகரங்களாக்கிப் பிரித்துப் (இணைப்பக்கங்களின் மையப்புள்ளி வழியாக) புதிய இணைகரத்தின் பரப்பளவு காண்க

 8. அடிப்பக்கம் 14 செ.மீ உம், உயரம் 9 செ.மீஉம் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.

 9. ஓர் இணைக்கரத்தின் அடிப்பக்கம் 16 செ.மீ. அதன் உயரம் அடிப்பக்கத்தை விட 7 செ.மீ குறைவு எனில், அதன் பரப்பளவைக் காண்க.

 10. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 576 ச.செ.மீ. ஓர் மூலைவிட்டமானது மற்றொரு மூலைவிட்டதில் பாதி, எனில் மூளையிட்டங்களின் அளவைக் காண்க.

 11. பின்வருவனவற்றின் எண்கெழுக்களைக் காண்க. −3yx, 12k, y, 121bc, − x, 9pq, 2ab.

 12. கூட்டுக:
  (i) 8x, 3x
  (ii) 7mn, 5mn
  (iii) −9y, 11y, 2y

 13. ஓர் எண்ணின் மூன்று மடங்குடன் 5ஐக் கூட்ட 44 கிடைக்கிறது. அந்த எண்ணைக் காண்க.

 14. 2m + 8n + 10 லிருந்து, எதனைக் கழித்தால் −3m + 7n + 16 கிடைக்கும்?

 15. 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?

 16. தாமரை வாடகைப் பணமாக ரூ.7500 ஐ 3 மாதங்களுக்குச் செலுத்துகிறார் எனில், அதே போல, அவர் ஒரு வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வாடகைப் பணம் எவ்வளவு? (அலகு முறையைப் பயன்படுத்துக)

 17. நாற்பது மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள் சேமித்து வைக்கப்பப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக மாறினால் அவ்வுணவுப் பொருள்  அவர்களுக்கு எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்?

 18. ஒரு டசன் (dozen) சோப்புகளின் விலை ரூ.396 எனில், 35 சோப்புகளின் விலை என்ன?

 19. 105 நோட்டுப் புத்தகங்களின் விலை ரூ.2415. ரூ.1863 இக்கு எத்தனை நோட்டு புத்தகங்கள் வாங்கலாம்?

 20. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் \(\angle \)GEH ன் மதிப்பைக் காண்க.

   

 21. நேரிய கோண இணைகளில், ஒரு கோணம் செங்கோணம் எனில் மற்றொரு கோணத்தைக் குறித்து என்ன கூற இயலும்?

 22. அன்றாட வாழ்வில் இணைகோடுகளைப் பயன்படுத்தும் சூழ்நிலைகள் இரண்டினைக் குறிப்பிடுக.

 23. இரு கோணங்கள் 11 : 25 என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய இணைகள் எனில் அக்கோணங்களைக் காண்க

 24. கொடுக்கப்பட்ட பாதை வரைபடத்தைப் பயன்படுத்தி மண்டபத்திலிருந்து விவேகானந்தர் நினைவில்லத்திற்குச் செல்லக்கூடிய மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.

 25. ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 8 x 5 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths Term 1 Two Marks Model Question Paper )

Write your Comment