" /> -->

முக்கிய வினாவிடைகள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

  Part - A

  31 x 1 = 31
 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  (a)

  நிறை

  (b)

  நேரம்

  (c)

  பரப்பு

  (d)

  நீளம்

 2. அடர்த்தியின் SI அலகு

  (a)

  கிகி / மீ2

  (b)

  கிகி / மீ3

  (c)

  கிகி / மீ

  (d)

  கி / மீ3

 3. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

  (a)

  1:2

  (b)

  2:1

  (c)

  4:1

  (d)

  1:4

 4. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது

  (a)

  சீரான இயக்கத்தில் உள்ளது

  (b)

  ஓய்வு நிலையில் உள்ளது

  (c)

  சீரற்ற இயககத்தில் உள்ளது

  (d)

  சீரான முடுககத்தில் பொருள் இயங்குகிறது

 5. கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.

  (a)

  (b)

  (c)

  (d)

 6. கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

  (a)

  இரும்பு

  (b)

  ஆக்சிஜன்

  (c)

  ஹீலியம்

  (d)

  தண்ணீர்

 7. கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  (a)

  கணித வாய்ப்பாடு

  (b)

  வேதியியல் வாய்ப்பாடு

  (c)

  கணிதக் குறியீடு

  (d)

  வேதியியல் குறியீடு

 8. அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

  (a)

  குளோரின்

  (b)

  சல்பர்

  (c)

  பாதரசம்

  (d)

  வெள்ளி

 9. பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.

  (a)

  தனிமம்

  (b)

  அணு

  (c)

  மூலக்கூறு

  (d)

  எலக்ட்ரான்

 10. _____ நேர்மின் சுமையுடையது.

  (a)

  புரோட்டான்

  (b)

  எலக்ட்ரான்

  (c)

  மூலக்கூறு

  (d)

  நியூட்ரான்

 11. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது

  (a)

  பிரையோபில்லம்

  (b)

  பூஞ்சை

  (c)

  வைரஸ்

  (d)

  பாக்டீரியா

 12. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

  (a)

  ஸ்போர்கள்

  (b)

  துண்டாதல்

  (c)

  மகரந்த சேர்க்கை

  (d)

  மொட்டு விடுதல்

 13. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

  (a)

  வெற்றிலை

  (b)

  மிளகு

  (c)

  இவை இரண்டும்

  (d)

  இவை இரண்டும் அன்று

 14. புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது

  (a)

  இரத்த சோகை

  (b)

  பற்குழிகள்

  (c)

  காசநோய்

  (d)

  நிமோனியா

 15. முதலுதவி என்பதன் நோக்கம்

  (a)

  பணம் சேமிக்க

  (b)

  வடுக்களைத் தடுக்க

  (c)

  மருத்துவப் பராமரிப்பு தடுக்க

  (d)

  வலி நிவாரணம்

 16. அசைவூட்டம் எதற்கு உதாரணம்.

  (a)

  ஒலித் தொடர்பு

  (b)

  காட்சித் தொடர்பு

  (c)

  வெக்டர் தொடர்பு

  (d)

  ராஸ்டர் தொடர்பு

 17. போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன் படுத்துபவர்கள் யார்.

  (a)

  ஆசிரியர்

  (b)

  மருத்துவர்

  (c)

  வண்ணம் அடிப்பவர்

  (d)

  புகைப்படக் கலைஞர்கள்.

 18. கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது கீழ்கண்டவற்றுள்எது?

  (a)

  இங்க்ஸ்கேப்

  (b)

  போட்டோ ஸ்டோரி

  (c)

  மெய்நிகர் தொழில் நுட்பம்

  (d)

  அடடோபி இல்லுஸ்ட்ரேட்டர்

 19. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்

  (a)

  விரிவடைகிறது

  (b)

  சுருங்குகிறது

  (c)

  அதே நிலையில் உள்ளது

  (d)

  மேற்கூறிய ஏதுமில்லை

 20. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________

  (a)

  பாதுகாப்பான திரவம்

  (b)

  தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது. 

  (c)

  ஒரே சீராக விரிவடையக்கூடியது.

  (d)

  விலை மலிவானது

 21. கீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?

  (a)

  (b)

  (c)

  (d)

 22. பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

  (a)

  குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

  (b)

  குளிர்வடைதல் மற்றும் உறைதல்

  (c)

  ஆவியாதல் மற்றும் உருகுதல்

  (d)

  ஆவியாதல் மற்றும் உறைதல்

 23. கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.

  (a)

  நீர் மேகங்களாவது

  (b)

  ஒரு மரத்தின் வளர்ச்சி

  (c)

  பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது

  (d)

  பனிக்கூழ் கரைந்த நிலை - பனிக்கூழாவது

 24. ________ வேதிமாற்றம் அல்ல.

  (a)

  அம்மோனியா நீரில் கரைவது

  (b)

  கார்பன் - டை - ஆக்ஸைடு நீரில் கரைவது

  (c)

  உலர் பனிக்கட்டி நீரில் கரைவது

  (d)

  துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

 25. உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது

  (a)

  செல்

  (b)

  புரோட்டோப் பிளாசம்

  (c)

  செல்லுலோஸ்

  (d)

  உட்கரு

 26. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

  (a)

  லைசோசோம்

  (b)

  ரைபோசோம்

  (c)

  மைட்டோகாண்ட்ரியா

  (d)

  உட்கரு

 27. கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?

  (a)

  ஒற்றுமை

  (b)

  வேறுபாடு

  (c)

  இரண்டும்

  (d)

  எதுவும் இல்லை

 28. ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

  (a)

  அரிஸ்டாட்டில்

  (b)

  லின்னேயஸ்

  (c)

  விட்டேக்கர்

  (d)

  பிளேட்டோ

 29. புறாவின் இருசொற் பெயர்

  (a)

  ஹோமோ செப்பியன்

  (b)

  ராட்டஸ் ராட்டஸ்

  (c)

  மாஞ்சிபெரா இண்டிகா

  (d)

  கொலம்பா லிவியா

 30. முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?

  (a)

  Ctrl + Z

  (b)

  Ctrl + R

  (c)

  Ctrl + Y

  (d)

  Ctrl + N

 31. Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?

  (a)

  எளிய கூட்டல்

  (b)

  வகுத்தல்

  (c)

  படம் வரைதல்

  (d)

  பெருக்கல்

 32.  5 Marks Problems

  1 x 5 = 5
 33. 250 கி நிறையுள்ள ஒரு திரவம் 1000 cc இடத்தை நிரப்புகிறது. திரவத்தின் அடர்த்தியைக் காண்க.

 34. Part - B

  29 x 2 = 58
 35. எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?

 36. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?

 37. ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட 10 சதுரங்களை கொண்ட பொருளொன்றின் பரப்பளவு என்ன?

 38. அவள் மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள் – இவ்வாக்கியத்தினை இயக்கத்தின் வகைகளுடன் தொடர்புபடுத்தி மாற்றவும்.

 39. கீழ்க்கண்ட சேர்மங்களின் வேதியியல் வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
  1. சோடியம் குளோரைடு
  2. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
  3. கார்பன்டை ஆக்ஸைடு
  4. கால்சியம் ஆக்ஸைடு
  5. சல்பர் டை ஆக்ஸைடு

 40. கீழ்க்கண்ட தனிமங்களின் பெயர்களை எழுதி அவற்றைத் திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும். அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.

 41. கீழ்க்கண்ட தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக.
  சோடியம், பிஸ்மத், வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்.

 42. அணு எண் என்றால் என்ன?

 43. புரோட்டானின் பண்புகள் யாவை?

 44. தாவரத்தில் உள்ள இரு வகையான இனப்பெருக்கத்தை எழுது

 45. முட்கள் என்றால் என்ன?

 46. சுகாதாரம் என்றால் என்ன?

 47. உங்கள் முடியைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் எவ்வாறு பேணுவாய்?

 48. கன்றிப்போன காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?

 49. ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?

 50. ஸ்ரீநகரின்(ஜம்மு&காஷ்மீர்)வெப்பநிலை -40C  மேலும் கொடைக்கானலின் வெப்பநிலை 30C. இவற்றில் எப்பகுதியின் வெப்பநிலை அதிகமாகும். அப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு?

 51. மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?

 52. மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.

 53. மின்கலம் என்பது என்ன?

 54. இரு வெப்ப உமிழ் வினைகளைக் குறிப்பிடுக.

 55. செயற்கை முறையில் பழத்தினை பழுக்க வைத்தல் எந்த வகை மாற்றமாகும்?

 56. ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் எவ்வகை மாற்றமாகும்?

 57. செல் சவ்வு என்ன செய்கிறது?

 58. லைசோஸோம், செல்களின் துப்புரவாளர்கள் என ஏன் அழைக்கப்படுகிறது?

 59. மொனிராவிற்கு இரண்டு உதாரணம் தருக.

 60. இரு சொற்பெயரிடும் முறை என்ப து யாது?

 61. புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.

 62. சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?

 63. Tux Math என்றால் என்ன?

 64. Part - C

  14 x 3 = 42
 65. ஓரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.

 66. பின்வருமாறு மூன்று கோளங்கள் உள்ளன.

  கோளங்கள் (அ) மற்றும் (ஆ) ஒரே பொருளால் செய்யப்பட்டவை. கோளம்-இ வேறு ஒரு பொருளால் செய்யப்பட்டது. கோளங்கள் (அ) மற்றும் (இ) ஒரே ஆரம் கொண்டவை. கோளம்-(ஆ)-இன் ஆரம் கோளம் (அ)-ன் ஆரத்தில் பாதியாக இருக்கும். கோளம் (அ)-ன் அடர்த்தி கோளம் (இ)-ஐ விட இரு மடங்காக உள்ளது. இப்போது, பின்வரும் கேள்விகளுக்கு விடையளி:
  1. கோளங்கள் (அ) மற்றும் (ஆ)-இன் நிறைகளின் விகிதத்தைக் காண்க.
  2. கோளங்கள் (அ) மற்றும் (ஆ)-இன் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
  3. கோளங்கள் (அ) மற்றும் (இ)-இன் நிறைகளின் விகிதத்தைக் காண்க.

 67. சீரான முடுக்கம் என்பது பற்றி நீவிர் கருதுவது யாது?

 68. மூலக்கூறு வரையறு.

 69. கந்தக அமிலத்தின் (H2SO4) அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுக.

 70. சாதாரண உப்பு என்பது யாது? அதில் உள்ள தனிமங்கள் யாவை? சாதாரண உப்பின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக. அத்தனிமங்களின் அணு எண் மற்றும் நிறை எண் மதிப்பு என்ன? அந்த சேர்மத்திலுள்ள அயனிகளை எழுதவும்.

 71. அயல் மகரந்தச் சேரந்தச் சேர்க்கை என்றால் என்ன?

 72. உங்கள் பற்கள் ஆரோக்கியமாக வைக்க நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

 73. மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டைக் குறைக்க நீங்கள் கூறும் ஆலோசனை யாது?

 74. சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள் . நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்

 75. மின்னோட்டம் வரையறு.

 76. கடல் நீரில் இருந்து நீரைப் பெறும் முறை ஒன்றினை உம்மால் கூற முடியுமா?

 77. செல்லிருந்து உயிரினம் வரையிலான வரிசையை சரியாக எழுது?

 78. வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக.

 79. Part - D

  9 x 5 = 45
 80. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.

 81. சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

 82. தனிமங்களின் குறியீடுகளை எழுதக்கூடிய பல்வேறு விதமான வழிமுறைகளை விவரிக்கவும். பொருத்தமான உதாரணங்களைக் கொடுக்கவும்.

 83. மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.

 84. ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?

 85. ஆய்வக வெப்பநிலைமானிக்கும், மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை?

 86. உலர் மின்கலம் ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக

 87. வைரஸ் செல்லற்றவை என்று அழைக்கப்படுகிறது. ஏன்?

 88. ஐந்து உலக வகைப்பாட்டின் வரைபடம் வரைக

*****************************************

Reviews & Comments about 7ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 7th Standard Science Important Questions with Answer key )

Write your Comment