" /> -->

Important Question Part-V

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  18 x 1 = 18
 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  (a)

  நிறை

  (b)

  நேரம்

  (c)

  பரப்பு

  (d)

  நீளம்

 2. பின்வருவனவற்றுள் எது சரி?

  (a)

  1L = 1cc

  (b)

  1L = 10 cc

  (c)

  1L = 100 cc

  (d)

  1L = 1000 cc

 3. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  (a)

  தொலைவு

  (b)

  நேரம்

  (c)

  அடர்த்தி

  (d)

  நீளம் மற்றும் நேரம்

 4. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  (a)

  சுழி

  (b)

  r

  (c)

  2r

  (d)

  r/2

 5. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

  (a)

  ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்

  (b)

  ஈர்பபு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்

  (c)

  பொருளின் உயரத்தினை அதிகரித்தல்

  (d)

  பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்

 6. கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  (a)

  கணித வாய்ப்பாடு

  (b)

  வேதியியல் வாய்ப்பாடு

  (c)

  கணிதக் குறியீடு

  (d)

  வேதியியல் குறியீடு

 7. அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

  (a)

  குளோரின்

  (b)

  சல்பர்

  (c)

  பாதரசம்

  (d)

  வெள்ளி

 8. எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

  (a)

  அலோகம்

  (b)

  உலோகம்

  (c)

  உலோகப்போலிகள்

  (d)

  வாயுக்கள்

 9. அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும். 

  (a)

  அணு

  (b)

  நியூட்ரான்

  (c)

  எலக்ட்ரான்

  (d)

  புரோட்டான்

 10. நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.

  (a)

  புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

  (b)

  நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

  (c)

  புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

  (d)

  நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்

 11. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

  (a)

  ஸ்போர்கள்

  (b)

  துண்டாதல்

  (c)

  மகரந்த சேர்க்கை

  (d)

  மொட்டு விடுதல்

 12. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு

  (a)

  வேர்

  (b)

  தண்டு

  (c)

  இலை

  (d)

  மலர்

 13. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை

  (a)

  காற்று

  (b)

  நீர்

  (c)

  பூச்சிகள்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 14. ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.

  (a)

  சுகாதாரம்

  (b)

  உடல்நலம்

  (c)

  சுத்தம்

  (d)

  செல்வம்

 15. தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லதுதான்.

  (a)

  மகிழ்ச்சி

  (b)

  ஓய்வு

  (c)

  மனம்

  (d)

  சுற்றுச்சூழல்

 16. கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது கீழ்கண்டவற்றுள்எது?

  (a)

  இங்க்ஸ்கேப்

  (b)

  போட்டோ ஸ்டோரி

  (c)

  மெய்நிகர் தொழில் நுட்பம்

  (d)

  அடடோபி இல்லுஸ்ட்ரேட்டர்

 17. படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை

  (a)

  ராஸ்டர்

  (b)

  வெக்டர்

  (c)

  இரண்டும்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 18. சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?

  (a)

  போட்டோஷப்

  (b)

  இல்லுஸ்ட்ரேட்டர்

  (c)

  வெக்டார் வரைகலை

  (d)

  போட்டோ ஸ்டோரி

 19. Section - II

  1 x 5 = 5
 20. 1செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).

 21. Section - III

  15 x 2 = 30
 22. ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.

 23. ஓர் உருளையின் கனஅளவைக் காணும் சூத்திரத்தை எழுதுக.

 24. கீழே தரப்பட்டுள்ள ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவைக் காணவும்: (π = 22/7 எனக் கொள்க)
  அ) 12 செ.மீ. நீளமும் 4 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகம்
  ஆ) 7 செ.மீ ஆரம் கொண்ட வட்டம்
  இ) 6 செ.மீ அடிப்பக்கமும் 8 செ.மீ உயரமும் கொண்ட முக்கோணம்.

 25. அவள் மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள் – இவ்வாக்கியத்தினை இயக்கத்தின் வகைகளுடன் தொடர்புபடுத்தி மாற்றவும்.

 26. கீழ்க்கண்ட மூலக்கூறுகளைத் தனிமங்கள் மற்றும் சேர்மங்களின் மூலக்கூறுகளாக வகைப்படுத்தவும்.

 27. கீழ்க்கண்டவற்றை தக்க உதாரணத்துடன் வரையறு.
  a. தனிமம்
  b. சேர்மம்
  c. உலோகம்
  d. அலோகம்
  e. உலோகம் போலிகள்

 28. கீழ்க்கண்ட தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக.
  சோடியம், பிஸ்மத், வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்.

 29. அணு வரையறுக்கவும்.

 30. நியூட்ரான்கள் ஏன் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன?

 31. வரையறு – மகரந்தச் சேர்க்கை

 32. மகரந்தச் சேரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகள் யாவை?

 33. சுகாதாரம் என்றால் என்ன?

 34. தனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலில் இருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உங்கள் பரிந்துரை யாது?

 35. கன்றிப்போன காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?

 36. ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?

 37. Section - IV

  9 x 3 = 27
 38. வழி அளவுகள் என்றால் என்ன?

 39. பொருட்களின் அடர்த்தியை வரையறு.

 40. ஈர்ப்பு மையம் என்றால் என்ன?

 41. உன்னுடைய வீட்டில், பள்ளியில் பயன்படுத்தக்கூடிய உலோகம், அலோகம் மற்றும் உலோகப்போலிகளைப் பட்டியலிடவும். அதன் பண்புகளை ஒப்பிடவும்.

 42. ஆகாஷ் பகல் நேரங்களில் அவருடைய வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள உலோகத் தாழ்ப்பாளைத் திறக்கச் சிரமமாக உள்ளது என்பதைக் கவனித்தார். ஆனால் அதே தாழ்ப்பாளை இரவு நேரங்களில் திறக்க எளிமையாக உள்ளது என்பதையும் கவனித்தார். தாழ்ப்பாளும், நுழைவுவாயிலும் பகலில் வெயிலில் இருப்பதை ஆகாஷ் உற்றுநோக்கினார்.
  a) வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு கருதுகோளை உருவாக்கு.
  b) சுருக்கமாக நீங்கள் கூறும் கருதுகோளைச் சோதித்துப் பாருங்கள்.

 43. ஒரு தனிமத்தின் அணு எண் 9, மற்றும் அத்தனிமம் 10 நியூட்ரான்களை கொண்டுள்ளது எனில், தனிம ஆவர்த்தன அட்டவணையினைக் கொண்டு அது எத் தனிமம் எனக் கண்டறிக. அதன் நிறை எண் யாது?

 44. இஞ்சி என்பது தண்டு. வேர் அன்று ஏன்?

 45. பின்வருவனவற்றை வேறுபடுத்துக
  தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள்

 46. மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டைக் குறைக்க நீங்கள் கூறும் ஆலோசனை யாது?

 47. Section - V

  5 x 5 = 25
 48. ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?

 49. ஒழுங்கற்ற ஒரு தகட்டின் ஈர்ப்பு மையத்தினைக் காணும் சோதனையை விவரி.

 50. உலோகம் மற்றும் அலோகத்தை ஒப்பிட்டு அதன் பண்புகளைப் பட்டியலிடவும். ஒவ்வொன்றிற்கும் மூன்று உதாரணங்களைக் கொடுக்கவும்.

 51. தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக

 52. ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 7th Standard science Tamil Medium Important Questions 2020 )

Write your Comment