" /> -->

Important Question Part-IV

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  18 x 1 = 18
 1. அடர்த்தியின் SI அலகு

  (a)

  கிகி / மீ2

  (b)

  கிகி / மீ3

  (c)

  கிகி / மீ

  (d)

  கி / மீ3

 2. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

  (a)

  1:2

  (b)

  2:1

  (c)

  4:1

  (d)

  1:4

 3. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  (a)

  தொலைவு

  (b)

  நேரம்

  (c)

  அடர்த்தி

  (d)

  நீளம் மற்றும் நேரம்

 4. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  (a)

  சுழி

  (b)

  r

  (c)

  2r

  (d)

  r/2

 5. ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

  (a)

  சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்

  (b)

  சிறுவனின் இயககம் முடுக்கப்படாத இயக்கமாகும்

  (c)

  சிறுவனின் இயககம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்

  (d)

  சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்

 6. கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

  (a)

  இரும்பு

  (b)

  ஆக்சிஜன்

  (c)

  ஹீலியம்

  (d)

  தண்ணீர்

 7. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?

  (a)

  உலோகம்

  (b)

  அலோகம்

  (c)

  உலோகப்போலிகள்

  (d)

  மந்த வாயுக்கள்

 8. அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

  (a)

  குளோரின்

  (b)

  சல்பர்

  (c)

  பாதரசம்

  (d)

  வெள்ளி

 9. பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.

  (a)

  தனிமம்

  (b)

  அணு

  (c)

  மூலக்கூறு

  (d)

  எலக்ட்ரான்

 10. ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

  (a)

  நியூட்ரான்களின் எண்ணிக்கை

  (b)

  பபுரோட்டான்களின் எண்ணிக்கை

  (c)

  புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை

  (d)

  அணுகளின் எண்ணிக்கை

 11. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

  (a)

  ஸ்போர்கள்

  (b)

  துண்டாதல்

  (c)

  மகரந்த சேர்க்கை

  (d)

  மொட்டு விடுதல்

 12. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு

  (a)

  வேர்

  (b)

  தண்டு

  (c)

  இலை

  (d)

  மலர்

 13. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

  (a)

  வெற்றிலை

  (b)

  மிளகு

  (c)

  இவை இரண்டும்

  (d)

  இவை இரண்டும் அன்று

 14. புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது

  (a)

  இரத்த சோகை

  (b)

  பற்குழிகள்

  (c)

  காசநோய்

  (d)

  நிமோனியா

 15. முதலுதவி என்பதன் நோக்கம்

  (a)

  பணம் சேமிக்க

  (b)

  வடுக்களைத் தடுக்க

  (c)

  மருத்துவப் பராமரிப்பு தடுக்க

  (d)

  வலி நிவாரணம்

 16. அசைவூட்டம் எதற்கு உதாரணம்.

  (a)

  ஒலித் தொடர்பு

  (b)

  காட்சித் தொடர்பு

  (c)

  வெக்டர் தொடர்பு

  (d)

  ராஸ்டர் தொடர்பு

 17. கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது கீழ்கண்டவற்றுள்எது?

  (a)

  இங்க்ஸ்கேப்

  (b)

  போட்டோ ஸ்டோரி

  (c)

  மெய்நிகர் தொழில் நுட்பம்

  (d)

  அடடோபி இல்லுஸ்ட்ரேட்டர்

 18. படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை

  (a)

  ராஸ்டர்

  (b)

  வெக்டர்

  (c)

  இரண்டும்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 19. Section - II

  1 x 5 = 5
 20. ஒரு பள்ளியின் விளையாட்டுத்திடலின் பரிமாணம் 800 மீ × 500 மீ. அத்திடலின் பரப்பைக் காண்க.

 21. Section - III

  15 x 2 = 30
 22. வானியல் பொருள்களின் தொலைவைக் காண உதவும் அலகுகளைக் கூறுக.

 23. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?

 24. ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட 10 சதுரங்களை கொண்ட பொருளொன்றின் பரப்பளவு என்ன?

 25. உனது நண்பன் பின்வரும் வாக்கியத்தினைக் கூறுகிறான் . – முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது. இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.

 26. வேதியியல் வாய்ப்பாடு என்ன என்பதைப் புரிந்து கொண்டாய்? இதன் முக்கியத்துவம் என்ன?

 27. கீழ்க்கண்ட தனிமங்களின் பெயர்களை எழுதி அவற்றைத் திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும். அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.

 28. கீழ்க்கண்ட தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக.
  சோடியம், பிஸ்மத், வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்.

 29. புரோட்டானின் பண்புகள் யாவை?

 30. நியூட்ரான்கள் ஏன் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன?

 31. தாவரத்தில் உள்ள இரு வகையான இனப்பெருக்கத்தை எழுது

 32. வரையறு – மகரந்தச் சேர்க்கை

 33. சுகாதாரம் என்றால் என்ன?

 34. தனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலில் இருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உங்கள் பரிந்துரை யாது?

 35. ரவி "கங்காவிற்குச் சிறிய தீக்காயம் ஏற்பட்டதால், நான் தண்ணீர் விட்டுப் புண்ணைக் கழுவினேன்" என்றார். நீங்கள் அவருடைய கூற்றினை ஏற்றுக் கொள்கிறீகளா இல்லையா? ஏன் என்பதை விவரி?

 36. இருபரிமாண மற்றும் முப்பரிமாணப் படங்கள் பற்றி எழுதுக?

 37. Section - IV

  9 x 3 = 27
 38. வழி அளவுகள் என்றால் என்ன?

 39. பொருட்களின் அடர்த்தியை வரையறு.

 40. பின்வரும் நிகழ்வுகளுக்குத் தொலைவு  – காலம் வரைபடத்தினை வரையவும்.
  அ. மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து.
  ஆ. சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்து.

 41. தனிமங்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்களைக் கொடுக்கவும்.

 42. லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட தனிமங்களின் பெயர்களை எழுதுக.

 43. ஐசோடோன்கள் என்றால் என்ன? ஓர் உதாரணம் தருக.

 44. இஞ்சி என்பது தண்டு. வேர் அன்று ஏன்?

 45. பின்வருவனவற்றை வேறுபடுத்துக
  தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள்

 46. ஒரு நபர் அலுவலகத்தில் தூங்குவது அல்லது வகுப்பறையில் பகல் நேரத்தில் ஒருவர் தூங்குவது ஏன்? இத்தகைய சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? விவரி.

 47. Section - V

  5 x 5 = 25
 48. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.

 49. சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

 50. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் வேறுபடுத்துக.

 51. மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.

 52. ஒரு நபருக்குத் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? முதலுதவிக்கான பல்வேறு சூழ்நிலைகளையும் கூறுங்கள்

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 7th Standard science Tamil Medium Important Questions All Chapter 2019-2020 )

Write your Comment