" /> -->

முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  4 x 2 = 8
 1. உங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.
  (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
  (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
  (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
  (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
  கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
  காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

 2. வழிமுறை: பின்வரும் வழிமுறைகளைப் பார்க்கவும்:
  A. இரண்டு கூற்றுகளும் சரி மற்றும் இரண்டாவது கூற்று முதல் கூற்றிற்கான சரியான விளக்கம்.
  B. இரண்டு கூற்றுகளும் சரி ஆனால் இரண்டாவது கூற்று முதலாம் கூற்றிற்குச் சரியான விளக்கமல்ல.
  C. முதல் கூற்று தவறானது இரண்டாம் கூற்று சரியானது.
  D. இரண்டு கூற்றுகளும் தவறானது.

    முதல் கூற்று இரண்டாம் கூற்று
  1. ஆக்சிஜன் ஒரு சேர்மம் ஆக்சிஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
  2. ஹைட்ரஜன் ஒரு தனிமம் ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது
  3. காற்று ஒரு சேர்மம் ஆகும் காற்றில் கரியமில வாயு உள்ளது
  4. காற்று தனிமங்களின் கலவை நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நியான் போன்றவை காற்றில் உள்ளன
  5. பாதரசம் அறை வெப்பநிலையில் ஒரு திண்மம் பாதரசம் ஒரு அலோகம்
 3. கூற்று: பூவில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையும்  கருவுறுதலும், கனிகளையும், விதைகளையும் உருவாக்கும்.
  காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறும். சூலானது, விதையாக மாறும்.
  அ. கூற்று சரி, காரணம் தவறு
  ஆ. கூற்று தவறு, காரணம் சரி
  இ. கூற்றும் சரி, காரணமும் சரி
  ஈ. கூற்று தவறு, காரணமும் தவறு

 4. உறுதிப்படுத்துதல் (A): சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
  காரணம் (R): உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.
  அ) A மற்றும் R இரண்டும் சரியானவை
  ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை
  இ) A சரி ஆனால் R தவறானவை.
  ஈ) A தவறு ஆனால் R சரியானவை.

 5. 4 x 2 = 8
 6. பரப்பு: மீ2:: கன அளவு:  ______

 7. அளவுகோலின் நீளம் :: மீட்டர் : வானூர்தியின் வேகம் _____

 8. தனிமங்கள்: இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றது :: சேர்மங்கள்: _____

 9. முதல்நிலைத் தீக்காயம்: மேற்புறத்தோல்: இரண்டாம்நிலைத் தீக்காயம் : ________

 10. 2 x 2 = 4
 11. i. பின்வரும் படங்களைப் பார்த்து, அதன் பாகங்களை குறிக்க

  சூலகமுடி
  சூலகம்
  மகரந்தக்கம்பி
  சூல்
  புல்லி
  மகரந்ததாள்
  அல்லி
  சூலகத்தண்டு
  மகரந்ததாள்
  சூற்பை

 12. ii. பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.

    தாவரங்களின் பெயர் மாற்றுருக்கள்
  1. ஆலமரம்  
  2. நெப்பன்தஸ்  
  3. வெங்காயத்தாமரை  
  4. ஸ்டோலன்  
 13. 15 x 2 = 30
 14. ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.

 15. எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?

 16. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?

 17. அ) 3 செ.மீ பக்க அளவுள்ள கனசதுரம்
  ஆ) 3 மீ ஆரமும் 7 மீ உயரமும் கொண்ட உருளை ஆகியவற்றின் கனஅளவினைக் காணவும். (π = 22/7 எனக் கொள்ளவும்).

 18. கீழ்க்கண்ட சேர்மங்களின் வேதியியல் வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
  1. சோடியம் குளோரைடு
  2. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
  3. கார்பன்டை ஆக்ஸைடு
  4. கால்சியம் ஆக்ஸைடு
  5. சல்பர் டை ஆக்ஸைடு

 19. வேதியியல் வாய்ப்பாடு என்ன என்பதைப் புரிந்து கொண்டாய்? இதன் முக்கியத்துவம் என்ன?

 20. அணு எண் என்றால் என்ன?

 21. புரோட்டானின் பண்புகள் யாவை?

 22. மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?

 23. மகரந்தச் சேரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகள் யாவை?

 24. முட்கள் என்றால் என்ன?

 25. சுகாதாரம் என்றால் என்ன?

 26. உங்கள் முடியைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் எவ்வாறு பேணுவாய்?

 27. கன்றிப்போன காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?

 28. ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science Term 1 Two Marks Model Question Paper )

Write your Comment