" /> -->

தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 28
  14 x 2 = 28
 1. நீங்கள் பனிக்கூழ்(ice cream) அல்லது இனிப்புரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில்(ice cream), சாக்லேட் , ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகை களும், இனிப்புரொட்டியில் (cake) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2  வகைகளும் விற்கப்படுகிறது. எனில், நீங்கள் 1 பனிக்கூழோ (ice cream) அல்லது இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ள து?

 2. மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது?

 3. உங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும்(water bottle) உள்ள து எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது  1 கைப்பையை மற்றும் 1 வண்ண  நீர் குவளையும்(water bottle)கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?

 4. பள்ளி மாணவர்களுக்கான நான்கு இலக்க வரிசை எண்ணில், முதல் இலக்கம் A, B, C, D மற்றும் E என்ற ஐந்து எழுத்துக்களில் ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தினைக் கொண்டும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று இலக்கங்கள் ஒவ்வொன்றும் 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டும் அமைந்துள்ளது எனில் வரிசை எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 5. ஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களை கொண்ட  தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு, ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களை  கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 6. ரம்யா தனது வீட்டின் முகப்பறை சுவற்றில் உள்ள அமைப்பில் மிகக்குறைந்த செலவில் வண்ணமிட விரும்புகிறாள். அவள் இரண்டு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு அந்த அமைப்பை வண்ணமிட உதவுங்கள்.

 7. கொடுக்கப்பட்டுள்ள அமைப்பினை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவா று வண்ணமிடுக.

 8. கொடுக்கப்பட்டுள்ள நில வரைபடத்தில் மிகக்குறைந்த அளவு எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு வண்ணமிடுக.

   

 9. சாந்தியிடம் 5 சுடிதார்களும் 4 கவுன்களும் உள்ளன எனில், எத்தனை விதமான வழிகளில் சாந்தி ஒரு சுடிதாரையோ அல்லது ஒரு கவுனையோ அணிவதற்கு வாய்ப்புகள் உள்ளது?

 10. ஒரு மேல்நிலைப் பள்ளியில் பதினோறாம் வகுப்பில் கீழ்வரும் 3 பிரிவுகள் உள்ளன.
  I. அறிவியல் பிரிவு
  I. இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம்
  II. இயற்பியல், வேதியியல் , கணிதம் மற்றும் கணிணி அறிவியல்
  III. இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மனையியல்
  II. கலைப் பிரிவு
  I. கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் வணிக கணிதம்
  II. கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணிணி அறிவியல்
  III. வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகவியல்
  III. தொழில்கல்வி பிரிவு
  I. உயிரியல், கருத்தியல் செய்முறை I மற்றும் செய்முறை II
  II. மனையியல், ஆடை அலங்காரம், கருத்தியல் செய்முறை I மற்றும் செய்முறை II உள்ளது எனில், ஒரு மாணவர் தனக்கு வேண்டியப் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது?

 11. ஒரு தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் ஒவ்வொரு பிரிவிலும் 5 வினாக்கள் வீதம் 3 பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வினாவிற்கு பதிலளிக்க வேண்டுமெனில், அவர்களுக்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 12. 100மீ ஓட்டம் மற்றும் 4 ×100மீ தொடர் ஓட்டம் போன்ற தடகளப் போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியிலும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற கள விளையாட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியிலும் மாணவர்கள் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டுமெனில் விளையாட்டு நாளன்று நடைபெறும் இப்போட்டிகளில் கலந்து கொள்ள ஒரு மாணவருக்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

 13. கொடுக்கப்பட்டுள்ள சுழல் சக்கரத்தினை இருமுறை சுழற்றும் போது கிடைக்கும் எண்களைக் கொண்டு இரண்டிலக்க எண்களை அமைத்தால் எத்தனை விதமான இரண்டிலக்க எண்களை அமைக்க முடியும்?

 14. கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தினை மிகக்குறைந்த அளவு எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இருபகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவா று வண் ணமிடுக.

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் - தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Maths - Information Processing Two Marks Questions )

Write your Comment